Wednesday, September 4, 2024

*வழக்கறிஞர் தொழிலுக்கே அவமானம்.. மனுதாரரை மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க அறிவுறுத்தியது சென்னை ஐகோர்ட்*

 *வழக்கறிஞர் தொழிலுக்கே அவமானம்.. மனுதாரரை மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க அறிவுறுத்தியது சென்னை ஐகோர்ட்*


சென்னை: வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்டு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.


கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான 15 ஆண்டுகளில் மொத்தம் 15,924 புதிய வழக்கறிஞர்கள் தங்களை பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு வழக்கறிஞர் தொழில் புரிந்து வருகிறார்கள். இதில் கடந்த 2008 ஆம் ஆண்டில் எழும்பூர் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டு, அந்த வழக்கில் 3 வழக்கறிஞர்கள் கைது செய்யபட்டனர்.


2011 ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் வழக்கறிஞர் சதிஷ்குமார் படுகொலை செய்யப்பட்டு இதுவரை கொலையாளிகளோ, கொலைக்கான காரணமோ வழக்கில் தெரியாத நிலையில் வழக்கு நிலுவையில் உள்ளது.


2013 ஆம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் நீதிமன்ற பணியை முடித்து வீடு திரும்பிச் சென்ற போது மர்ம நபர்கள் வழிமறித்து சாலையில் வைத்து கொடுரமான ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.


பழிக்கு பழி சம்பவமாக சேலம், ராசிபுரம் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நடராஜன், கடந்த 2013 ஆம் ஆண்டு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பழி தீர்க்கும் சம்பவமாக கடந்த 2014 ம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் உணவகத்தில் உணவு அருந்தி கொண்டிருந்த வழக்கறிஞர் நித்தியானந்தம் என்பவரை, 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது.


நாயுடன் இரவில் வாக்கிங் சென்ற வழக்கறிஞர் மதியழகன் கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சண்முகம் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.


கடந்த 2015 ஆம் ஆண்டு எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் வெற்றியை கொண்டாடிய வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை செய்யப்பட்டார். மாமல்லபுரத்திற்கு வழக்கு தொடர்ந்தவருடன் சென்ற வழக்கறிஞர் கமலேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


இதே போல், இந்தாண்டு மட்டும் கடந்த மார்ச் மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பணியாற்றிய வழக்கறிஞர் ஜெய் கணேஷ், தென்காசி வழக்கறிஞர் அசோக்குமார், துத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமாரை தொடர்ந்து கடந்த ஜூலை 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் வரை 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


பல வழக்குகளில் வழக்கறிஞர்கள் குற்றவாளியாகவும் சேர்க்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வழக்கறிஞர் தொழிலுக்கு அவமானத்தையும், பொதுமக்களுக்கு வழக்கறிஞர் தொழில் மீதான நம்பக தன்மையையும் இழக்கும் நிலையையும் உருவாக்கியுள்ளத.


வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது, வழக்குகளில் குற்றவாளிகளாக வழக்கறிஞர்கள் இருப்பதை தடுக்க

வழக்கறிஞர்களுக்கான தொழில் நடைமுறை சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி மற்றும் 18 ம் தேதிகளில் மத்திய மாநில அரசுகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை எனக் கூறி சென்னையை சேர்ந்த சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சில வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் படுகொலை தொடர்பாக சில வழக்குகள் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சில வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வழக்கறிஞர்கள் தொழில் நடைமுறை சட்டத்தை அமல்படுத்தக்கோரி மத்திய அரசிடம் புதிய மனு அளிக்க மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்...

Stand up and believe in yourself, even if it means standing alone.

 Stand up and believe in yourself, even if it means standing alone. You would have been stabbed by those you needed. You would have been lied to by those g you loved. And You would have felt alone when you couldn't afford to be. But at the end of the day, you will learn to be your own best friend, because there's going to be days where no one is going to be there for you but yourself.There is nothing more freeing and empowering than learning to like your own company....


#ksrpost

23-8-2024.



துரோகிகளையும் துரோகங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள்ளுங்கள்.. அப்பொழுது தான் இன்னொரு முறை ஏமாறாமல் இருக்க முடியும்.

 துரோகிகளையும் துரோகங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள்ளுங்கள்.. அப்பொழுது தான் இன்னொரு முறை ஏமாறாமல் இருக்க முடியும்.

Tuesday, September 3, 2024

என் மண்….

 என் மண்….

என் பூமி…..

#கரிசல்காடு 

வானம் பார்த்த கந்தக மண் 


The beauty of village. 

The beauty Of nature 

Love of everything  village


#கேஎஸ்ஆர்போஸ்ட் 

#ksrpost 

22-8-2024.



நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை/தற்செய்யத் தானே கெடும்- -பழமொழி நானூறு

 நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை/தற்செய்யத் தானே கெடும்- 

-பழமொழி நானூறு

#பிஜேபியும்திமுகவும்கூட்டணி_இல்லை.

 #பிஜேபியும்திமுகவும்கூட்டணி_இல்லை. 

எனக்குத் தெரிந்த டெல்லி தகவல்! 

—————————————

பிஜேபியும் திமுகவும் கூட்டணி சேரப் போவதாக இங்கு பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் பிஜேபி இந்த விஷயத்தில் 100% சதவீதம் அந்த எண்ணத்தில் இல்லை என்று உறுதியாகத் தெரிகிறது.  


 ஒருவேளை திமுகவும் இப்போதைக்கு அந்த அபிப்ராயத்தில் இல்லை என்று சொல்லி வைக்கலாம்

#அன்றுமஇன்றும்….



#அன்றுமஇன்றும்….

—————————-

சில விஷயங்கள் மங்கலாக நினைவின் மடிப்புகளில் படிந்திருப்பதை சமீபமாய் கவனிக்கிறேன். இத்தனை நாட்களாய் இந்த நினைவுகள் எங்கிருந்தன. இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைகூட இவற்றைச் சிந்தித்தது இல்லையே என்று தோன்றுகிறது. 
















நான் ஆங்கில மொழி மீது அபரீதமான காதலுடன் வளர்க்கப்பட்டவன். புத்தகங்களும் கவிதைகளும் மற்றும் வாராந்திர ஆங்கில பத்திரிக்கைகளும் - குஷ்வந்த் சிங்கும் ப்ரிட்டீஷ் நந்தியும் editor ஆக இருந்த The illustrated weekly of India, மற்றும் அன்றைய Sunday, Out look, R. K. Karanjia’s the Blitz, Current , மேனகாவின் Suriya, Gentleman, Link, Mainstream, Rajaji’s Swarajaya  

தற்போதைய Caravan,Open ,

India today, வினோத் மேத்தாவின் Outlook,Frontline Seminar மலையாள மனோராமா குழுமத்தின் - The Week,, ஆகியவை கற்றுத்தந்த ஆங்கில மொழி ஆளுமையும் மட்டுமே. நான் நான்கு ஐந்து வயதுகளில் ராம்நாத் கோயன்காவின் The Indian Express பிறகு  மனோஜ் சோன்தலியாவின் The New Indian Express மற்றும் N.Ram என்ற தமிழின படுகொலையை ஆதரித்தவரின் நாளிதழ் ஆன The Hindu மற்றும் TJS George, Rajan Bala, Nirmal Shekar, Suresh Menon , Times of India, Hindustan Times, Statesman, Pioneer, mint மற்றும் Telegraph, Deccan herald, Deccan Chronicle etc etc போன்ற பல இதழ் கட்டுரைகளுமே.

தற்போதைய குழந்தைகளுக்கு கதை/கவிதை/அபுனைவு புத்தகங்களோ வாராந்திர பத்திரிக்கைகளோ நாளிதழ்களோ படிக்கும் பழக்கம் சிறிதளவும் இல்லை. நாமும் அவற்றை அறிமுகப்படுத்தவும் தவறுகிறோம். வலையுலகமும் சமூக ஊடகங்களும் மட்டுமே அவர்களுக்கு செய்திகளையும் ஆர்வங்களையும் தருகின்றன, ஈர்க்கின்றன. எனக்கு வருத்தமாக இருக்கிறது. மனிதர்களின் அறிவு வளர்ச்சி தொண்ணூருகளில் ( ‘90s )களில் உச்சம் அடைந்து பிறகு ஒரு தேக்கநிலையை அடைந்து இய்போது அருகி குறைய ஆரம்பித்து உள்ளது. நான் எனது teen ageகளில் இருந்த பொது அறிவு மற்றும் உலக அனுபவங்கள் என ஏதையும் உள்ள இளைய தலைமுறையை சார்ந்த ஒருத்தரை கூட நான் சந்திக்கவில்லை. மனிதனின் அறிவு சரிந்து Artificial Intelligence என்பதின் சொகுசான luxuryக்கு அடிமையாகி அழியப்போகிறோம் எனவே எனக்கு தோன்றுகிறது. மாறும் கால சூழல்களுக்கு ஏற்றவாறு மாறும் இனமே நிலைத்து நிற்கும் - the adaptability of the species to survive - என்பதே முக்கியமானது. May my apocalyptic anxieties and catastrophic fears rest - if there is a hope for humanity, 

one might need an entirely new mixture of skill sets are all that is required. Change is Eternal, Adapting to Change is Necessary for Survival.Period.

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்!

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேட...