Friday, January 29, 2016

பிளாஸ்டிக் அழிக்கப்படவேண்டும்


சென்னை பெருவெள்ள பாதிப்புக்கு நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி குப்பையாக சேர்ந்ததும் ஒரு காரணம்.  மழைத் தண்ணீரை வடிய விடாமல் கால்வாய்களில் குப்பை குப்பையாக பிளாஸ்டிக் பைகளும், அடைத்துக்கொண்டதும்தான் காரணம்.  இதுவரை லட்சக்கணக்கான பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.  பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலை மட்டும் பாதிக்காமல் உடல் நலத்திற்கும் கேடு.  பிளாஸ்டிக் மண்ணில் மக்குவதில்லை.  தண்ணீரையும் மண்ணில் சேர்க்கவிடாமல் தடுத்துவிடுகின்றன.  குப்பைகளாக குவிகின்ற பிளாஸ்டிக் பைகள் மக்காமல் குப்பைகளாக சேர்ந்து மண்ணின் மேல் அப்படியே உள்ளதால் மழை நீர் தரைக்கு கீழே இறங்குவதில்லை. 

இப்போது உணவு விடுதியில் கூட காபி, பால், சாதம், சாம்பார், குருமா பிளாஸ்டிக் பைகளிலும், பிளாஸ்டிக் டப்பாக்களிலும் சூடாக கட்டித் தருகின்றனர்.  பிளாஸ்டிக்கை எரித்தாலோ, சூடாக்கினாலோ, டை-ஆக்சிஜன் என்ற தீய வாயு வெளிவருகின்றது.  பிளாஸ்டிக்கில் கட்டப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்டால் இந்த டை-ஆக்சிஜன் உடம்பில் சேர்ந்து பல நோய்களை உருவாக்குகின்றன. இதனால் புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய்களும் வருகின்றன.  இப்படி பிளாஸ்டிக் அரக்கனை நடைமுறையில் கட்டிக்கொண்டு துன்பங்களை விலைக்கு வாங்குகின்றோமோ என்ற விழிப்புணர்வு கூட வரவில்லையே என்பதுதான் நமது ஆதங்கம். ஒரு காலத்தில் பொருட்களை துணிப் பையில் அல்லது காகித பையில் வாங்குவதுண்டு. மூக்குப் பொடி, புகையிலை போன்ற பொருட்கள் கூட வாழை மட்டையில் கட்டி விற்பது உண்டு. இந்த முறை அறவே இப்போது இல்லாமல் போய்விட்டது. 


இப்படியாக எல்லா வகையிலும் மானிடத்திற்கு அபாயகரமாக உள்ள பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டாமா?  இதற்கும் தடை செய்யாமல் சில ஆதிக்க சக்திகளும் தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள நாட்டில் நடமாடுகிறார்கள்.

இனிமேலாவது பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துவோம். பிளாஸ்டிக்கை அகற்றுவோம் என்ற உறுதிமொழி எடுப்போம்.  நாட்டின் நலன் கருதி இந்த பிரச்சினையில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டாயம்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...