Wednesday, June 4, 2025

#திமுக_டில்லிலாபி

 #திமுக_டில்லிலாபி

———————————


அண்ணாவால் அரசியலுக்கு வந்தவர். முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர்.கலைஞர் எம்ஜி ஆருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். இன்று ஒரு குறிப்பிட்ட விடயமாக என்னிடம் தொலைபேசியில் பேசினார்.
அவர் சில குறிப்பிட்ட தகவல்களையும் குறிப்புகளையும் கேட்டார்! அதை நான் கொடுத்து முடித்தவுடன் “என்னங்க இன்று ராஜ்யசபா எம்பி களுக்கான பட்டியலை ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார் பார்த்தீர்களா!.நாஞ்சில் மனோகரன், இரா. செழியன, முரசொலி மாறன் வைகோ காலத்துக்கு பிறகு தொடர்ந்து திமுகவிற்கு அடையாளம் தரக்கூடிய எம்பிக்கள் யாரும் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்குச்
செல்லவில்லை. பின் டில்லிக்கும் திமுகவுக்கும் பெரிய லாபி இல்லாமல் போய்விட்டது .
உங்களைப் போன்ற அரசியல் அனுபவம் உள்ளவர்களைத் தான் கலைஞர் பயன்படுத்த விரும்பினார். ஸ்டாலின் ஏனோ அதை விரும்பவில்லை. இப்போது ஸ்டாலின் குடும்பம் பாதிக்கப்படும் போது தானே டெல்லி அவரே ஓடிச்சென்று பேச வேண்டி இருக்கிறது. திமுகவின் பிரச்சனையாக இருக்கட்டும் இல்லை தமிழ்நாட்டின் பிரச்சினையாகவும் இருக்கட்டும் அங்கு டெல்லியில் உள்ள அமைச்சர்களைச் சந்தித்து சுமூகமாகத் திறமையாக எதையும் பேசி முடிப்பதற்குரிய எம்பிக்கள் இப்போது யார் என்று பார்த்தால் ஒருவர் கூடத் திமுக தேற மாட்டார்கள் போலிருக்கிறது. இதையெல்லாம் எடுத்துச் சொல்லக்கூடிய திறமையும் நீண்ட அரசியல் அனுபவம் உள்ள உங்களைப் போன்றவர்களை இந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் போது திமுகவின் இழப்பு எனக்கு உண்மையிலேயே சங்கடமாக இருக்கிறது. பார்க்கப் போனால் உங்களை விட திமுகவிற்கு இவர்களை எல்லாம் விட அதிகம் உழைத்து வலுச் சேர்த்து பல்வேறு நெருக்கடிகளில் அதற்குரிய உபாயங்களைச் சொல்லி வழக்குகளை சந்தித்து மீட்டுக் கொடுத்த உங்களைப் போன்றவர்கள் தானே இது மாதிரி பதவிகளுக்கு தகுதியாக இருப்பார்கள்! அதை விட்டுவிட்டு ஸ்டாலின் ஏன் இப்படி உங்களை கட்சியை விட்டு நீக்கி தகுதியற்றவர்களுக்கு இப்படியானபதவிகளைக் கொடுக்கும் அளவிற்கு மாறிப்போனார் எனத் தெரியவில்லை” என்று சொல்லி முடித்தார்.
மேலும் ,தி.மு.க.வில் தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டு பொறுப்பில் உள்ள இவர்களை விட உங்கள் பணி, தகுதிகள்
எந்த விதத்தில் குறை என்றார்.
1)கலாநிதி வீராசாமி எம்.பி
2 ) கிரிராஜன் எம்.பி.
3 ) ரங்கநாதன் , தலைவர் ,த.நா.
உணவு கிடங்கு நிறுவனம்
4 ) சேகர் பாபு அமைச்சர்
5 ) மோகன் அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ.
6 ) ஐ டிரிம் மூர்த்தி இராயபுரம் எம்.எல்.ஏ.
7 ) ராஜா தாம்பரம் எம்.எல்.ஏ.
8 )வரலட்சுமி
மதுசூதனன் செங்கல்பட்டு எம்.எல்.ஏ
9 ) காந்தி இராணிப்பேட்டை எம்.எல்.ஏ
10 )எ.பி.நந்தகுமார் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ
11 )வில்வ நாதன் ஆம்பூர் எம்.எல்.ஏ
12 )எ.வ.வேலு அமைச்சர்
13 ) கு.பிச்சாண்டி துணை சபாநாயகர்
14 )கதிரவன் எம்.எல்.ஏ
15 ) கே.என் நேரு அமைச்சர்
16 )தளபதி மதுரை எம்.எல்.ஏ.
17 ) சீனிவாசன் விருது நகர் எம்.எல்.ஏ
18 )கே.கே.எஸ்.எஸ்.ஆர். அமைச்சர்
•••
அண்ணாநகர் கார்த்தி
ரத்திஷ்
ஆாக்காஷ்
விக்ரம் ஜூஜூ
ஜீ.சொக்யர் பாலா
பாஷியம் கன்ஸ்ட்ரக்சன் அபினேஷ் இப்போது இந்த திமுகவின
முக்கியஸ்தர்களை கலைஞருக்கு அறிமுக ஆனவர்களா? என்றார். இன்றைக்கு ஸ்டாலின் திமுக ஆகிவிட்டது. அண்ணா நிறுவிய திமுக, கலைஞர் காலத்தில் திமுக வேறு. என்ன சொல்ல இருக்கிறது என்றார்
அதற்கு நான் சொன்னேன் நீங்கள் இப்படி என்னை மனதில் வைத்து சொல்வது தானே எனக்கு என் செயல்களுக்கு கிடைத்த மிகுந்த மரியாதை! அதுவே எனக்கு போதுமானது. நான் முன்னாளோ இந்நாளோ கிடையாது! இப்போது கூடப் பாருங்கள்! அரசியல் சம்பந்தப்பட்ட விவரங்களை நீங்கள் எனக்குக் கால் செய்து தானே கேட்கிறீர்கள். அந்த இடத்தில் நான் இருப்பது தானே என் தகுதியாக இருக்கிறது. இதையெல்லாம் யாரிடமாவது நீங்கள் கேட்பீர்களா இல்லை கேட்டால் தான் தான் இந்த விபரங்கள் உங்களுக்கு கிடைக்குமா
விவரம் தெரியாதவர்கள் தான் இன்றைக்கு எல்லாவற்றிலும் நிறைந்து விடுகிறார்கள். தனி மரம் தோப்பாகாது தான்! ஆனால் ஊருக்கு ஒரு ஆலமரம் அரசமரம் என்று ஒன்றுதான் உயர்ந்து இருக்கும்!. அது அனைவருக்கும்நிழலையும் குளிர்ச்சியையும் தரும்!. அந்த ஆல மரங்கள் வேப்ப மரத்தை விடக் குளிர்ச்சியானவை!. அதை போலவே ஸ்டாலின் என்னை மதித்தால் என்ன? மதிக்காவிட்டால் தான் என்ன? நான் தான் ஸ்டாலினையே மதிப்பதில்லையே! இவர் என்ன எனக்கு பதவி தருவது! கலைஞர் இருந்த காலத்திலே அவரே கொடுக்கவில்லை! முரசொலி மாறன் இருந்திருந்தால் என்னை பற்றி யோசித்து இருப்பார்!” இருக்கட்டும்! உங்களைப் போன்றவர்கள் தரும் அங்கீகாரத்தையும் மரியாதையையும் விட எனக்கு என்ன அமைச்சர்,எம்பி, எம்எல்ஏ பதவியா இந்த ஓட்டை விலைக்கு வாங்கும் வியாபார அரசியலில் முக்கியம். என்று சொல்லி முடித்து வைத்தேன்.

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...