Thursday, June 12, 2025

கொசோவா யுத்தம் நினைவிருக்கலாம் அப்போது அமெரிக்காவின் எப் 117 ரக நவீன விமானம் வீழ்த்தபட்டபோது

 கொசோவா யுத்தம் நினைவிருக்கலாம் அப்போது அமெரிக்காவின் எப் 117 ரக நவீன விமானம் வீழ்த்தபட்டபோது அப்போதைய அதிபர் கிளிண்டன் கண்கள் சிவக்க ஆத்திரத்தின் உச்சியில் அளித்த பேட்டி மறக்கமுடியாதது

அதாவது அமெரிக்கர்கள் எப்போதும் தங்கள் ஆயுதத்தில் பெருமை கொள்பவர்கள், அதன் தரத்தின் கவுரவம் கொள்பவர்கள் அதுதான் அவர்கள் ஆயுத வியாபாரத்தின் மூலம் என்பதை அறிந்தவர்கள் அப்படியான அமெரிக்க தயாரிப்புக்கு பலமுறை மரண அடி கொடுத்த ஒரே நாடு இந்தியா, வேறு எந்த நாடும் அதை செய்ததில்லை 1965ல் அமெரிக்காவின் அன்றைய நவீன பேட்டன் டாங்கிகள் பாகிஸ்தானின் பலமாக வர அதனை முடக்கி ஒழித்து தகர்த்துபோட்ட நாடு இந்தியா 1971ல் அமெரிக்காவின் நீர்மூழ்கி ஹாஜி எனும் பெயருடன் பாகிஸ்தான் சார்பாக வர அதனை விசாகபட்டிணம் அருகே கடலில் சமாதிகட்டிய நாடும் இந்தியா 2018 மற்றும் 2025ல் அமெரிக்காவின் எப் 16 விமானம் பாகிஸ்தானில் இருந்து எழும்ப அதனை உடைத்து போட்டதும் இந்தியா இப்படி ஒரு அடியினை எந்தநாடும் கொடுத்ததில்லை, அமெரிக்கா பல இடங்களில் இந்தியாவினை முறைக்க இதுவும் காரணம் இப்போது பாகிஸ்தான் தக் லைப் கோஷ்டிகள் போல் அடிவாங்கி கிடக்கும் நேரம் அமெரிக்காவின் எப் 16 இந்தியாவினால் வீழ்த்தபட்டதில் இன்னும் அந்த தேசம் கடுப்பாகிவிட்டது அவசரமாக தங்கள் எப் 16 விமானத்தை நிருபிக்க உக்ரைனில் ஆடியிருக்கின்றார்கள், வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க எப் 16 ரஷ்யாவின் சுகோய் 35 விமானத்தை வீழ்த்திவிட்டதாக தம்பட்டம் அடித்து கொண்டிருக்கின்றார்கள் இதெல்லாம் வியாபார உத்தி, இந்திய தமிழகத்தில் சிலர் பேசும் கொள்கைதான் சிறந்தது என்பது போல அமெரிக்காவிற்கும் சில விளம்பரங்கள் ஆயுத சந்தைக்கு அவசியம் அதனால் இப்படித்தான் கிளம்புவார்கள் நோ வொண்டர் அவ்வளவு சிறந்த விமானம் என்றால் அது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழையட்டும் பார்க்கலாம் என்றால் பதிலே வராது

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்