Wednesday, June 4, 2025

அண்ணா பல்கலை பாலியல் வழக்குத் தீர்ப்பு

 அண்ணா பல்கலை பாலியல் வழக்குத் தீர்ப்பு

இதில் திமுக அரசின் மற்றும் காவல்துறையினரின் பங்கு என்ன ?
தீர்ப்பையே நாங்கள்தான் பெற்றுக்கொடுத்தோம் என்று மு.க.ஸ்டாலின் அவர்களும், கனிமொழி அவர்களும் தெரிவிக்கிறார்கள்.
மக்களின் மறதியே அரசியல்வாதிகளின் அடிப்படை முதலீடு என்பது எவ்வளவு சரியானது ?!
பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரையே ஏற்றுக்கொள்ளாமல் காவல்துறை தவிர்த்து வந்தது. பிறகு ஒரு வழியாக முதல் தகவல் அறிக்கை தயாரான நிலையில் அது வெளியே கசிந்தது. இது தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாகக் கூறியது காவல்துறை. ஆனால், அதற்கு முன்னதாகவோ, பின்னதாகவோ அப்படி ஒரு கோளாறு நடந்ததாக ஒரு செய்தியும் இல்லை. மேலும், குற்றத்தில் ஈடுபட்டவர் ஒருவர்தான் என்று விசாரணை தொடங்குவதற்கு முன்னரே அறிவித்தார் மாநகரக் காவல் ஆணையர் அருண்.
இதையடுத்துத் தலையிட்ட சென்னை உயர்நீதி மன்றம் மாநகர காவல்துறை ஆணையரிடம் இருந்த விசாரணையைப் பறித்து மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவிடம் நீதிமன்றமே ஒப்படைத்தது. மேலும், இந்த வழக்கில் மாநகர காவல் ஆணையர் அருண் நடந்து கொண்ட விதம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
உடனே அடித்துபிடித்து உச்சநீதிமன்றம் சென்ற திமுக அரசு, ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைக்குத் தடை பெற்றது.
அதிகாரியைக் காப்பாற்ற மெனக்கெட்ட அரசு யார் அந்த சார் ? எனும் கேள்விக்கு விடை கண்டதா என்றால் இல்லை.
உயர்நீதிமன்றம் உற்று நோக்கும் ஒருவழக்கை விசாரித்து முடித்து, கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றம் இழைத்திருக்கிறார் என்று உறுதி செய்து தீர்ப்பு அறிவிப்பைத் தள்ளி வைத்திருக்கிறது மகளிர் நீதிமன்றம்.
இதற்கிடையில், "பார்த்து ஏதாவது சின்ன தண்டனையா, வலிக்காம அடிக்க சொல்லுங்க உவர் ஆனர்" என்று குற்றவாளி கோருகிறார்.
இதற்கு, அரசு என்ன கூறப்போகிறது ? இல்லை இல்லை கடும் தண்டனை கொடுக்கவேண்டும் நேரு கூறப்போகிறதா ? இல்லை, அந்தத் தம்பி கேட்கிறா மாதிரி ஒரு பத்து நாள் உள்ள வச்சிருந்து விட்டுடுகன்னு சொல்லப்போகுதா ?!
ஆக...இதில் ஆளும் திமுக அரசுக்கு என்ன பெருமை ? உண்மையில் சிறுமைதான்.
இந்த வழக்கில் சென்னை மாநகர் ஆணையர் மீது உயர்நீதிமன்றம் குற்றம் சுமத்தி ஊர் உலகமே பார்த்து காவல்துறை நடவடிக்கை குறித்து அதிர்ச்சி அடைந்த நிலையில் எதுவுமே நடக்காதது போல இப்படிப் பெருமை தேடிக்கொள்வது மக்கள் மத்தியில் மேலும் அதிருப்தியையே உருவாக்கும்.
யாரோ தவறாக வழிகாட்டுகிறார்கள் !

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...