Thursday, September 29, 2022

*காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் தேர்தல்!*

*காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் தேர்தல்!*
 
காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சற்றுப் பின்னோக்கி வரலாற்றுரீதியாகப் பார்த்தால், 1938 – இல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நேதாஜியும், பி.பட்டாபி சீதாராமய்யாவும் போட்டியிட்டனர். நேதாஜி வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக 1950 – இல் புருஷோத்தம் தாஸ் தாண்டன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெ.பி.கிருபளானியும் போட்டியி்ட்டனர்.
மூன்றாவது முறையாக 1997 – இல் சீதாராம் கேசரி, சரத் பவார், ராஜேஷ் பைலட் என்று மூவரும் போட்டியிட்டபோது, சீதாராம் கேசரி வெற்றி பெற்றார்.
இறுதியாக 2000 – இல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியாவும், ஜிஜேந்திர பிரசாதாவும் போட்டியிட்டனர். சோனியா வெற்றி பெற்றார். இதுதான் கடைசித் தேர்தல்.
136 ஆண்டு கால காங்கிரஸ் வரலாற்றில் நான்கு தேர்தல்கள்தாம் நடந்து உள்ளன.
முதல் தேர்தலில் வெற்றி பெற்ற நேதாஜியை தலைவராகவே செயல்பட விடாமல் ஆக்கியதெல்லாம் வரலாற்றின் பக்கங்களில் உள்ளன.

#KSRpost
29-9-2022.

No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...