Tuesday, January 12, 2016

சேலம் வரதராஜுலு நாயுடு - Salem Varadarajulu Naidu

கடந்த 10.1.2016 ஞாயிற்றுக்கிழமை தினமணி ஆசிரியர் அன்புக்குரிய நண்பர் திரு. வைத்தியநாதனும், கல்கி திரு. ப்ரியனும் வைகை எக்ஸ்பிரஸ்ஸில் மதுரைக்கு பயணிக்கும்போது பல செய்திகளை விவாதிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.  உத்தமர் காந்தி அவர்கள் விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழகத்தில் விடுதலைப் போராட்டம் நாயக்கர், நாயுடு, முதலியார் கையில்தான் உள்ளது. அவர்கள்தான் அந்தப் போராட்டத்தை தமிழக மக்களோடு எடுத்து போராடி வருகின்றனர் என்ற கருத்தை குறிப்பிட்டார்.  நாயக்கர் என்பது தந்தைப் பெரியார். நாயுடு என்றால் சேலம் வரதராஜுலு நாயுடு. முதலியார் என்றால் திரு.வி.க. என்ற கல்யாணசுந்தரம் முதலியார். ஆற்றல் படைத்த வரதராஜுலு நாயுடு, வ.உ.சி. வழக்குகளையும், அவர் துயரங்களை சந்திக்கும் காலத்தில் அவருக்கு தோழனாக இருந்தார். தகுதியான அரசியல் தலைவர். திட்டமிட்டு மறைக்கப்பட்டார். இது அரசியலில் அன்றைக்கே ஆரம்பித்துவிட்டது.

இந்த வரிசையில் மகாகவி பாரதி, வ.உ.சி., ஜே.சி. குமரப்பா, மதுரை ஜோசப், இரட்டைமலை சீனிவாசன் என்ற ஆளுமைகள் தகுதி என்ற நிலையில் தடுக்கப்பட்டனர். தகுதியே தடை என்பது நீண்ட காலமாக வன்மமாக நன்றியற்ற முறையில் அரசியலில் செயல்படுகின்ற ஒரு பொய்யான கோட்பாடாகும்.  அந்த வகையில் சேலம் வரதராஜுலு நாயுடு பல வகையில் பாதிப்புகளை சந்தித்தாலும் சுயமரியாதையோடு வாழ்ந்தார்.


அவரை பற்றிய சில குறிப்புகள்....





No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…