Monday, September 19, 2022

பிரிட்டிஷ் நாடாளுமன்றம் - வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் –இரண்டாம் எலிசபெத் திமுக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட மாநாடு

பிரிட்டிஷ் நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் இரண்டாம் எலிசபெத் 





















( Photo- a Private Burial took place in The King George VI Memorial Chapel at Windsor.

The Queen will be Laid to Rest with her late husband The Duke of Edinburgh, alongside her father King George VI, mother Queen Elizabeth The Queen Mother and sister Princess Margaret)





























































திமுக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட மாநாடு ——————————————————- 







மறைந்த எலிசபெத் ராணி உடலை பிரிட்டன் நாடாளுமன்ற கட்டட வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் கடந்த நான்கு நாட்களாக மரியாதை செலுத்துவதற்காக வைத்திருக்கின்றனர். இந்தியக் குடியரசுத்தலைவர்அமெரிக்க குடியரசுத்தலைவர் உலக நாட்டுத் தலைவர்கள் எல்லாரும் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பன்னாட்டு தலைவர்கள்பிரபலங்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்ராணுவ மரியாதையுடன் லண்டனில் முக்கிய சாலைகளின் வழியாக இரண்டாம் எலிசபெத் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுராணியின் இறுதிச் சடங்கு மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பிரிட்டன் உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 3.30









*கருவாலி மரத்தால் செய்யப்பட்டு...-ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி-30 வருடங்களுக்கு முன்னரே தேர்ந்தெடுத்த ராணி*

*திருமணம்,முடிசூட்டுவிழா நடந்த அதே இடத்தில் ராணியின் இறுதி சடங்கு..இறுதியாக அபரணங்களோடு நுழையும் ராணி*


இந்தப் படத்தில் உள்ள லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்குநான் மூன்று முறை சென்றுள்ளேன்.

முதலில் இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தைப் பற்றி சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடுகிறேன்.  




இந்த அரங்கத்தில் மறைந்த பிரிட்டிஷ் அரசர்கள்ராணிகள்,பிரதமர்கள் உடலை மரியாதை செலுத்துவதற்காகவைப்பார்கள். பிரதமர் வின்ஸ்ட்ன் சர்ச்சில் உடல் வைத்த இடத்தில் பித்தளை தகடால் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் உடல் வைத் இடம்’ என்று எழுதப்பட்டுள்ளது.  




எலிசபெத் என்று பெயர் பெற்ற  ராணி எலிசபெத் -1 (1558 -1603வரலாற்றுப் புகழ் பெற்ற ஸ்பேனிஷ் ஆர்மடாவைத் தோற்கடித்தவர். தனது 44 ண்டு கால ட்சிக் காலத்தில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை மேடை ஏற்றியவர்.  

மூன்றாம் வில்லியம் (1688-1702) இவர்தான் நாடளுமன்ற அரசு ஆட்சி அமைப்பைப் பிரிட்டனுக்குக் கொண்டு வந்தவர். 

நான்காம் வில்லியம் (1830 -1837பிரிட்டானிய பேரரசின் அனைத்துப் பகுதிகளிலும் அடிமைமுறையை முற்றிலும்ஒழித்தவர். இவருடைய காலத்தில் 1832 இல் மகாசீர்திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது.




ஏழாவது எட்வர்ட் (1901 -1910சல்லாப வாழ்க்கையில் மிதந்தவர். இவர் மீது பல விமர்சனங்கள் உண்டு.

ஐந்தாம் ஜார்ஜ் (1910-1936அஞ்சல் அட்டைதபால்துறையை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர். அரச வம்சப் பேரை வின்ஸ்டர் என்று மாற்றியவர். 

ஆறாம் ஜார்ஜ் (1936 -1952) இரண்டாவது உலகப்போரில் ஆரம்பகட்டத்தில் காரணமாக இருந்தவர். உலகமாற்றத்துக்கான புவியரசியல் குறித்துப் பேசியவர்,செரிமோனியல் மோனார்ச் என்று அவரை அழைப்பார்கள். 

இப்படி பல அரசர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்த பட்டியல் உண்டு. அவர்கள் மரணம் அடைந்தால் பிரிட்டிஷ்மக்கள் அஞ்சலி செலுத்த அவர்களுடைய உடலைவெஸ்ட்மினிஸ்டர் அரங்கத்தில் வைப்பது வழக்கம். அது ஒரு மரபும் கூட. இதில் என்ன கவனிக்க வேண்டியது என்னவென்றால்,  பிரிட்டனின் சம்பிரதாயங்கள், மரபுகள்,மன்னராட்சி முறை என்ற பண்டைய நடைமுறைகளை இன்றைக்கும் அங்குள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆங்கிலத்தில் செரிமோனியல்கன்சர்வேட்டிவ் தளங்களை பிரிட்டன் மக்கள் இன்றைக்கும் விரும்புகின்றனர். எனவே எழுதப்பட்ட அரசியல்சாசனம் பிரிட்டனில் இல்லை.அதேபோல இஸ்ரேலுக்கும்நியூஸ்லாண்டுக்கும் கூட அரசியல்சாசன சட்டம் கிடையாது.  







பிரிட்டிஷ் ராணியோ அரசரோகாமன்வெல்த் நாடுகளின் தலைவர்களாகக் கருதப்படுகிறார்கள். அப்படி இரண்டாம் எலிசபெத் ராணியை ஏற்றுக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாநியூஸ்லாண்ட்ஜமைக்கா கனடா ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.



 

திமுக- முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட மாநாடு

  ஒருமுறை தமிழக முதல்வர் தளபதி அவர்களை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். 

தமிழ் ஈழ ஆதரவு அமைப்பான டெசோ மாநாடு 2012 ஆகஸ்டில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது. அதன்பின் இந்த மாநாட்டின் தீர்மானங்களை நியூயார்க்கின் ஐ.நா.மன்றத்திலும்ஜெனீவா மனித உரிமை ஆணையத்திலும் தலைவர் கலைஞர் கையொப்பமிட்ட கடிதங்களுடன் வழங்கப்பட்டன. இதன் பின்புலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் டெசோ மாநாடு நடந்தது.

அந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மறைந்த தா.பாண்டியன்டி.ராஜாபாமக தலைவர் ஜி.கே.மணிபுதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் போன்றவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.




முதல்நாள் மாநாட்டில் முதல்வர் தளபதி மு.கஸ்டாலின் உரையற்றிவிட்டுச் சென்றார். இரண்டு நாட்களும் மாநாட்டில் கலந்து கொண்டு வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற வளாகத்தில் நான் டெசோ மாநாட்டில் திமுக சார்பில் உரையாற்றியதும் உண்டு.

----------------------


https://www.bbc.com/news/uk-62875864


https://twitter.com/ksradhakrish/status/1571831843439398913?s=46&t=03neF5aP6jvRniWGWLZH9A



https://twitter.com/ksradhakrish/status/1571834502867226625?s=46&t=03neF5aP6jvRniWGWLZH9A



https://twitter.com/ksradhakrish/status/1571836761621528577?s=46&t=03neF5aP6jvRniWGWLZH9A


https://twitter.com/ksradhakrish/status/1571887590554619904?s=46&t=03neF5aP6jvRniWGWLZH9A


https://twitter.com/ksradhakrish/status/1572889355047542784?s=12&t=68cUDjVj6qfFbxtKabCutg


Queen Elizabeth 

United Kingdom 

UK Parliament 

British monarch 

Westiminister




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...