Tuesday, January 21, 2025

கடந்த 1975இல், முதலில் TNT- தமிழ் புதிய புலிகள் துவங்கப்பட்டது. பின் விடுதலைப் புலிகள் அமைப்பு என்று மாற்றப் பட்டது.

சில நேரங்களில் நான் என்ன உணர்கிறேன் என்பதை உங்களுக்கு  புரியவைப்பது கடினம், அதனால் நான் பெரும்பாலான நேரங்களில் அமர் விடயத்தில அமைதியாக இருந்துவிடுகிறேன்........ ஆனாலும் சொல் வேண்டியதை இன்றைய நிலையில் சொல்ல வேண்டும். அவ்வளவுதான்.

கடந்த 1975இல், முதலில் TNT- தமிழ் புதிய புலிகள் துவங்கப்பட்டது. பின் விடுதலைப் புலிகள் அமைப்பு என்று மாற்றப் பட்டது.

ஆரம்பத்தில் இருந்த அதன் நிறுவன உறுப்பினர்கள் பெயர்கள் வருமாறு ;

வேலுப்பிள்ளை பிரபாகரன் (வல்வெட்டித் துறை) சபாரத்தினம் சபாலிங்கம் (யாழ்ப்பாணம்) ஆறுமுகம் விவேகானந்தன் (யாழ்ப்பாணம்) சபாரத்தினம் ரத்தினகுமார் (யாழ்ப்பாணம்) கணேசன் அய்யர்  (யாழ்ப்பாணம்) துரையப்பா ராஜலிங்கம் (கொக்குவில்) செல்லையா சம்பாரத்தினம் (யாழ்ப்பாணம்) தம்பி பிள்ளை சந்ததியார் (சங்கானை) அய்யா துரையப்பா பாலரத்தினம் (அளவெட்டி) வேலாயுதம் பிள்ளை திசை வீரசிங்கம் (கொடிக்காமம்) பொன்னுத்துரை சத்தியசீலன் (சுன்னாகம்) நவரத்தினம் நாராயணதாஸ் (யாழ்ப்பாணம்) வைரமுத்து நீர்த்த குமார் (மானிப்பாய்) கனகசபை முதலி சிவராஜா (நல்லூர்) மாவை சேனாதிராஜா (தெல்லிப்பனை) ஆறுமுகம் கிருபாகரன் (அரியாலை) அலோசியஸ் கனகசுந்தரம் (வேம்படி) சுந்தரம் சபாரத்தினம் (திருநெல்வேலி) எஸ் புஷ்பராஜா (மைலிட்டி) பூபால ரத்தினம் நடே சாந்தன் (மட்டக்களப்பு) தம்பிதுரை ஜீவராசா (சாவகச்சேரி) அமதலிங்கம் காண்டீபன் (லண்டன்) காசி ஆனந்தன் (மட்டக்களப்பு (அமிர்த களி) ஞானம் (யாழ்ப்பாணம்) சுப்பிரமணியம் குருகுல சிங்கம் (திருநெல்வேலி) விஸ்வஜோதி ரத்தினம் என்ற இன்பம் (நவாலி) கந்தசாமி ஸ்ரீ கந்தராஜா (கரணவாய் தெற்கு) கே எஸ் ஆனந்தன் (சுன்னாகம்) செல்லையா பாலசிங்கம் (கல்வியங்காடு) அமரசிங்கம் நாகராஜா (நீராவியடி) வேலுப்பிள்ளை சுப்ரமணியம் (யாழ்ப்பாணம்) நடேச பெருமாள் கனகரத்தினம் (பரந்தன்) செல்வராஜ் யோகச்சந்திரன் (வல்வெட்டித் துறை) சிவராமலிங்கம் சந்திரகுமார் (திருநெல்வேலி) ஆனந்தன் (யாழ்ப்பாணம்) உமா மகேஸ்வரன் (தெல்லிப்பளை) போன்றோர் தேடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றவர்கள் . இவர்களின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளைப் போலீசார் பொது இடங்களில் ஒட்டியிருந்தார்கள் என்ற செய்தியைப் படித்தபோது

இலங்கை இனப் பிரச்சனைகளின் போது  இவர்களில் பலரையும் பழ நெடுமாறனும் நானும் சந்தித்து உரையாடிய காலங்கள் மற்றும் பிரபாகரன் சென்னை வந்தபோது நடந்த சம்பவங்கள் யாவற்றையும் இன்றளவிலும் மறக்கத்தான் முடியவில்லை!

அதன் ஆரம்ப நிலை வரலாற்றின் பகுதி…

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
21-1-2025.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்