Thursday, August 11, 2022

*இந்து மகா சமுத்திரம்-சீனா-வரலாறு*

*இந்து மகா சமுத்திரம்-சீனா-வரலாறு* 
————————————
வரலாற்றில், சீனாவில் இருந்து  1407 ஆண்டில் தான் முதல் முறையாக இந்து மகா சமுத்திர பிராந்தியத்தின் மீது சீனாவின் ஈர்ப்பு ஏற்பட்டு இருந்துள்ளது. கடல்தளபதி ஷூங்கி பல்வேறு தடவைகள் இந்துசமுத்திர பிராந்தியத்தில் பயணங்களை மேற்கொண்டு இருந்து இருக்கிறார். 

33 வருடங்களில் அவர் இந்துசமுத்திர பிராந்தியத்தில் கால இடைவெளியில் பல்வேறு பிரயாணங்களை மேற்கொண்டு இருந்தார் என்றும் இன்றைய கேரள மாநிலத்தில் கள்ளிக்கோட்டையில் அவர் இறந்து போனார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் சுட்டிக் காட்டி நிற்கின்றது. 

அன்றைய காலகட்டத்தின பின்னர் இந்துசமுத்திர பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்ற இலட்சிய வெறியுடன் 1978களின் பின்னர் திட்டமிட்டு அங்குலம் அங்குலமாக சீனா முன்னேறி வருகிறது. 

சீனாவின் வரைபடம் கி மு 2  ஆம் நூற்றாண்டில் இருந்து  நில அளவு குறையாமல் அதிகரித்தே வருகிறது. 

15  ஆம் நூற்றாண்டு காலத்தில் சீனா இந்தியாவை ஆக்கிரமிப்பு செய்யவில்லை.

மாறாக 21 ஆம் நூற்றாண்டில் சீனா இந்திய நிலப்பரப்பை கபளீகரம் செய்தே வருகின்றது. 

இந்த வரலாற்று பார்வையில் இருந்து தான் இப்போது நிகழ்கின்ற சம்பவங்களை உற்று நோக்கி எதிர்கால இந்தியா எவ்வாறு இருக்கும் என அரச அறிவியலூடாக முடிவுகளை இந்துசமுத்திர பிராந்தியத்தில் முன்னுரிமை பெற்று உள்ள இந்தியா மறுமுனையில் சொல்வது என்றால் அண்ணளவாக 7560 கிமீ நீளமான கடலினை கொண்டுள்ள இந்தியா தனது பெறுமதியை உணர்ந்து தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும். 

ஈழத்தமிழர் தொடர்பில் ஈழத்தமிழர்களின் விடயத்திலும் சோழர்களின் கொள்கையை பின்பற்றி செல்வதே சிறந்தது. 

சோழர்கள் இலங்கையில் சிங்கள அரசுக்களை தனியாகவும் ஈழத்தமிழர்கள் அரசை தனியாகவும் கையாண்டனர்.

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...