Saturday, February 15, 2025

கொத்தமங்கலம் சுப்பு!

தில்லானா மோகனாம்பாளை திரைக்குத் தந்த கொத்தமங்கலம் சுப்பு! நினைவு தின சிறப்புப் பகிர்வ

சுப்பு பிறவிக் கவிஞன். ரச பேதமும் ரசக் குறைவும் இல்லாத ஹாஸ்ய புருஷன். வாழ்க்கையை இன்பமும், ரசமும் ததும்ப சித்திரித்துக் காண்பிக்க வேண்டும் என்ற அவரோடு கூடப்பிறந்த ஆவல், அவரை இலக்கிய உலகத்திலிருந்து அறவே விலக்கிவிட முடியவில்லை. தான் வாழ்க்கையில் கண்ட காட்சிகளை அவ்வப்போது சிறுகதைச் சித்திரங்களாக வரைந்து வந்தார். இந்தச் சிறுகதைகளை விலைமதிக்க முடியாத மாணிக்கங்கள் என்று சொன்னாலும் என் ஆவல் தணியாது. நோபல் பரிசைப் போல் தமிழ்நாட்டில் பாரதியார் பெயரால் ஒரு பரிசு இருக்குமானால் அதைத் தயங்காமல் நான் சுப்புவுக்குக் கொடுப்பேன்'' என்று மூத்த எழுத்தாளர் அறிஞர் வ.ரா., கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "மஞ்சுவிரட்டு' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

""அவர் ஒரு கவிஞர், அவர் ஒரு கதாசிரியர், அவர் ஒரு இயக்குநர், அவர் ஒரு நடிகர்...அதற்கும் மேலாகச் சிறந்த மனிதர்'' என்று கவிஞர் வாலி தன் கவிமாலையில் கொத்தமங்கலம் சுப்புவைப் பாராட்டியுள்ளார்.

கவிஞர், சிறந்த எழுத்தாளர், சினிமா கதை வசனகர்த்தா, இயக்குநர் கொத்தமங்கலம் சுப்பு

இலக்கியவாதிகள் பொதுவாக சினிமாவில் சோபிப்பதில்லை என்ற அரதப்பழசான குற்றச்சாட்டு இன்றளவும் திரையுலகில் உண்டு. அதைத் தகர்த்த முன்னோடிகளில் ஒருவர் கொத்தமங்கலம் சுப்பு. தமிழ்த்திரையுலகின் தவிர்க்கமுடியாத சினிமா தயாரிப்பு நிறுவனமான ஜெமினி நிறுவனத்தின் பல வெற்றிப்படங்களின் ஆதாரமாக இயங்கியவர் சுப்பு.

அங்கு ஜெமினி பட இலாகாவிலும், வாசன் அவர்கள் நடத்திய ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுதும் எழுத்தாளராகவும், ஜெமினி படங்களில் நடிக்கும் நடிகராகவும் இப்படிப் பல துறைகளிலும் பிரகாசித்தவர் சுப்பு.

கொத்தமங்கலம் சுப்பு என்கிற சுப்பிரமணியன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கன்னாரியேந்தல் எனும் கிராமத்தில் 1910-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி பிறந்தார். இளம் வயதில் தாயாரை இழக்கநேர்ந்ததால் தந்தை மகாலிங்க ஐயரின் கட்டுப்பாட்டில் வளர்ந்தார் சுப்பு. இயல்பாக கலை விஷயங்களில் ஈடுபாடு இருந்ததால் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படிக்க முடிந்தது. மகனை பொறுப்பானவனாக ஆக்க உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்துவைத்தார் தந்தை. பின்னர் ஒரு மரக்கடையில் வேலைக்குச் சேர்ந்து பணிபுரிந்த சுப்புவுக்கு கவனம் முழுவதும்  நாடகம், நடிப்பு, பாடல் புனைவது, என்ற விஷயங்களிலேயே இருந்தது. வியாபாரத்தில் துளியும் கவனமில்லை. ஒருமுடிவாக காரைக்குடி அருகே இயங்கிவந்த நாடகக் குழு ஒன்றில் இணைந்தார். நாடக குழுவின் நாடகங்கள் பலவற்றில் நடிக்கத்துவங்கினார்.

தென்னிந்திய திரைப்படத்தொழில் மும்முரமாக வளர்ச்சியடைந்துகொண்டிருந்த நாடக அனுபவம் பட வாய்ப்புகளை பெற்றுத்தந்தது சுப்புவுக்கு. 1936-ல் ‘சந்திரமோகனா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகன் எம்.கே.ராதாவின் தோழன் வேணுகோபால் என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் சுப்பு. அக்காலகட்டத்தில் 'பட்டினத்தார்' 'மைனர் ராஜாமணி", "அநாதைப் பெண்" போன்ற படங்களில் தலைகாட்டத்துவங்கினார். அதுவரை படத்தில் அவரது சுப்ரமணியன் என்ற அவரது நிஜப்பெயரே இடம்பெற்றது. 1939-ல் திருநீலகண்டர் படத்தில்தான் முதன்முதலாக கொத்தமங்கலம் சுப்பு என்ற பெயர் இடம்பெற்றது. இந்த பெயர் காரணம் சுவாரஸ்யமானது. சுப்பு நாடகங்களிலும் படங்களிலும் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த காலத்தில் கொத்தமங்கலம் சீனு என்பவர் திரைப்படத் துறையில் புகழ்பெற்றிருந்தார். அவர்தான் சுப்புவை அன்றைய பிரபல இயக்குநர் டைரக்டர் கே.சுப்பிரமணியத்திடம் அறிமுகம் செய்து வைத்தவர். அதிலிருந்து கொத்தமங்கலம் சுப்பு என்றே அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து கே.சுப்ரமணியத்தின் "பக்த சேதா , "கச்ச தேவயானி" உள்ளிட்ட படங்களில் நடித்தார். 1941-ல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் கே.சுப்பிரமணியத்தின் சினிமா ஸ்டுடியோ முழுவதுமாக எரிந்துவிட நட்டத்தை சமாளிக்க தனது மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தை எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கு விற்றார் சுப்ரமணியம். அப்போது சுப்ரமணியத்தால் 'சிறந்த கலைஞர், பன்முக திறன் மிக்கவர்' என்ற அறிமுகத்துடன் எஸ்.எஸ்.வாசனிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார் சுப்பு.

கொத்தமங்கலம் சுப்புவின் திறமையை பல விஷயங்களில் நேரில் கண்ட வாசன் அவரை தன்னுடனேயே பணிபுரியக் கேட்டுக்கொண்டார்.
இந்த காலகட்டத்துக்குள் மைனர் ராஜாமணி, அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்தசக்குபாய், அடங்காப்பிடாரி, சுகுணசரசா, பக்த சேதா, சூர்ய புத்ரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், பக்த நாரதர், தாசி அபரஞ்சி, போன்ற படங்களில் நடித்துமுடித்தார்.

ஜெமினியில் சுப்புவின் கொடி பறக்க ஆரம்பித்தது. ஜெமினியில் அவருக்கு அளிக்கப்பட்ட  ஊதியம்  மாதம் 300 ரூபாய். கொஞ்சநாளில் வாசனின் பிரியமான நண்பராகவும் ஆகிப்போன சுப்பு, ஜெமினி கதை இலாகாவில் முக்கிய பங்காற்றினார். ஜெமினியின் புகழ்பெற்ற படங்களான சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களின் வெற்றியில் சுப்புவின் பங்கு அளப்பரியது.

ஜெமினியில் நடிகர், கதாசிரியர், இயக்குநராக, கதை வசனகர்த்தா கவிஞர் என தன் பன்முக திறமையுடன் இயங்கி திரையுலகில் புகழ்பெற்றார் சுப்பு. ஜெமினியில் நான்கு படங்களை இயக்கிய சுப்பு, ஏழு படங்களுக்குத் திரைக்கதை எழுதினார். அவரது பல நுாறு பாடல்கள் மக்களால் பெரிதும் பேசப்பட்டது.

ஜெமினியின் தயாரிப்பான ஒளவையார் கொத்தமங்கலம் சுப்புவுக்கு பெரும்புகழ் அளித்தது. சினிமாவையே பார்த்திராத, அதன் மீதுவெறுப்பு கொண்ட ராஜாஜி விரும்பி பார்த்த திரைப்படம் ஔவையார் திரைப்படம். அத்தனை சிறப்பான முறையில் வாசனின் எண்ணத்துக்கு திரையில் உயிர்கொடுத்திருந்தார் படத்தை இயக்கிய கொத்தமங்கலம் சுப்பு. படத்தின் திரைக்கதை, பாடல், இயக்கம் அனைத்தும் அவரே. 1954-ல் ஔவையார் படக்குழுவினருக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட ராஜாஜி, பக்தவத்சலம் “தமிழ் உலகுக்கு கொத்தமங்கலம் சுப்புவும் வாசனும் செய்த சேவையை யாராலும் மறக்கமுடியாது” என பாராட்டித்தள்ளினர்.

இப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடித்தும் இருந்தார். மனைவிக்கு பயந்தவரான அந்த கதாபாத்திரத்தின் சேஷ்டைகள் ரசிகர்களை சிரிக்கவைத்தது.

திரையுலகிலிருந்து விலகியிருந்த நடிகை கே.பி சுந்தராம்பாளை ஔவையாராக நடிக்க வைத்து ஹாலிவுட் படத்துக்கு இணையான பிரமாண்ட காட்சியமைப்புகளுடன் வெளியான ஔவையார் படம் இன்றைக்கும் ஜெமினியின் மாஸ்டர் பீஸ் என்றால் மிகையாகாது.
ஜெமினியின் ‘கண்ணம்மா என் காதலி’ திரைப்படம் கொத்தமங்கலம் சுப்புவுக்கு நற்பெயருடன் வாழ்க்கைத் துணையையும் தந்தது. ஆம்...1945-ல் வெளியான இந்த படத்தின் கதாநாயகி நடிகை எம்.எஸ்.சுந்தரிபாய் கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் திருமணம் செய்து கொண்டார்.

கொத்தமங்கலம் சுப்புவுக்கு புகழை தந்த படங்களில் முக்கியமானது,‘மிஸ். மாலினி’ பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் மிஸ்டர் சம்பத் என்கிற நாவலை ஜெமினி நிறுவனத்தார் திரைப்படமாகத் தயாரித்து 1947-ல் வெளியிட்டனர். இப்படத்தில் ‘சம்பத்’ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார் கொத்தமங்கலம் சுப்பு. இப்படத்தில் இன்னுமொரு சிறப்பு ஜெமினி ஸ்டுடியோ அலுவலகத்தில் பணியாற்றிய அழகான ஒரு ஊழியர் ஒரு காட்சியில் நடித்திருந்தது. அவர்தான் பின்னாளில் காதல் மன்னன் என திரையுலகில் புகழ்பெற்ற ஜெமினி கணேசன்.

இரண்டாவது உலகப் போர் முடிந்து நாட்டில் பஞ்சம் நிலவிய இப்படம் வெளியான காலகட்டத்தில் ரேஷன் கடை அமலில் இருந்தது. உணவுத் தேவையில் கட்டுப்பாட்டை கொண்டுவந்த இந்த அவலத்தை கிண்டல் செய்து பாடல் எழுதியிருந்தார் கொத்தமங்கலம் சுப்பு...
‘காலையில எழுந்திரிச்சு
கட்டையோட அழுவணும்’
‘சக்கரைக்குக் கியூவில போய்
சாஞ்சுகிட்டு நிக்கணும்
சண்ட போட்டு பத்து பலம்
சாக்கட மண் வாங்கணும்’- என்ற அந்தப்பாடல் அன்றைக்கு மக்கள் மத்தியில் வெகு பிரபலமாயிற்று. தொடர்ந்து ‘ஞான சௌந்தரி’ யில் வசனம் எழுதியிருந்தார். இதையடுத்து வி.நாகையா நடித்த ‘சக்ரதாரி’ என்கிற படத்தில் பாடல்களை எழுதியிருந்தார்.

இந்த ஆண்டில் ஜெமினியின் ‘சந்திரலேகா’ வெளியாகி அதன் வெற்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் அசைத்துப்பார்த்தது. இப்படத்தில் மூன்று வசனகர்த்தாக்களில் கொத்தமங்கலம் சுப்புவும் ஒருவர்.

எம்.கே.ராதா இரட்டை வேடத்தில் நடித்த ஜெமினியின் சிறந்த படங்களில் ஒன்றான ‘அபூர்வ சகோதரர்கள்’ அன்றைக்கு பேசப்பட்ட படம். ‘கார்சிகன் பிரதர்ஸ்’ என்கிற ஆங்கில நாவலான இந்தப்படத்தில் சுப்பு சில பாடல்களை இயற்றியிருந்தார். இது ஜெமினியின் மகத்தான வெற்றிப்படங்களில் ஒன்று. 1949-ல் வெளிவந்தது.

1951 இல் ‘சம்சாரம்’ படத்திலும் சுப்பு உருக்கமான பாடல்களை எழுதியிருந்தார். ‘அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே’ என்கிற இப்படப்பாடல் தமிழ்நாட்டின் பிச்சைக்காரர்களை திரும்பத் திரும்ப தியேட்டருக்கு அழைத்துவந்தது எனலாம். 1955-ல் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘வள்ளியின் செல்வன்’ படத்தினை இயக்கியிருந்தார் சுப்பு. ஜெமினியின் வெற்றிப்படங்களில் ஒன்று இது.

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்துக்குப் பிறகு ஜெமினி நிறுவனத்திலிருந்து சற்று விலகி விகடனில் எழுத ஆரம்பித்தார். கலைமணி என்ற பெயரில் அவர் எழுதிய கதைகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. விகடனின் அவரது மாஸ்டர் பீஸ் ‘தில்லானா மோகனாம்பாள்’. அது வெளிவந்த காலத்தில் ஆனந்தவிகடன் பரபரப்பான விற்பனையானது. திரையுலகில் அவரது அத்தனை புகழையும் இந்த ஒற்றை நாவல் அவருக்கு அளித்தது.

தொடர்ந்து விகடனில் அவர் எழுதிய‘ராவ் பகதூர் சிங்காரம்’ என்னும் ஒரு தொடரும் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவை பின்னாளில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. இதில் ‘தில்லானா மோகனாம்பாள்’ நாவலைவிடவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தயாரிப்பின்போது நிகழ்ந்த ஓர் சம்பவம் வாசன் மற்றும் சுப்புவின் அரிய குணத்தை பறைசாற்றியது.

கொத்தமங்கலம் சுப்புவின் இந்த நாவலை ஜெமினி நிறுவனமே  தயாரிக்க இருந்த நிலையில்,  இயக்குநர் ஏ.பி நாகராஜன் சினிமாவாக தயாரிக்க முன்வந்தார். தானே அப்படி ஒரு திட்டம் வைத்திருந்த நிலையில் ஏ.பி.நாகராஜனின் ஆர்வத்தைக் கண்டு அவருக்கு விட்டுக்கொடுத்தார் ஜெமினி அதிபர் வாசன். ஆரம்ப காலங்களில் சமூகப் படங்களை எடுத்து பின்னாளில் திருவிளையாடல் உள்ளிட்ட படங்களை எடுத்து புகழ்பெற்றவர் ஏ.பி நாகராஜன். அவரது ஆசைக்கு குறுக்கே நிற்காமல், அந்த படத்தின் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார்  வாசன்.

உண்மையில் அந்த நாவலின் உரிமை கொத்தமங்கலம் சுப்புவிடம் இருந்தது. ஆனந்த விகடனில் இடம்பெற்றதால் வாசன், சுப்புவின் அனுமதியுடன் அதை ஏ.பி.என்- க்கு விட்டுக்கொடுத்தார். இங்கு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை குறிப்பிடவேண்டும்.

வாசனின் அனுமதி கிடைத்தவுடன் நேரே ஏ.பி.என் கார் சென்றது கொத்தமங்கலம் சுப்புவின் வீட்டுக்கு. சுப்புவை வணங்கிவிட்டு, நாவலின் ஆசிரியர் என்ற முறையில் 10 ஆயிரம் ரூபாய்க்கான செக் ஒன்றை சுப்புவிடம் நீட்டினார் ஏ.பி. என்.

ஆனால் அதை வாங்க மறுத்த சுப்பு,  "நீங்கள் வருவதற்கு கொஞ்சநேரம் முன்புதான் வாசன் அவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கான செக் வந்தது. அதனால் நீங்கள் எனக்கு தனியே எதுவும் தரவேண்டாம்“ என்றார். ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றார் ஏ.பி.என்.

எழுத்தாளரின் மதிப்பை உணர்ந்து சினிமா உரிமை கொடுத்த பின் கொஞ்சமும் தாமதிக்காமல் எழுத்தாளருக்கான சன்மானத்தை கொண்டு சேர்த்த வாசனை பாராட்டுவதா அல்லது, தனக்குரிய பணம் வந்த தகவலை மறைக்காமல் இவ்வளவு பெரிய தொகையை வாங்க மறுத்த சுப்புவை பாராட்டுவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துபோனார் ஏ.பி. என்.

1960-ல் ‘இரும்புத்திரை’ ஏவிஎம் நிறுவனத்தாரின் ‘களத்தூர் கண்ணம்மா’ 1965-ல் 'படித்த மனைவி' உள்ளிட்ட சில படத்துக்கு வசனம் எழுதினார். சில படங்களில் தலைகாட்டினார்.

1970-க்குப்பிறகு முற்றாக திரையுலகில் இருந்து விலகினார். 1967-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1971-ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது தந்து கொத்தமங்கலம் சுப்புவை கவுரவித்தது.

வில்லுப்பாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் காந்திமகான் கதையை இவர் வில்லுப்பாட்டு மூலமாக தமிழகம் முழுவதும் நடத்தினார்.

 

கொத்தமங்கலம் சுப்பு பங்கேற்ற படங்கள்....

1.அனாதைப்பெண்- நடிப்பு 1938 
2. அதிர்ஷ்டம்- நடிப்பு 1939
3. சாந்த சக்குபாய் -வசனம், நடிப்பு 1939
4. அடங்காப்பிடாரி -நடிப்பு 1939 
5. சுகுண சரசா -நடிப்பு 1939 
6. பக்த சேதா -நடிப்பு 1940
7. சூர்ய புத்ரி- நடிப்பு 1941
8. மதனகாமராஜன் -நடிப்பு 1941
9. நந்தனார் - நடிப்பு (ஜெமினி) 1942
10. பக்த நாரதர் -நடிப்பு 1942
 11. தாசி அபரஞ்சி - கதை, வசனம், பாடல், நடிப்பு (ஜெமினி) 1944
12.  கண்ணம்மா என் காதலி- வசனம், இயக்கம் (ஜெமினி) 1945
13. மிஸ் மாலினி- வசனம், இயக்கம் (ஜெமினி) 1947
14. ஞான சௌந்தரி -வசனம் (கூட்டாக) 1948 
15.  சந்திரலேகா- வசனம் (கூட்டாக) (ஜெமினி) 
16. அபூர்வ சகோதரர்கள்- பாடல் (ஜெமினி) 1949
17. சம்சாரம் -பாடல் (ஜெமினி) 1951
 18. மூன்று பிள்ளைகள் -பாடல் (ஜெமினி) 1952 
19. ஔவையார்- திரைக்கதை, பாடல், இயக்கம், நடிப்பு (ஜெமினி) 1953
20. வள்ளியின் செல்வன்- திரைக்கதை, நடிப்பு, இயக்கம் (ஜெமினி) 1955
21. வஞ்சிக்கோட்டை வாலிபன் -வசன பாடல், நடிப்பு (ஜெமினி) 1958
22. இரும்புத் திரை -வசனம், பாடல் (ஜெமினி) 1960
 23. களத்தூர் கண்ணம்மா -பாடல் (ஏவிஎம்) 1960
24. படித்த மனைவி வசனம் -(கூட்டாக) 1965
25. தில்லானா மோகனாம்பாள் -கதை 1968
26. விளையாட்டுப் பிள்ளை 1970
27. சக்ரதாரி பாடல் (ஜெமினி) 1948

திரையுலகிலிருந்து முற்றாக விலகி ஓய்விருந்த கொத்தமங்கலம் சுப்பு, 1974-ம் ஆண்டு பிப்ரவரி 15 ந்தேதி தனது 63 வயதில் மறைந்தார். தமிழ்த் திரையுலகின் ஆரம்ப கால வளர்ச்சியில் பங்களிப்பு செய்த திரையுலக முன்னோடிகளில் கொத்தமங்கலம் சுப்புவுக்கு தனியிடம் உண்டு.

Courtesy-Malaichamy Chinna C



#*திராவிடம்*, #*தமிழ்தேசியம்*, #*விசால பாரத்*

#*திராவிடம்*,  #*தமிழ்தேசியம்*, 
#*விசால பாரத்* என்று பேசப்படுகிறது! இவை குறித்த இன்றைய பின்நவீனத்துவம் நிலையில் மறுவாசிப்பிற்குத் தேவைப்படும் கட்டுரைகள் வரவேற்கப்பட்ட நிலையில் கட்டுரைகள் சில வந்துள்ளன .
இக்கட்டுரைகள் ஒரு முழு நூலாக தொகுக்கப்பட்ட பின் சென்னையில் ஒரு கருத்தரங்கு நடத்தி அவற்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

மேலும் மேற்குறித்தக் கட்டுரைகளைக் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்கிறோம்.

rkkurunji @mail.com

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
15-2-2025

Monday, February 10, 2025

#பெரியார்பிரபாகரன்சர்ச்சைகள் #இன்றையதிமுகவின்நிலைப்பாடுகள் #கடந்தகாலஅரசியல் #விஜய்அரசியல் #திருப்பரங்குன்றம்

*இன்றைய 10 2 2025 இந்து தமிழ் திசையில் பெரியார் பிரபாகரன் சர்ச்சைகள்! இன்றைய திமுகவின் நிலைப்பாடுகள்! கடந்த கால அரசியல் வரலாறுகள்! மற்றும் திருப்பரங் குன்றம்  குறித்த என் விரிவான பேட்டியுடன் வந்துள்ளது.
அதற்கான முழுப் பதிவும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது*.

மாற்று அரசியலுக்காக விஜய் வரட்டும்!
வரவேற்கும் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

டி.கார்த்திக்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்துவிட்டாலும் தேர்தல் களத்தில் பெரியார், பிரபாகரன், திராவிடம் பற்றி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன் வைத்த விமர்சனங்கள் இன்னமும் சூடான விவாதத்தில் இருக்கின்றன. இந்நிலையில், அரசியலாளரும் பிரபாகரனுக்கு நன்கு பரிச்சயமானவரும் ‘கதைச் சொல்லி’ ஆசிரியருமான வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி இது.
பெரியாரையும் பிரபாகரனையும் எதிரெதிராக நிறுத்தும் சீமானின் அரசியலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
1978 முதல் 1980 வரை இலங்​கைக்​கும் தமிழகத்​துக்​கும் போக வர இருந்​தார் பிரபாகரன். 1981 முதல் 1987-ல் இலங்கை - இந்தியா ஒப்பந்தம் ஏற்படும் வரை தமிழகத்​தில் இருந்​தார். தமிழகத்​தில் நான், நெடு​மாறன் உள்பட நான்​கைந்து பேர்​தான் பிரபாகரனுக்கு அறிமுக​மாகி​யிருந்​தோம். தன்னுடைய போராட்ட உத்தி​கள், வாழ்க்கை முறையைப் பற்றியெல்​லாம் தினசரி அவர் என்னோடு பேசி​யதுண்டு. 10 ஆண்டு​காலம் அவருடன் பழக்​கவழக்கம் உண்டு. பிறகு நானும் வவுனி​யா​வுக்கு சென்​றிருக்​கிறேன். அப்போதெல்​லாம் பெரியார் பற்றி பிரபாகரன் பேசி​ய​தில்லை. எதிர்​வினை​யாற்றிய​தில்லை. எம்ஜிஆரை மலை போல் நம்பி​னார். அவர் திராவிட இயக்​கத்​தின் தலைவர்​தானே. மு.கருணாநி​தியை எனது திரு​மணத்​தில் சந்தித்​துப் பேசி​னார். எனக்​குத் தெரிந்து திராவிட இயக்​கங்கள் பற்றியோ அதன் தலைவர்கள் பற்றியோ பிரபாகரன் குறை சொல்லி எதுவும் பேசி​ய​தில்லை. ஆனைமுத்து தொகுத்து எழுதிய ‘பெரி​யார் சிந்​தனை​கள்’ பற்றிய 3 தொகு​திகளை பிரபாகரன் வாங்​கிச் சென்​றார். பிரபாகரன் சென்னை​யில் உண்ணா​விரதப் போராட்டம் நடத்​தி​ய​போது, அப்போ​ராட்​டத்தை கி.வீரமணி​தான் பழச்​சாறு கொடுத்து முடித்து வைத்​தார். திராவிட தலைவர்​களோடு முரண் இருந்​தால், கி.வீரமணி வேண்​டாம் என்று சொல்​லி​யிருப்​பார் அல்ல​வா? கோவை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி போன்ற பெரியாரிஸ்டுகளும் அவரோடு நெருக்கமாகத்தான் இருந்தனர்.
பெரியாரை சரமாரியாக சீமான் விமர்சிக்கும் நிலையில், அதற்கு திராவிட இயக்கங்கள் சரியாக எதிர்வினையாற்றியதாக நினைக்கிறீர்களா?
எ​திர்​வினை எங்கே ஆற்றி​னார்​கள்? அங்கு​தான் (திமுக) தகுதியான ஆட்களை வைத்​துக் கொள்ள​மாட்​டார்​களே. தகுதி​தான் அங்கு தடை. நானும் அங்கிருந்து வெளி​யேற்​றப்​பட்​ட​வன்​தானே. இப்போது திமுக-​வில் இருப்​பவர்​களுக்கு திமுக-​வின் வரலாறு தெரி​யுமா? திரா​விடம் என்று பெயர் வைத்​தவர்கள் யாரென்று இவர்​களுக்​குத் தெரி​யுமா? இந்து மதம் சம்பந்​தப்​பட்​ட​வர்கள் வைத்த பெயர்​தான் திரா​விடம். இதைச் சொல்​லக்​கூடிய​வர்கள் இன்று திமுக-​வில் யார் இருக்​கிறார்​கள்? இன்றைய திமுக-​வில் சிந்​தனை​யாளர்​களுக்கு வேலை இல்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது எங்களைப் போன்றவர்கள் முட்டு கொடுக்க வேண்டும். திமுகவை எதிர் முகாமிலிருந்து திட்டிக் கொண்டிந்தவர்கள், திமுக ஆளுங்கட்சியான பிறகு இந்திரனே, சந்திரனே என்று பேசுகிறார்கள். இதெல்லாம் என்ன நியாயம் என்றுதான் தெரியவில்லை. அதனால்​தான் இன்று யார் வேண்​டு​மா​னாலும் திராவிட இயக்​கங்​களைப் பற்றி பேசலாம் என்றாகி​விட்​டது. தகுதி​யானவர்கள் இருந்​திருந்​தால் சரியாக எதிர்​வினை​யாற்றி​யிருப்​பார்​கள். ஒரு காலத்​தில் அற்புத​மாகப் பேசக்​கூடிய தலைவர்கள் திமுக-​வில் இருந்​தார்​கள். இன்றோ ஓட்டுக்கு காசு, லஞ்சம் வாங்​குபவர், தொடர்ந்து எம்எல்ஏ, வெள்ளை வேட்டி, சட்டை அணிந்​து​கொண்டு பெரிய காரில் முரட்டுத்​தனமாக ஹாரன் அடிப்பவர்கள் இருந்​தால் போதும் என்றாகி​விட்டது. இதுதான் இன்றைய திமுக நிலை. அதனால்​தான் மாற்று அரசியல் வேண்​டும் என்று நினைக்​கிறோம்​.
நீங்கள், நெடுமாறன் போன்றவர்கள் பிரபாகரனுடனும் நெருக்கமாக இருந்தவர்கள். சீமான் பேசும் விஷயங்களில் உள்ள உண்மை தன்மை உங்களுக்குத் தெரிந்திருக்குமே..?
அவர் (சீமான்) அங்கு (இலங்கை) இருந்ததே சில நிமிடங்​கள்​தான். மகேந்​திரன் உள்ளிட்ட இயக்​குநர்கள் பிரபாகரனை சந்திக்கச் சென்​றார்கள் அல்லவா? அந்த அணியில் இருந்​தவர்​தான் சீமான். ஒரு 5 - 10 நிமிடங்​கள்​தான் அவர் பிரபாகரனைச் சந்தித்​திருப்​பார். தமிழகத்​தில் பிரபாகரனை யாருமே அறியாதவர்கள் போல் சீமான் பேசுகிறார். தமிழ்​நாட்​டில் முன்​பைப் போல நாகரிக அரசியல் இல்லை. முன்பு கண்ணியம் இருந்​தது. பிரபாகரனை பார்க்காத ஆட்கள் எல்லாம் அவரைப் பற்றி இணையத்​தில் எழுதுகிறார்​கள். நாம் ஏதும் மறுத்​துப் பேசி​னால் ஆபாச​மாக, கீழ்​தரமாக விமர்​சிக்​கிறார்​கள். ஒருவர் சொன்னதை இட்டுக் கட்டி 100 பேர் பேசி​னால், அது உண்மை​யாகி​விடு​கிறது. இதற்​கெல்​லாம் அஞ்சியே நாங்கள் அமைதியாக இருக்​கிறோம்​.
இலங்கையின் தமிழ் தேசியம் வேறு. அதை தமிழ்நாட்டில் பின்பற்ற முடியாது என்று ஈழத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் சொல்கிறார்கள். பிரபாகரனின் தமிழ்த் தேசியம் என்றுதானே சீமான் இங்கு பேசுகிறார். அதுபற்றி உங்கள் பார்வை?
தமிழ்த் தேசியம் எந்தக் கோட்​பாட்​டில் இயங்க வேண்​டும் என்கிற கர்த்​தாவை உருவாக்​கியவர்கள் வள்ளலார், மறைமலை​யடிகள், திரு.​வி.க. நாவலர் சோமசுந்தர பாரதி ஆகியோர்​தான், 1930-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்​டத்​தில் பங்கேற்ற சோமசுந்தர பாரதி நடைபயணமாக சென்னை பொதுக் கூட்​டத்​துக்கு வந்தார். அந்தக் கூட்​டத்​துக்கு நீலாம்பரி அம்மை​யார் தலைமை தாங்​கி​னார். பெரி​யாரும் அந்தக் கூட்​டத்​துக்கு வந்தார். அந்தக் கூட்​டத்​தில்​தான் பெரி​யார் என்கிற பட்டம் கொடுக்​கப்​பட்​டது. இந்தியா​வில் பல்வேறு தேசிய இனங்கள் இருக்​கின்றன. பல்வேறு மொழிகள், மாறு​பட்ட சீதோஷ்ண நிலைகள், மாறு​பட்ட பழக்​கவழக்​கங்​கள், கலா​சா​ரங்கள் இருக்​கின்றன. தமிழ் கலாச்​சா​ரம், தமிழர்​களின் தேசிய தன்மை பாதுகாக்​கப்பட வேண்​டும் என்று இந்தியா​வில் தமிழ்த் தேசியம் ஆரம்​பிக்​கப்​பட்​டது.
இலங்​கை​யில் சிங்​களம், தமிழ் என இரண்டே இனங்​கள்​தான். தமிழர்​களுக்கு உரிமைகள் வழங்​கு​வதாக ஒன்பது ஒப்பந்​தங்களை பல்வேறு சிங்கள அரசுகள் போட்டன. தமிழ் அடையாளம், கலா​சா​ரம், சம உரிமைகள் பாதிக்​கப்​ப​டாமல் காப்​போம் என்று சொன்​னார்​கள். ஆனால், இவையெல்​லாம் நிறைவேற்​றப்​பட​வில்லை. பிறகு​தான் வட்டுக்​கோட்​டை​யில் தந்தை செல்வா தலைமையில் தமிழரசு கட்சி தீர்​மானம் நிறைவேற்றியது. இனி சிங்​களர்​களோடு வாழ முடி​யாது. நாம் ஒரு தனி தேசிய இனம். தனி நாடு, தனி வாழ்வு இவற்றை முன்னிறுத்த வேண்​டும் என்று சொல்​லித்​தான் இலங்​கை​யில் தமிழ்த் தேசியம் முன்னெடுக்​கப்​பட்​டது. இதனாலேயே ஈழ மக்களின் ஆதரவுடன் தேர்தலில் தமிழரசுக் கட்சி 18 எம்பிக்களைப் பெற்றது. அங்கிருக்​கும் தமிழ்த் தேசியம் வேறு. இங்கிருக்​கும் தமிழ்த் தேசியம் வேறு. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்​டும்​.
தமிழ்த் தேசியமும் திராவிடமும் எங்களுக்கு இரண்டு கண்கள் என்று விஜய் சொல்கிறார். அது இரண்டும் வேறு வேறு என்கிறாரே சீமான்..?
தமிழ் நாட்​டைப் பொறுத்​தவரை திரா​விட​மும் தமிழ்த் தேசி​ய​மும் ஒன்றோடொன்று பிணைந்​து​தான் செல்​கிறது. அந்தக் காலத்​தில் தமிழ்​நாட்​டில் தமிழ்த் தேசியம் பேசி​ய​வர்கள் பெரி​யாருடன் மாறு​பட்டு நிற்​க​வில்​லை.
சில நேரத்தில் உங்களுடைய பதிவுகள் விஜய்க்கு ஆதரவாக இருப்பது போன்று தெரிகிறது. நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறீர்கள். விஜய்யின் அரசியல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழ் நாட்​டில் ஒரு மாற்று அரசியலை கொண்டு வர வேண்​டும் என திமுக-வை உருவாக்கி ஊர் ஊராகச் சென்று, பொதுக்​கூட்​டங்​களில் பேசி 15 ஆண்டு​களில் திமுக-வை ஆட்சிக்​குக் கொண்டு வந்தவர் அண்ணா. 60 ஆண்டு​களுக்​குப் பிறகு பல பிழைகளும் தவறுகளும் மக்கள் விரோத செயல்​பாடு​களும் இந்த இயக்​கத்​தில் தெரி​கின்றன. இப்போது ஒரு மாற்று அரசியல் தேவை. தமிழ்த் தேசி​ய​மும் திரா​விடத்​தை​யும் ஒன்று கலந்து எடுத்​துச் செல்​வேன் என்று விஜய் சொல்​கிறார். இதில் எந்தப் பிழை​யும் இல்லை. மாற்று அரசி​யலுக்காக விஜய் வரவேண்​டும். அவருக்கு வாழ்த்து​கள்​.
கடந்த காலங்களில் திமுக - மதிமுக என மாறியிருக்கிறீர்கள். உங்களை மீண்டும் திமுக அழைத்தால் செல்வீர்களா?
என்னை அழைக்​க​மாட்​டார்​கள். அதற்கு நான் தயாரும் இல்லை. மதிமுக என்கிற இயக்​கத்​தின் நிறுவன தலைவர்​களில் நானும் ஒருவன். வைகோ எனக்கு எதுவும் செய்ய​வில்லை. ஆனால், அந்த இயக்​கத்தை கட்டமைக்க நான் பட்ட கஷ்டம் எனக்​குத் தெரி​யும். என் இளமை, என் காலம், வழக்​கறிஞர் தொழில் ஆகிய​வற்றை இழந்​து​தான் வைகோவுக்கு உறுதுணையாக இருந்​தேன். நான் எல்லா அரசி​யலை​யும் பார்த்து​விட்​டேன். ஏதாவது ஒரு கட்சி​யில் இருந்​தால் என்னால் ஒரு நியா​யத்தை எழுத முடி​யுமா?
எனக்​குப் படிப்​ப​தற்​கும் எழுது​வதற்​குமே நேரம் இல்லை. நான் எப்போதும் மனதில் பட்டதை பேசுபவன். காமராஜர் காலத்​திலிருந்து அரசி​யலில் இருக்​கிறேன். என் அரசியல் அனுபவ வயது இல்லாதவர்​களிடம் இன்று என்னால் எப்படி கூழைக் கும்​பிடு போட முடி​யும்​?
இன்னும் ஒரு சில மாதங்களில் பிரபாகரனும் பொட்டு அம்மானும் வர இருக்கிறார்கள் என்று சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருந்தீர்கள். பிரபாகரன் குறித்து அவ்வப்போது வரும் தகவல்கள் போன்றதுதானா இது?
எனக்​கும் நெடு​மாறனுக்​கும் விடு​தலைப் புலிகள் பற்றிய எல்லா விஷயங்​களும் தெரி​யும். அதற்​காக, முன்​னாள் பிரதமர் ராஜிவ் படுகொலையை நாங்கள் நியாயப்​படுத்​தவில்லை. இந்தப் படுகொலையை அவர்கள் (விடு​தலைப் புலிகள்) செய்ய​வில்லை என்று நாங்கள் சொல்லி வருகிறோம். விடு​தலைப் புலிகளும் இதை அன்றே மறுத்து​விட்​டார்​கள். இலங்​கை​யில் உள்ள மக்கள் ஒரு குடை​யின் கீழ் வர வேண்டு​மென்​றால் பிரபாகரன் வந்தால்​தான் வருவார்​கள். நிச்​சயம் பிரபாகரன் வருவார். அதற்கான தடைகள் இந்தியா​வில் இருக்​கிறது. அப்படி வரும்​போது பிரதமர் மோடிக்​கு​தான் பிரபாகரன் கடிதம் எழுது​வார்​.
திருப்பரங்குன்றம் மலையை வைத்து நடைபெறும் சர்ச்சைகளைத் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவராக எப்படி பார்க்கிறீர்கள்?
​திருப்​பரங்​குன்றம் ஆர்ப்​பாட்​டத்​தில் பங்கேற்​றவர்கள் பாஜக-வைச் சேர்ந்​தவர்கள் அல்ல. இந்து அமைப்பு​களுக்கு தமிழகத்​தில் இவ்வளவு பெரிய செல்​வாக்கா இருக்​கிறது? அது தானாகக் கூடிய கூட்​டம். ஒரு மணி நேரத்​தில் இவ்வளவு கூட்டம் என்றால், பாஜக தலைவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கூட்டி வந்த கூட்​டமா? பாஜக-வுக்காக இவ்வளவு கூட்டம் வருகிறது என்றால் அவர்கள் மக்கள​வைத் தேர்​தலில் வெற்றி பெற்றிருக்க வேண்​டுமே. இங்கு இந்துக்கள் பெரும்​பான்​மையாக இருக்​கிறார்​கள். தங்களுக்காக அவர்கள் திருப்​பரங்​குன்​றத்​தில் கூடி​யிருக்​கிறார்கள். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி​யைச் சேர்ந்த இந்துக்​களும் இதில் பங்கேற்றிருப்​பார்​கள். இந்துக்​களுக்கு விழிப்பு​ணர்வு இருக்​கிறது என்​பதை அரசு புரிந்​து​கொள்ள வேண்​டும்​. மதுரா விஜயம், கம்பணன் நூல்களைப் படித்தால் திருப்பரங்குன்றம் பற்றிய புரிதல் ஏற்படும்.




#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
10-2-2025.

Sunday, February 9, 2025

#கனிமொழி உங்கள் அண்ணன் ஆட்சியில் நடக்கின்ற அநீதிகளுக்கு நீங்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் மெழுகுவர்த்தி ஏந்தி நீதி கேட்டு போராட வேண்டும்... போராடுவீர்களா???

#கனிமொழி உங்கள் அண்ணன் ஆட்சியில் நடக்கின்ற அநீதிகளுக்கு நீங்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் மெழுகுவர்த்தி ஏந்தி நீதி கேட்டு போராட வேண்டும்...
போராடுவீர்களா???

#கிருஷ்ணகிரி - 8ம் வகுப்பு மாணவிக்கு 3 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை

#மணப்பாறை - ஆதிதிராவிடர் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை 

#மணப்பாறை - 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

#கிளாம்பாக்கம் - மேற்கு வங்க சிறுமிக்கு பாலியல் தொல்லை

#சென்னை - 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

#சேலம் - 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

#திண்டுக்கல் - அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

#திருப்பூர் - அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை 

#கரூர் - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

#மதுரை - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

#சங்கரன்கோவில் - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

#நாகர்கோவில் - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

#திருவள்ளூர் - 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

#மானாமதுரை - பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

#திராவிட_மாடல்_அரசு

#hilights 
#follower


#எனது சுவடுபகுதி 82 1980இல் காங்கிரஸை விட்டு நாங்கள் ஏன் வெளியேறினோம்?

#எனது சுவடுபகுதி 82 
1980இல் காங்கிரஸை விட்டு நாங்கள் ஏன் வெளியேறினோம்? | #Ksr | @ksrvoice 

தற்போது ஏறத்தாழ காங்கிரஸ் ஒரு இறுதி நிலைக்கு வந்துவிட்டது. விடுதலைக்கு முன் நேதாஜி பகத்சிங்  விடுதலைக்குப் பிறகு கிருபளானி ஜெயப்ரகாஷ் நாராயணன் உத்தரப்பிரதேசத்தில் முதல் பெண் முதலமைச்சர் ஆக இருந்த சுசிதா கிருபளானி அதேபோல் ராஜபாளையம் குமாரசாமி ராஜாவை தேர்தலில் வென்ற தமிழ்நாட்டின் முதல்ப் பிரிமியர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அது மட்டுமல்லாமல் இந்திராவின் உயிரை மதுரையில் காப்பாற்றிய பழ நெடுமாறன் வரையிலான பலரின் பாவங்களை அள்ளிக்கொண்டது தான்  இன்றைய சிதைந்த நிலையில் உள்ளஇந்தக் காங்கிரஸ். அதற்கான முடிவுரைகளைத்தான் சோனியா இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கிறார். சோனியாவால் பாரம்பரியமான சிந்தியா குடும்பம் பாதிக்கப்பட்டது. அதை ஒட்டி பல பூர்வீக செழுமையான காங்கிரஸ் பற்றுள்ள குடும்பங்கள் காலாவதி ஆக்கப்பட்டன. இறுதியில் ஈழத்தமிழர் விவகாரத்தில் பல்லாயிரத்திற்கு மேல்  லட்சம் பேர் கொல்லப்பட்டதற்கு பின்னணிக் காரணமாய் இருந்தது   இப்படியாகத் தொடர்ந்த காங்கிரஸின் பெரியண்ணன் போக்கால் அரசியலிலும் பன்னாட்டு உறவிலும் செய்த தவறுகளுக்குக் காலம்  இப்போது பழிவாங்குகிறது .. மீண்டும் காங்கிரஸின் புத்துயிர்ப்பிற்கான  எதிர்காலம் கண்ணுக்கு எட்டிய வரை காண முடியவில்லை.

#Sanjivareddy, #Sanjaygandhi, #Indiragandhi, #Janatagovernment, #kalaignar, #dmk,  #congress, #Charansingh, #Jagjivanram, #Nedumaran, #Tamilnaducongress, #Kamarajar,   #RVSwaminathan,

youtu.be/_vVyI2zfHnA?si…

ஈரோடுசட்டப்பேரவைஇடைத்தேர்தலில்….

#ஈரோடுசட்டப்பேரவைஇடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி இவ்வளவு வாக்குகள் வாங்கி இருப்பது எப்படிப் பார்த்தாலும் திமுகவின் மீதான அதிருப்தி வாக்குகள் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. வெற்றிக்கு ஆயிரம் காரணம் சொல்லுகிறார்கள்! ஒரு ஆளும் அரசுக்கு எதிர் முகாம் உருவாவது வெறும் ஜனநாயக பண்பு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக அது தவற விட்ட காரியங்களுக்கு ஆன விமர்சனமும் தான்.

சீமான் தனியாக நின்று இருமுனை போட்டி போட்டது மாதிரி இருந்தாலும் கூட அதன் அளவுகளுக்குள் மறைமுகமான பாஜக அதிமுக ஓட்டுகள் இருந்திருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளும் வேளையில் வருகிற எதிர்கால கூட்டணிகளுக்குள் இப்படியான பரஸ்பரங்கள் நிகழ இருப்பதற்கான முன்னறிவிப்பு தான் இந்தத் தேர்தல் என்றும் கூட வகைப்படுத்தலாம்.

ஏற்கனவே நான் துவக்கத்தில் சொன்னது போல அங்கே அதிமுக போட்டி போட்டு இருந்தால் வென்றிருக்கக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கும். ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு இவ்வளவு பணம் காசுகளைக் கொடுத்த பிறகும் நாம் தமிழர் கட்சி இவ்வளவு வாக்குகளை வாங்கி இருக்கிறது என்றால் எவ்வளவு எதிர்வினைகள் திமுகவின் மீது மக்களுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! எதுவும் நிரந்தரமல்ல காலங்களும் வினைகளும் கூடும்போது காட்சிகள் மாறிவிடும்!

சாதனை படைத்த நோட்டா
2023 இடைத்தேர்தலில் 798 வாக்குகளே நோட்டாவுக்கு கிடைத்தன. அதுவே, 2025 இடைத்தேர்தலில் 6,079 (3.94%) வாக்குகள் பதிவாகி உள்ளன. 
 பொதுவாக இடைத்தேர்தலில் நோட்டாவை மக்கள் நாடுவதில்லை. திமுக ஆட்சி மீது விவசாயிகள், அரசு உழியர்கள், உழைப்பாளர்கள், பால் விலை,
மின்கட்டணம் என மக்களின் பிரச்னை என இச் சூழ
லில்அவர் 20,000 கடந்ததை வியப்பாக கூறுகின்றனர்.. மீது அதிருப்தி அடைந்த பலர், அதை எதிர்த்த வேட்பாளரை ஆதரிக்காமல் நோட்டாவை நாடியுள்ளனர்! #ErodeEastByPolls2025 #ErodeEast

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
9-2-2025

You must first be who you really are and use time wisely spend it on activities that advance your overall purpose in life,

You must first be who you really are and use time wisely spend it on activities that advance your overall purpose in life, then do what you need to do, in order to have what you want. You may encounter many defeats, but you must not be defeated. In fact, it may be necessary to encounter the defeats, so you can know who you are, what you can rise from, how you can still come out of it..Be brave and be yourself.. 

#ksrpost
9-2-2025.


#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...