Monday, September 12, 2022

வ.உ.சிதம்பரனார் VOC

நேற்று (11.09.22) தினமணியில் இந்த வாரம் பகுதியில் அதன் ஆசிரியர் நண்பர் கே.வைத்தியநாதன், தூத்துக்குடியில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளை தினமணி சார்பில் சிறப்பாக நடத்த இருந்ததாகவும், அந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்ற அழைத்த சிலர், தங்களுக்கான அதிகபட்ச தொகையான பணமும், விமான டிக்கெட்டும் கேட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். பேச்சாளர் என்ற வகையில் ஒருவர் பணம் பெறுவது தவறில்லை. ஆனால் வ.உ.சி.யின் பிறந்த நாளுக்கு உரையாற்ற மைதாஸ் போன்று அதிகபட்ச தொகையைக் கேட்டாலே, வ.உ.சி.யைப் பற்றி பேசத் தகுதியில்லை என்று அவர்களைப் புறந்தள்ள வேண்டும். இப்படிப்பட்ட தகுதியற்ற மனிதர்கள் வ.உ.சி.யைப் புகழ வேண்டுமா?   வ உ சியின் மெய்யன்பர்களை அழைக்காமல் விளம்பர வெளிச்சத்தில் மினுக்கும் பேச்சுக் கிளிகளை அழைத்தால் அப்படித்தானிருக்கும். இ ந்தநிலை இன்றைக்கு எல்லா தளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் நேர்மையற்ற போலியான போக்காக ஆகிவிட்டது. வ.உ.சி.யின் நண்பர் பாரதி பாடிய ‘விதியே! விதியே! தமிழச் சாதியை என்செயக் கருதி யிருக்கின்றாயடா?’ என்ற வரிகள்தாம் நினைவுக்கு வருகின்றன.

#KSR post 
12-9-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...