Saturday, January 16, 2016

//  Pongalur Era Manikandan  உழவர் திருநாளில் புதிய தலைமுறையில் நேற்று நடைபெற்ற மக்கள் மேடையில் உழவர்களின் குரலை ஓங்கி ஒலிக்க செய்த அண்ணன் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் கோபமும்,ஆக்ரோஷமும் விவசாயிகள் மீண்டும் திருப்பி அடிப்பார்கள் என்று வரலாற்றைத் திருப்பி விட்டு இருக்கிறார்.
விவசாயிகளுக்காக இளைஞர்கள் உழைக்கிறார்கள்.போராடுகிறார்கள் என்று மிகவும் எளியோனாகிய அடியேன் பெயரையும் குறிப்பிட்டு பதிவு செய்தமைக்கு நெகிழ்வான நன்றி அய்யா கே.எஸ்.ஆர்.
நெறியுரை மிகவும் நெகிழ்வாக இருந்தது.திரு.வேங்கடப்பிரகாஷ் அவர்கள் ஒரு விவசாயியின் மகன் என்று உணருகிறேன்.////

நன்றி அய்யா... எப்பொழுதுமே கே.எஸ்.ஆர். அவர்கள் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லிவிடும் தன்மையர். உங்களைக் குறிப்பிட்டிருக்கிறாரென்றால்... ஆம் உழவர்க்குழைக்கும் உங்களைப் போன்றோர் உயர்த்திப்பிடிக்கப்படவேண்டியவர்களே :)

நீங்கள் உணர்ந்ததைப்போல் நானும் ஒரு விவசாயக்குடும்பத்திலிருந்து வந்தவனே...! தந்தை வழியில் தாத்தா பாட்டி காலத்தோடு போயிற்று. தாய்வழியில் தாய்மாமனார் இன்னும் 20 ஏக்கர் கரிசல் காட்டில் வெற்றிகரமாக ஏரோட்டிக்கொண்டிருக்கிறார். கலிங்கப்பட்டி அருகில் விஜயரங்கபுரம் எனும் கிராமத்தில் (புகைப்படங்கள்) :)

அடுத்து, நிகழ்ச்சியில் கே.எஸ்.ஆர்.அவர்கள் திடீரென சந்நதம் கொண்டவரைப்போல் ‘’ விவசாயிகள் திருப்பியடிப்பார்கள் ‘’ என்று உரத்த குரலில் சொன்னது வருச நாட்டு பளியன் சித்தனின் சாபத்தைக் கேட்டதைப்போல் குலை நடுங்க வைத்துவிட்டது. இறுதிநொடிகளில் என்னையறியாமல் சொன்ன ‘’ ஏதோ நடக்கப்போகிறது ‘’ என்ற வார்த்தைகள் இந்த நொடியில் நினைவுக்கு வருகின்றன. விதை நெல்லை விற்றுவிடலாகாது... ஒருங்கிணைவோம்...மீட்போம்... 

அன்புக்கு நன்றி.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...