Tuesday, September 3, 2024

#அன்றுமஇன்றும்….



#அன்றுமஇன்றும்….

—————————-

சில விஷயங்கள் மங்கலாக நினைவின் மடிப்புகளில் படிந்திருப்பதை சமீபமாய் கவனிக்கிறேன். இத்தனை நாட்களாய் இந்த நினைவுகள் எங்கிருந்தன. இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைகூட இவற்றைச் சிந்தித்தது இல்லையே என்று தோன்றுகிறது. 
















நான் ஆங்கில மொழி மீது அபரீதமான காதலுடன் வளர்க்கப்பட்டவன். புத்தகங்களும் கவிதைகளும் மற்றும் வாராந்திர ஆங்கில பத்திரிக்கைகளும் - குஷ்வந்த் சிங்கும் ப்ரிட்டீஷ் நந்தியும் editor ஆக இருந்த The illustrated weekly of India, மற்றும் அன்றைய Sunday, Out look, R. K. Karanjia’s the Blitz, Current , மேனகாவின் Suriya, Gentleman, Link, Mainstream, Rajaji’s Swarajaya  

தற்போதைய Caravan,Open ,

India today, வினோத் மேத்தாவின் Outlook,Frontline Seminar மலையாள மனோராமா குழுமத்தின் - The Week,, ஆகியவை கற்றுத்தந்த ஆங்கில மொழி ஆளுமையும் மட்டுமே. நான் நான்கு ஐந்து வயதுகளில் ராம்நாத் கோயன்காவின் The Indian Express பிறகு  மனோஜ் சோன்தலியாவின் The New Indian Express மற்றும் N.Ram என்ற தமிழின படுகொலையை ஆதரித்தவரின் நாளிதழ் ஆன The Hindu மற்றும் TJS George, Rajan Bala, Nirmal Shekar, Suresh Menon , Times of India, Hindustan Times, Statesman, Pioneer, mint மற்றும் Telegraph, Deccan herald, Deccan Chronicle etc etc போன்ற பல இதழ் கட்டுரைகளுமே.

தற்போதைய குழந்தைகளுக்கு கதை/கவிதை/அபுனைவு புத்தகங்களோ வாராந்திர பத்திரிக்கைகளோ நாளிதழ்களோ படிக்கும் பழக்கம் சிறிதளவும் இல்லை. நாமும் அவற்றை அறிமுகப்படுத்தவும் தவறுகிறோம். வலையுலகமும் சமூக ஊடகங்களும் மட்டுமே அவர்களுக்கு செய்திகளையும் ஆர்வங்களையும் தருகின்றன, ஈர்க்கின்றன. எனக்கு வருத்தமாக இருக்கிறது. மனிதர்களின் அறிவு வளர்ச்சி தொண்ணூருகளில் ( ‘90s )களில் உச்சம் அடைந்து பிறகு ஒரு தேக்கநிலையை அடைந்து இய்போது அருகி குறைய ஆரம்பித்து உள்ளது. நான் எனது teen ageகளில் இருந்த பொது அறிவு மற்றும் உலக அனுபவங்கள் என ஏதையும் உள்ள இளைய தலைமுறையை சார்ந்த ஒருத்தரை கூட நான் சந்திக்கவில்லை. மனிதனின் அறிவு சரிந்து Artificial Intelligence என்பதின் சொகுசான luxuryக்கு அடிமையாகி அழியப்போகிறோம் எனவே எனக்கு தோன்றுகிறது. மாறும் கால சூழல்களுக்கு ஏற்றவாறு மாறும் இனமே நிலைத்து நிற்கும் - the adaptability of the species to survive - என்பதே முக்கியமானது. May my apocalyptic anxieties and catastrophic fears rest - if there is a hope for humanity, 

one might need an entirely new mixture of skill sets are all that is required. Change is Eternal, Adapting to Change is Necessary for Survival.Period.

No comments:

Post a Comment

அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..

 அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு.. அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு  கார் ரேஸ் என….. ஆன...