Monday, January 6, 2025

#*திமுக vs சிபிஎம்* *DMK vs CPM*

#*திமுகvsசிபிஎம்*
*DMK vs CPM*

————————-
திமுக கூட்டணிக் கட்சியில் இருக்கும் சிபிஎம் கட்சியின் செயலாளராக இருந்த கே.பாலகிருஷ்ணன் அவர்களின் ஆக்கபூர்வமான  விமர்சனத்தைக் கூட தாங்க முடியாமல் ஒரு தோழமைக் கட்சியினுடைய கருத்து என்று கூட பாராமல் முரசொலியில் அவருக்கு திமுகவினர் எதிர்வினை செய்துள்ளார்கள்.  

சிலர் அறிவற்ற முறையில் அவரின் பதவி போய் விட்டது என எழுதுகிறார்கள். அவருக்கு வயது 72. சிபிஎம் இல் இரு முறை மாநில செயலாளராக இருந்து விட்டார். அங்குள்ள சட்ட திட்ட படி  அவர் பதவியில்  தொடர முடியாது. இவர்கள் போல திமுக ஒரு குடும்ப சொத்து அல்ல சிபிஎம். திமுக போல பதவியில் தொடர்நது இருக்க…..

கட்சிக்காகவும் அதன் கொள்கைக்காகவும் உழைத்தவர்கள் உதவியாய் இருந்த திமுகவின நல்லவர்கள்  எல்லோரையும் புறக்கணித்துவிட்டு 
தன் குடும்பத்திற்கு விசுவாசமாகவும் சாதகமாக இருப்பவர்களுடைய பேச்சை தான் அவர்கள் கேட்பார்கள் அவர்களுக்குத்தான் மகுடங்களை அணிவிப்பார்கள். குறிப்பாகச் சொன்னால் தங்களுடைய பழைய அதிமுகவினர் அடிமைப் பாரம்பரியங்களைத் தான் அவர்கள் காப்பாற்றுவார்கள். 

அதைத் தாங்க முடியாமல் முரசொலியில் நான்கு பக்கத்திற்கு  நேற்று வரை திமுகவை திட்டியவர்கள் இன்று அந்த மனிதர்களை பயன்படுத்திப்  பதில் சொல்லி என்ன ஆகப்போகிறது? இப்படி எல்லாம் நடந்தவற்றுக்குச் சப்பை கட்டுவது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதற்கு ஒப்பாகும்.

ஆளும் அதிகாரத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால்  அதை எடுத்து காட்டுவது தானே கூட்டணி தர்மம். கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் செய்தால் அதை எதற்கு அனுசரிக்க வேண்டும்? என போக்கு. இதுதான் திமுகவினருடைய இயல்பு. 

போதாக்குறைக்கு  சில ஊடகங்கள், சில பத்திரிகைகளை எல்லாம் கையில் வைத்துள்ளீர்கள்.  அவர்களோ ஊமைச் சாம்பிராணிகள்! உங்களைப் பற்றி எழுதும் போது அவர்கள் நிப்பு ஒடிந்து விட்டது என்று சொல்லுவார்கள். எந்த வகையிலும் உங்களைப் பற்றி எதுவும் குறை சொல்லி எழுத மாட்டார்கள். சரி என்று வேறு யாராவது விமர்சித்தால் அவர்களை நான்கு பக்கம் எழுதித் தாக்குவீர்கள். 

இதுபோகச் சிந்துவெளி கூட்டத்தில் கருப்பு ஆடைகள் அணிந்து வருபவர்கள் குறிப்பாக பெண்கள் கருப்பு கலரில் அணிந்து வந்த துப்பட்டாகள் அனைத்தையும் கூடக் கழட்டி வைத்துவிட்டு தான் அரங்கத்திற்கு உள்ளே வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதைவிட என்ன பெரிய வெட்கக்கேடு இருக்கிறது. பெரியார் கொள்கைகள் திராவிட கொள்கைகள் எல்லாவற்றிலும் கருப்பு நிறம்  தானே தனித்த எதிர்ப்பின் திமுக வின் அடையாளமாக இருந்தது. அதை நீக்கச் சொல்லும்  போது இவர்களுடைய கொள்கைகள்  என்னவாகிறது என்று கூட யோசிக்க மாட்டார்களா? இஸ்லாமிய மாணவியின் ஹிஜாப்பை கழட்ட சொல்வது பாசிசம் என்றால்.!!!
 மாணவியின் துப்பட்டாவை கழட்ட சொல்வது என்ன பாயாசமா? இன்று இருக்கும் பலருக்கு திமுகவின் கொள்கைகளும் தெரியாது வரலாறும் தெரியாது!  ஒரு காலத்தில் சீர்திருத்தம் பேசிய கருத்துக்கள் என்னவாயிற்று? இப்படியான கூட்டம்தான் திராவிட முன்னேற்ற கழகத்தில் இன்று இருக்கிறார்கள் என்றால் பெரும் காலப் பிசகு நேர்ந்து விட்டது என்று தானே சொல்ல வேண்டும் வைகோ எப்பொழுதும் கருப்பு துண்டு தான் அணிந்து வருவார் அவரையும் உள்ளே அனுமதிக்க மாட்டீர்களா.?

மோடிக்கு எதிராக GO BACK MODI என்று கறுப்பு பலூன் விட்டவர்கள், இன்று கறுப்பு துப்பட்டாவைக் கண்டே அலறுவதுதான் விதியின் விளையாட்டு!

இது மாதிரியான உங்களின் ஏதோச்சதிகாரப் போக்கை பார்க்கும் பொழுது இந்திராகாந்தி கொண்டு வந்த அவசர காலச் சட்டம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. எல்லாம் முடிவுக்கு வரவேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது. எப்பொழுதும் உயரத்திலேயே மிதந்து கொண்டிருக்க முடியாது என்பதை ஞாபகம் கொள்ள வேண்டும். இதுதான் நியூட்டன் தியரி! மேலே சென்றால் கீழேயும் கீழே விழுந்தால் மேலேயும் காட்சிகள் மாறும்!

இன்னொரு முக்கியமான விஷயம் நேற்று கனிமொழி அவர்களுக்கு அடித்த போஸ்டரில் உள்ள வாசகங்களை பார்க்கும்போது திமுக கட்சிக்குள் எவ்வளவு அதிகாரப் போட்டி நிலவுகிறது என்பதும் வெட்ட வெளிச்சம் ஆகிறது! உழைத்தவர்களையும்  கொள்கை பற்றுள்ள நல்லவர்களையும் ஒதுக்கி ஜால்ராக்களை வைத்தால் இயற்கை அளிக்கும் தண்டனைகளையும் அனுபவித்து தான் ஆக வேண்டும்!மூலங்களைக் கைவிட்டு போலிகளை கொண்டாடினால் எதுவும் நடக்கும்!
#dmkfails 
#DMK_Against_Tamils 
#cpm
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
6-1-2025,


No comments:

Post a Comment

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம்

#அரிட்டாப்பட்டியில்டங்ஸ்டன்சுரங்கம்  ———————————————————- மதுரை மாவட்டத்தில் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில் போராட்டங்கள் நட...