Wednesday, September 28, 2022

*இந்த தேர்தலுக்கும் ஓட்டு காசுக்கு விற்பனை. வாழ்க தமிழகம்… இதையும் மெச்ச வேண்டும்*

*இந்த தேர்தலுக்கும் ஓட்டு காசுக்கு விற்பனை. வாழ்க தமிழகம்… இதையும் மெச்ச வேண்டும்*
செய்தித்தாள் ஒன்றில் பார்த்த செய்தி ஒன்று என்னைத் திடுக்கிட வைத்தது. நமது ‘மாபெரும்’ ஜனநாயகத்தில் தேர்தலின்போது ஓட்டுக்காகப் பணம் கொடுப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.
அந்தப் பழக்கம் படிப்படியாகப் பரவி,  ஊழியர்கள் சங்கத் தேர்தலிலும் கூட தொற்றிக் கொண்டதுதான் அதிர்ச்சி ஊட்டும் செய்தி.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தலைமைச் செயலக சங்கம் அங்கு செயல்படுகிறது. கடந்த 23 -ஆம் தேதி அந்த சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது.
அப்போது தேர்தலில் போட்டியிட்ட ஓர் அணியினர், ஊழியர் ஒவ்வொருவருக்கும் ஓட்டுக்காக ரூ.500 கொடுத்ததாகக் கூறப்படுகிறது.  படிக்காத பாமர மக்களுக்கு ஓட்டுக்காகப் பணம் கொடுப்பதும், அறியாமை  உள்ள மக்கள் அதை வாங்கிக் கொண்டு வாக்களிப்பதும் கொடுமை என்றால், நன்கு படித்த, அரசின் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓட்டுக்காகப் பணம் கொடுப்பதும் அதை அவர்கள் வாங்கிக் கொள்வதையும் என்ன சொல்வது? கொடுமையிலும் கொடுமை அல்லவா? இப்படியே போனால் உண்மையான ஜனநாயகமுறை எங்கே என்று தேடும்நிலை ஏற்பட்டுவிடும் போலிருக்கிறது!
#ksrpost
28-9-2022.

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh