பெரும்பாலும் விருந்தினர்கள் தலைநகரத்திலேயே குடியிருப்பதால் அவர்களைத் தலைநகரத்தில் அவர்கள் ஆற்றும் பணிகளால் மட்டுமே அறிந்துவருகிறோம். ஆனால் அவர்களுக்கும் வேர்கள் உண்டு அவற்றிலிருந்து கிளைத்தெழுந்த பல்வேறு கிளைகள் உண்டு. இன்றைய விருந்தினர்களை நான் அவர்களது வேர்களோடு சேர்த்துச் சற்று நேரமெடுத்து அறிமுகம் செய்விப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
ஓர் இராணுவ வீரனுக்கு இருக்கவேண்டியதை விட அதிகமான மனவலிமையும் உடல்வலிமையும் ஒரு விவசாயிக்குத் தேவை. அதிலும் வானம் பார்த்த கரிசல்பூமி விவசாயிக்கு அளவற்ற நெஞ்சுரம் தேவை. அதனாலேயே இயல்பில் சற்றே சினங்கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அப்படியொருவர். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி காலத்தில் இளம் வயதில் விவசாய சங்கத்தின் மாணவர் அமைப்பில் களப்பணியாற்றியவர். ஒரு சூழலில் களபலி ஆகவும் துணிந்தவர். இன்றும் பல ஏக்கர் நிலத்தில் விவசாயத்தை விட்டுவிட்டுக்கூட அல்லாமல் விடாமல் செய்துகொண்டிருப்பவர். புன்செய் புண்ணாக்கினாலும் கரிசலைக் கரும்பாய்க் கருதுபவர். தன்னை வருத்தினாலும் பருத்தி போடுவதை மட்டும் நிறுத்தாதவர். விழுந்து விழுந்து எழுந்தாலும் உளுந்து விதைக்கத் தவறாதவர். உழவர் வாழ்வியலையே முதன்மையாகப் பதிவுசெய்யும் கதைசொல்லி இதழாசிரியர். வழக்கறிஞராகவும் அரசியல்வாதியாகவும்கூட இருக்கிறார். உழவர் திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள்.
- Venkada Prakash Puthiya Thalaimurai 15/1/2015
No comments:
Post a Comment