Thursday, August 4, 2022

சீனா- இலங்கை உறவு, ஈழத்தமிழர், இந்தியா…

உரை(றை)க்காத உண்மைகள்...

இந்தநொடிவரை இந்தியா தனது பாதுகாப்பின் நிர்பந்தத்தினால் தமிழீழத்தை அமைக்கவேண்டிய சூழ்நிலை  ஏற்படும் என்று எண்ணவில்லை .
ஈழத்தமிழர்களோ தமிழீழம் உருவாகும் என்றும் எண்ணவில்லை .
ஈழத்தமிழர்களின் தேசிய போராட்டத்தின் தோல்வியினால் தமிழீழம் இனி ஒருபோதும் உருவாகாது என்றே ஈழத்தமிழர்கள் நம்புகின்றார்கள் .

ஆனால் அறிவியல் ஆயுதத்தின் வெற்றிகளிலும் அறிவியல் வெற்றியை நாம்  ஆழமாக நம்புகின்றோம் .
அறிவியலால் ஆயுதத்தால் அழிந்தவரை மீள்கட்டுமானம் செய்யமுடியும் என்றும் நம்புகின்றோம்  .

ஆயுதத்தால் அழிக்க மட்டுமே தெரியும் என்றும்,அறிவால் அழிந்தவற்றை மீட்டெடுக்கவும்  முடியும் என்றும் ஆழமாக நம்புகின்றோம். எம் நம்பிக்கை ஒருபோதும் பொய்க்கப்போவதில்லை .

இன்றைய சூழ்நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இலங்கையில் சீனாவால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விடயங்கள்.

1*இலங்கையில் உள்ள சீனாவினால் அமைக்கப்பட்ட  அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து தரைவழியாக திருக்கோணமலைக்கு செல்லக்கூடிய கார்ப்பெட்  அகண்ட வீதிகளும், சிறு ஏரிகளை கடக்க உறுதியான பாலங்களும் போடப்பட்டு சீன நிறுவனங்கள் தமது பணியை முடித்துள்ளது .

2*தென்னிலங்கையில் இருந்து விரைவாகவும் வேகமாகவும் திருகோணமலைக்கு வரக்கூடிய வசதியை செய்து முடித்த சீனாவின் நிறுவனங்கள் இப்போது அங்குள்ள தமிழ்மக்களை அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டம் , மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய இடங்களில் உள்ள தமிழ்மக்களை முதலில் எண்ணிக்கையில் குறைத்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் அம்பாறையில் தமிழர் பிரதிநித்துவம் 1990 களில் 185000 ஆக் இருந்தபோதும் இப்போது 100000 அளவில் குறைக்கப்பட்டு உள்ளார்கள் என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள். .அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த 85000 மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டும் மிகவும் குறைந்தளவான மக்கள் வேறு தேசங்களுக்கு இடம்பெயர்ந்தும் சென்று உள்ளார்கள்.(இலங்கையின் புள்ளிவிபரங்கள் பலதடவை உண்மையை உரைப்பதில்லை பலிகடா ஆக்கவேண்டும் என்று எண்ணியவர்கள் ஒருபோதும் சாட்சியங்களை சரியாக விடுவதில்லை என்பது வெளிப்படையுண்மை)

3*அம்பாறையில் இருந்து மலையக பிரதேசங்களும், சிங்கள பிரதேசங்களுக்கும் செல்லக்கூடிய உள்ளக பாதையை அம்பாறை தமிழர்கள் (கொரில்லா போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் அறிந்தே இருந்தார்கள் )இதனையும் சீன அரச முகவர்களுக்கு சிங்கள அரசின் கைக்கூலிகள் சொல்லியே கொடுத்து இருப்பார்கள் .ஆகவே இலங்கையின் எதிர்கால வரைபடம் எப்படி மாற்றியமைக்கப்பட வேண்டுமென்று இலங்கையின் இராஜதந்திரம் சிறப்பாக திட்டமிட்டு முடித்துள்ளது என்பதும் வெளிப்படையுண்மை.

4*இலங்கையில் இருந்து பொருளியல் நிபுணர்களும், அறிஞர்களும், பூகோள புவிசார் அறிஞர்களும், அரசியத்துறை பேராசியர்களும் சொல்கின்ற விடயங்களை உற்று நோக்குவதில் இருந்து இந்த உண்மைகளை புரிந்துகொள்ள முடியும். 

5*1948களில் திருகோணமலை மாவட்டத்தில் 100 வீதமாக இருந்த தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு இப்போது 40 வீதமாக முஸ்லீம்களும் , 30 வீதமாக தமிழர்களும் , 30 வீதமாக சிங்களவர்களும் உள்ளார்கள் .(வெளிப்படையான கணக்கு)

இப்போது மட்டகளப்பு மாவட்டத்தில் ஈழத்தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுக்கொண்டு வருகின்ற அதேவேளை இலங்கையின் வடக்கு பிரதேசங்களில் செறிவாக தமிழர்கள் உள்ள இடங்களை நோக்கி சீன நிறுவனங்கள் நகர்ந்துள்ளது .

இலங்கையின் வடக்கு பிரதேசங்களில் ,சாலை போக்குவரத்து, கட்டட நிர்மாணம், கடலட்டை பண்ணை, விவசாயம்என்று  பல்வேறு துறைகளில் வடக்கில் காலூன்றி உள்ளதுடன் இலங்கையின் வடக்கு பிரதேசங்களின் கடற்கரையோர பிரதேசங்களை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது .

இத்தகைய ஒரு கடினமான மிகவும் நெருக்கடியான சூழலில் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி எனவும் சிங்கள மக்கள் அந்த அரசிற்கு எதிராக போராடுகின்றார்கள் என்றும் இந்தியாவும், மேற்குலகமும் எண்ணிக்கொண்டு வாழாதிருந்தாலும் இலங்கை அரசாங்கத்தை மாற்றியமைத்தாலும் ,இலங்கை என்கின்ற அரச இயந்திரம் தனது கொள்கையை மாற்றியமைக்கப்  போவதில்லை .
*அதாவது இலங்கையில் ஈழத்தமிழர்கள் உள்ளவரை இந்தியாவை வெற்றிகொள்ள முடியாது என்கின்ற கொள்கையை இலங்கை அரசு ஒருபோதும் மாற்றியமைக்க போவதில்லை*.

*மேற்குறித்த இந்த உண்மைகளை இந்திய உயர்மட்டம் சரியாக உணரும்போது ,இந்தியாவின் தேசிய பாதுகாப்பு என்பதற்காகவே தமிழீழம் அமையும்*.

இது இந்த உலக ஒழுங்கின் நிர்பந்தம்.அந்தத்  தமிழீழத்தை ஈழத்தமிழ்மக்களில்  பெரும்பான்மை மக்களால் விரும்பப்பட்ட கட்டமைப்பின்  நிர்வாக கட்டமைப்பே வழிநடத்தி செல்லும்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...