Saturday, September 10, 2022

எதையும் மறைக்காமல், பிழையில்லாமல் கொண்டு வருவதுதான் ஆவணப்படம்.

பொன்னியின் செல்வன் பிழையாக திரைப்படமாக  வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் கண்ணில் படுகின்றன. ஆவணப்படங்களோ திரைப்படங்களோ சரித்திர மாறாமல் இருக்க வேண்டும். 

ஆவணப்படங்கள் எடுப்பது ஆவணமாக இருத்தல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட நபர் ஆவணப்படத்தை எடுக்கும்போது அவருக்கு உதவியவர்கள் முக்கிய நிகழ்வுகளில் அவரோடு இருந்தவர்கள் அவர் கையறுநிலையில் கண்ணீர் விட்ட பொழுது கரம் கொடுத்தவர்களை மறந்துவிட்டு ஆவணப்படமாக எடுத்தால் அது ஆவணப்படமல்ல. அது அவர்களுடைய போலித்தனத்தை காட்டுமே ஒழிய அவருடைய மனசாட்சியாக இருக்காது என்பதை புரிந்துகொள்ளுதல் வேண்டும். ஆவணம் இன்றைக்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய படம். நிகழ்வுகளையோ நடந்தவற்றையோ திரித்து விட முடியாது. ஆவணப் படங்கள் எடுக்கும் பொழுது அதில் நேர்மையும் வேண்டும். உண்மை என்ன என்ற உண்மைத்தன்மையும் நடந்தது என்ன என்பதையும்  எதையும் மறைக்காமல்,  பிழையில்லாமல் கொண்டு வருவதுதான் ஆவணப்படம்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...