#* வஉசி-VOC
நோயும், வறுமையும் இறுதி நாட்கள் சுதேசி கனவு கண்ட வ.உ.சியின் துயர பக்கங்கள்! செல்வ செழிப்பாக பிறந்து*, *சென்னையில் அரிசி,எண்ணெய்,மண்ணெண்ணெய்,பிண்ணாக்கு வியாபாரம் செய்தும் வறுமை..*
*கேவில்பட்டியில் கிழிந்த கோட்டுடன் வக்கீல் என பொது வாழ்வில் தியாகச்சுடர்களின் நிலை.*
*கப்பலோட்டிய தமிழர் வ.உ. சி யின் 151 வது பிறந்த தினம் செப்.5ல் கொண்டாடப்படுகிறது. அவர் ஊரான ஓட்டப்பிடாரத்தில் அவரது இல்லம் இருண்டு கிடக்கிறது. வஉசி வண்டனம் கிராமத்தில் பூர்விக வீடு இடிந்து வேலி கருவேளை முள் மரங்கள் புதராக உள்ளது. இதை 2019 சமூக ஊடகங்களில் பதிவு செய்தேன்*.
*உத்தமர்கள் காந்தி, வஉசி இன்று தேர்தல் களத்தில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது. ஆனால் காந்தி ரூபா நோட்டு ஜெயிக்கும். இதுதான் இன்றைய நிலை;யாரும் காந்தி படம் போட்ட ரூபா நோட் அதுவும் 500கள், 2000 மட்டுமே வைத்து வெற்றியை வாங்கலாம். வியாபார அரசியல்.வஉசியின் தியாக அரசியல் சிலருக்கு வழி நடத்தும் பாலபாடம். வஉசி புகழ் வாழ்க*.
#KSR post
5-9-2022.
No comments:
Post a Comment