Monday, January 4, 2016

சிந்தனைக்கு......

வாய்ச்சொல் வீரரை விட களப்பணியாளரிண் பணிதான் பொதுவாழ்வில் முக்கியம்.

களப்பணியாளர் ஆற்றிய பணியும், தியாகங்களும் அதனால் ஒரு அமைப்பு பெறுகின்ற வலுவும், ஆதாயங்களும் வெளி தெரியாது.  மாலை நேரத்தில் மேடையில் பேசிவிட்டு இரண்டு, மூன்று மணிநேரத்தில் சென்றுவிடலாம். அவர்களுக்கு விளம்பரம், சன்மானம், வரவேற்பு என சகலமும் கிடைக்கும்.  ஆனால் களப் பணியாளர்கள் ஏதோ ஒரு அறையில் இருந்து அமைப்பின் இதயமாகவும், மூளையாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயல்புகள் யாவும் இருட்டிலேயே முடக்கப்படுகின்றன. களப்பணியாளர்களும், செயல்பாட்டாளர்களும் இருந்தால் எந்த அமைப்பும் சரியான திசையில் வெற்றியை நோக்கி பயணிக்கும். இன்றைய அறிவியல் உலகில் வாய்ச்சொல் வீரரை காட்டிலும், களப்பணியாளர்கள்தான் முக்கியம்.  இந்தக் கருத்தை சிந்திக்க வேண்டும்.  1993 துவக்கத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கூட்டத்தில் ஜெயலலிதாவை ஆபாசமாக விமர்சித்துவிட்டு மேடு பள்ளங்கள் என்று குறிப்பிட்டு அதற்கு பிணை வாங்குவதற்குள் அந்த நபருக்கு கை கால் நடுக்கம், உடம்பெல்லாம் வியர்வை வழிந்தது, வாயில் உணவு ஏறாமலும், ஓடி ஒளிந்துகொண்டார். அப்படிப்பட்ட நபர் கையறு நிலையில் இருந்தபோது, பிணை வாங்கி, வழக்கிலும் வெற்றியை பெற்றுக் கொடுத்தேன். இது நடந்து 22 வருடங்கள் ஆகின்றன.  அந்த நபர் அப்படிப்பட்ட தைரியசாலி. இது ஒரு சங்கதி அவ்வளவுதான்.  கசடுகளுக்கும், முடநாற்றங்களுக்கும் ஏன் இப்படி ஒரு முக்கியத்துவம் என்று தெரியவில்லை. உழைப்பவன் உழைத்துக் கொண்டிருக்கின்றான். சவடாலும் வெட்டி பேச்சுகளும் அரங்கேறுகின்றன.

பயனற்ற போலி பேச்சுகளா, களப் பணியா?

வாய்ச்சொல் வீரரா, களப் பணியாளரா?

மக்கள் சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment

வேலுப்பிள்ளை பிரபாகரன்- Velupillai Prabhakaran

https://youtu.be/WrNmTFAoFw8?si=xJMjMucIKPf6JUWQ