Thursday, January 7, 2016

கரிசல் இலக்கிய அன்பர்களின் பார்வைக்கு....

நேற்றைய தினமணியில் (6.1.2016) 'கந்தக பூமியில் கரிசல் இலக்கியம்' என்ற என்னுடைய நடுப்பக்க கட்டுரை வெளியானது.  கரிசல் இலக்கியப் படைப்பாளிகளின் பெயர்களை முழுமையாக இடம்பெறச் செய்ய முடியவில்லை.  அந்தப் பத்தியிலேயே இது முழுமையான பட்டியல் இல்லை என்றும் தெரிவித்திருந்தேன்.  குறிப்பிட்ட பத்திகளுக்குள் இந்தக் கட்டுரை அமையவேண்டும்.  சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம்.  அது திட்டமிட்டதல்ல. இதைப் படித்துவிட்டு கி.ரா. அவர்கள் கரிசல் இலக்கியத்தில் படைப்பாளிகள் குறித்து விரிவான நூல் ஒன்றை தொகுத்து கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே எட்டையபுரத்து இளசை அருணா அவர்கள் கரிசல் இலக்கிய படைப்பாளிகளை தொகுத்து நூல் வடிவில் இரண்டு தொகுதிகளாக 2008 கால கட்டத்தில் வெளியிட்டர். இதை மதுரை மீனாட்சி பதிப்பகம் வெளியிட்டது.  இன்றைய சூழலுக்கு இறுதிப்படுத்தும் வகையில் கரிசல் இலக்கிய படைப்பாளிகள் குறித்து தொகுப்புகளை கதைசொல்லி, பொதிகை-பொருனை-கரிசல் சார்பில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அருள்கூர்ந்து கரிசல் படைப்பாளிகள் தங்களின் முழு குறிப்புகளை எனக்கோ, அல்லது கழனியூரானுக்கோ அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தோடு நிமிர வைக்கும் நெல்லையின் அடையாளமாக திகழும் தாமிரபரணி ஆற்றின் ஓட்டத்தையும் அந்த நதிக்கரையின் தீரா வாசத்தையும், 'நடந்தாய் வாழி காவேரி'யைப் போன்று தொகுத்து நூலாக கொண்டுவரவேண்டிய பொறுப்பும் கடமையும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

அன்புடன்
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...