*முல்லைப் பெரியாறு ‘ரூல் கர்வ்'*
————————————
*முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்காததற்கு 'ரூல் கர்வ்' என்ற விதி தான் காரணம். இந்த விதியின் காரணமாக கடைமடை சிவகங்கை,இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையில் விவசாயம் பாதிப்பு*.
*ரூல் கர்வ் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்*
*முல்லை பெரியாறு- கேரளவின் கபடமான பொய் பிரசாரம்*
————————————
முல்லை பெரியாறு அணை மீது, கேரள மக்கள் மிகப்பெரிய அச்சம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, 30க்கும் மேற்பட்ட இடங்களில் அவசர கால முகாம்களை கேரள அரசு அமைத்துள்ளது.
அணை உபரி நீர் மட்டு மல்லாது, கேரள வனப்பகுதிகளில் இருந்து இணையும், 18 துணை ஆறுகளான தடியம்பாடு, கீரித் தோடு, பனங்குடி உட்பட 18 சிறு ஆறுகளின் தண்ணீரும் கலந்து, இடுக்கி அணைக்கு செல்கிறது.
ஆனால், பெரியாறு அணையில் இருந்து மட்டுமே தண்ணீர் வருவதாக, கேரள மக்களை நம்ப வைக்கின்றனர்.
இடுக்கி அணையில் இருந்து வெளியேறும் ஆற்றை, பெரியாறு என அழைத்து, பெரியாறு அணைக்கான அச்சத்தை கேரள மக்களிடம் அங்குள்ள அரசியல்வாதிகள் முல்லை பெரியாறு அணை பலமாக இல்லை என கபடமாக பொய் பிரசாரத்தின் மூலம் பரப்புகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
#ksrpost
8-8-2021.
No comments:
Post a Comment