நாட்டின் தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் “நான் பதவிவில் இருக்கும் போது யாரையேனும் காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துப் பணி நிறைவு செய்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைமை நீதிபதியாக இருப்பது எவ்வளவு கடினமானது மற்றும் பல்வேறு கலாச்சாரங்களும் பண்பாடுகளும் நிறைந்த இந்தியா தேச நல்லிணக்கத்தில் ஒரு உறுதியான நாடாக இருப்பதையும் உணர்ந்த ஒரு பண்புள்ள மனிதர்.
நாட்டின் அரசியல் சட்டங்கள் மாநிலங்களுக்கு மாநிலங்கள் இருக்கக்கூடிய பிரச்சனைகள் மற்றும் பொதுநல வழக்குகள் யாவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய வகையில் அவருக்கு பல நெருக்கடி தரும் சூழல்களும் ஏற்பட்டிருந்தன.
“நீதிபதிகளின் பணி புனித யாத்திரிகர்களுக்குச் சமமானது! தினசரி சேவையாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் தான் நீதிமன்றம் வருகிறோம்!” என்று சொன்னவர்!
பதவியில் இருந்து விலகும் நேரத்தில் “எதிர்ப்பு தான் ஒருவரை சிறந்த மனிதராக உருவாக்கும் எனவே என் எதிரிகளை நான் மதிக்கிறேன்” என்றும் சொன்னார்!
கடந்த நவம்பர் 9ஆம் தேதி மதிப்பிற்குரிய சந்திர சூட் அவர்கள் ஓய்வு பெற்றார.
அவர் அளித்த முக்கிய தீர்ப்புகள்
1-லோக்சபா தேர்தலுக்கு முன் மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து!
இரண்டு- ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு
370 ஐ நீக்கி அதை உறுதி செய்து உத்தரவு!
மூன்று- ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க மறுப்பு! இப்படி பல
எத்தனை இக்கட்டுகள் இருந்தாலும் ஒரு தலைமை நீதிபதி தன் செயலில் எங்கேனும் தவறு இருந்து அது யாரையாவது பாதித்து இருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விலகுவது என்பது எவ்வளவு உயர்ந்த ஒரு மனிதப் பண்பாக இருக்கிறது.
உங்களை நாங்கள் வணங்குகிறோம்! ஓய்வு காலத்தில் நிம்மதியாக இருங்கள் தலைமை நீதிபதி அவர்களே!!
“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல”
No comments:
Post a Comment