Friday, January 3, 2025

விசித்திரமானது இந்த உலகம். இங்கே யாரும் யாரையுமே, எதையுமே புரிஞ்சுக்கறதே இல்லை. அப்படிப் புரிஞ்சுக்காமலும் தெரிஞ்சுக்காமலும் தடதடன்னு ஓடிக்கிட்டிருக்கே வருஷங்கள்.

விசித்திரமானது இந்த உலகம். இங்கே யாரும் யாரையுமே, எதையுமே புரிஞ்சுக்கறதே இல்லை. அப்படிப் புரிஞ்சுக்காமலும் தெரிஞ்சுக்காமலும் தடதடன்னு ஓடிக்கிட்டிருக்கே வருஷங்கள்.

பொய்யாச் சிரிச்சு, பொய்யா வாழ்த்துகள் சொல்லி, பொய்யாப் பழகி, பொய்யாவே வாழ்ந்துட்டுப் போற நிலைமைலதான் நாம நிக்கிறோம்.

உறவுங்கறதையும் நட்புங்கறதையும் ச்சும்மாப் பேச்சுத் துணைக்கு பயன்படுத்திக்கிறோம். விட்டேத்தியான மனோபாவத்தோடயே எல்லார்கிட்டயும் பழகறோம். 

மனசு விட்டுப் பேசுறவங்களைப் புரிஞ்சுக்கறது சுலபம். ஆனா செய்றதே இல்லை. அதேபோல பூடகமாவே பழகறவங்ககிட்ட, ஒரு க்யூரியாசிட்டியோட, உற்சாகமாப் பழகத் துடிக்கிறோம்.

அண்ணனோ தம்பியோ... அக்காவோ தங்கச்சியோ... உடம்பு சரியில்லைனு கஷ்டப்பட்டா, ஒரு நூறு ரூபா கொடுக்கறதை, கணக்குப் பாக்கறோம். ஆனா ஒரு போன் பண்ணி, முந்நூறுக்கும் ஐநூறுக்குமா பீட்ஸா ஆர்டர் பண்ணிச் சாப்பிட்டு, பெருமை பீத்திக்கிறோம்.

13-14 வருஷ ஸ்நேகிதத்துல ஆரம்பிச்சு, நாலு நாள் பழக்கம் வரைக்கும்... எல்லாருமே ஒரு யூஸ் அண்ட் த்ரோ மனநிலைல பழகிட்டிருக்கோம். 

இந்த 2024ஆம் வருஷத்துலேருந்து நான் சிகரெட்டை விடப்போறேன்... தண்ணி அடிக்கறதை விடப்போறேன்னெல்லாம் சபதம் போடுறோம். இதெல்லாம் மேலோட்டமான தவறுகள். உபாதைகள். சிக்கல்கள். நோய்கள். பொய்யற்று வாழ்வதும், உண்மையா இருப்பதும் இணக்கமாப் பழகறதும் மனிதநேயத்தோட உறவாடுறதும் காரியம் ஆகும் வரைக்கும் ஒருவிதமாவும் பிறகு கண்டுக்காமலுமா இருக்கற குணத்துலேருந்து விடுபடுறதுமான நம்மளோட நல்லகுணங்களைக் கொண்டு வாழணும்னு சபதம் எடுத்துக்கிட்டு செயல்பட்டாலே... இங்கே எந்த செய்கூலியும் சேதாரமும் இல்லாம,
 நிம்மதியா வாழ்ந்துடலாம்னு தோணுது. 

யூஸ் அண்ட் த்ரோ மனோபாவக் குப்பைகளை தூர எறிஞ்சிட்டு, உண்மையா, ஒழுக்கமா, நேர்மையா, ஜாலியா, உற்சாகமா, உத்வேகத்தோட, பகிர்ந்து சாப்பிட்டு, பல்லாண்டு வாழ்வோம். சொல்லப் போனா... அதுக்குப் பேர்தான்... வாழ்றதுங்கறதே! எல்லாருக்கும் வணக்கம்.

இந்த 2025ஆம் வருஷம்... எல்லாருக்கும் நல்லதொரு அமைதியையும் ஆனந்தத்தையும் கொடுக்கட்டும்னு என் குருநாதரை நமஸ்கரிச்சு, தென்னாடுடைய சிவனை வேண்டிக்கறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
#happynewyear2025 #HappyNewYear #newyear2025 25

No comments:

Post a Comment

நூல்கள்…தன் நிலையில்…..

இணறைய தினமணி 6-1-2025.