Tuesday, September 27, 2022

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 1986 -இல் என்.டி.ஆர்.ராமாராவ் முன்முயற்சியால் ஒரு மருத்துவப் பல்கலைக்கழகம் ‘யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ்’

*

 என்ற பெயரில் உருவாக்கப்பட்டது*. அவருடைய மறைவுக்குப் பிறகு அந்த பல்கலைக்கழகத்தின் பெயர் ‘டாக்டர் என்.டி.ஆர். யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்ச் சயின்சஸ்’ என்று மாற்றப்பட்டது.
அந்தப் பெயரை தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக உள்ள ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி அரசு, (தன் தந்தை பெயரில் ஒய். ராஜசேகர ரெட்டி) ‘ஒய்எஸ்ஆர் யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ்’ என்று மாற்றம் செய்துள்ளது.
“என் தந்தை எம்பிபிஎஸ்  படித்தவர். 2004 மற்றும் 2009 காலகட்டத்தில் மாநிலத்தில் முதல்வராக இருந்து சுகாதாரம் தொடர்பான திட்டங்களைத் தொடங்கி மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவியவர். இப்படியான தகுதிகொண்டவருக்கு அவருக்கான அங்கீகாரத்தை கொடுக்கக் கூடாதா? ” என்று பெயர் மாற்றியதற்கு நியாயம் கற்பித்திருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி.  இதற்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சியனர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். என்.டி.ஆரின் பேரன், நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆனால் பெயர் மாற்றியதற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளார் என்.டி.ஆரின் மனைவி லட்சுமி பார்வதி. “கிருஷ்ணா மாவட்டத்தின் சில பகுதிகளைப் பிரித்து புதிய மாவட்டமாக உருவாக்கியபோது அதற்கு என்.டி.ஆர். பெயரை வைத்தவர்தான் ஜெகன்மோகன்ரெட்டி. எனவே பெயர் மாற்றியதற்காக அவரைக் குறை சொல்வதில் நியாயம் இல்லை” என்று சொல்லியிருக்கிறார். தனது கணவரின் பெயரில் இருந்த பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றத்தை ஆதரிக்கும் இப்படியொரு மனைவி! 
புதிய மருத்துவமனை தொடங்கும்போது, அரசின் புதிய நிறுவனங்களைத் தொடங்கும்போது தனது தந்தையின் பெயரை ஜெகன்மோகன் ரெட்டி அதற்கு வைத்திருக்கலாம்! ஏற்கெனவே அந்த பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்த என்டிஆரின் பெயரை மாற்றியது என்ன நியாயமோ? தெரியவில்லை. ஜெகன்மோகன் ரெட்டிதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இது கண்ணியம் அற்ற செயல்.One thing I feel from my heart! The name should not have been changed .. a star who really made a difference to all Telugu speaking people.
(Photo-NTR as chancellor of health University inauguration in 1986, at Vijayawada.)
#KSRpost
27-9-2022

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...