Thursday, March 19, 2026

Cochin jan 3

 Cochin (now officially Kochi) in the 1930s—mapped as a vital port on the Malabar coast, connected by railways, steamer routes, and forest tramways that linked the interior of southern India with maritime trade routes.




#வீரபாண்டியகட்டபொம்மன் jan 3

#வீரபாண்டியகட்டபொம்மன் (Veerapandiya Kattabomman, 3 ஜனவரி 1760 - 16 அக்டோபர் 1799), தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர்.ராஜ கம்பளம் நாயக்கர்…  

#VeerapandiyaKattabomman was an 18th-century Palayakarrar and king of Panchalankurichi in present-day Tamil Nadu, India. He fought the British East India Company and was captured by the British with the help of the ruler of the kingdom of Pudukottai, Vijaya Raghunatha Tondaiman, and at the age of 39 he was hanged at Kayathar on 16 October 1799. He belongs to the Thokalavar sub-sect of the Rajakambala Nayakkar community. 




jan 3

 facebook.com/share/v/17hq4n


பழைய ஓய்வூதிய திட்டம் jan 3

 #ஸ்டாலினின்பழையஓய்வூதியதிட்டம்

#பம்மாத்துஅரசியல் பழைய ஓய்வூதிய திட்டம் போல மீண்டும் நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். போன 2021 தேர்தலின் போது அறிவிக்கப்பட்டு இன்றோடு நான்கு அரை வருடங்கள் முடிந்து விட்டது திடீரென்று இப்பொழுது வந்து பழைய ஓய்வு திட்டத்தை ஏன் அறிவிக்கிறார். இன்னும் சில மாதங்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் தினத்தை அறிவிக்க உள்ள நிலையில் இந்த வாக்குறுதி மீண்டும் சொல்லப்படுகிறது. சரி இந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் எப்பொழுது அமல்படுத்துவார்.? எப்போது கிடைக்கும்? அரியர்ஸ் உண்டா? என்பதற்கான உத்தரவாதங்களையும் சேர்த்துத்தான் சொல்லி இருக்கிறாரா?அது எந்தத் தேதியில் அறிவிக்கப்படும் என்பதையாவது அவர் உத்தரவாதப்படுத்தி இருக்கிறாரா?. இந்த வாக்குறுதியை அமுல்படுத்தப் போவது தேர்தலுக்கு முன்பே வா தேர்தலுக்கு பிறகா! இப்படி ஆசை காட்டி மோசம் செய்து கொண்டே வருவதுதான் உங்களின் திராவிட மாடலா? இதை எதற்கு கேட்க வேண்டியதிருக்கிறது என்றால் 2021 தேர்தலில் மேடை மேடையாகப் போட்டு இந்த வாக்குறுதியை கொடுத்தார்கள். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் வரும் என்று சொல்லியே வாக்குகளை வாங்கினார்கள்.நான்கரை ஆண்டுகள் முடிந்து விட்டது! மறுபடியும் தேர்தல் வருகிற நேரத்தில் அதே பொய்யைச் சொல்லி மீண்டும் வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்றால் இங்கு என்ன வகையான மோசடி நிகழ்கிறது. அரசு ஊழியர்களை முட்டாள்கள் என்று நினைக்கிறாரா முதல்வர்.? இதற்காக போராடடி வருகிற அரசு ஊழியர்கள் இப்போது வந்து முதல்வர் சொல்லும் இந்த வாக்குறுதியை இன்னும் நம்புகிறார்களா? ஆட்சிக்கு வந்த உடனே அமுல்படுத்துவோம் என்று சொன்னதை செய்யாமல் இத்தனை நாள் தூங்கிக் கொண்டிருந்தாரா முதல்வர்? எல்லாம் ஏமாற்றுகிற பம்மாத்து வேலைகள். சொன்னதைச் செய்வோம் சொல்லாதையும் செய்வோம் என்கிற வெறும் வாய்ச்சவடாலுக்கு ஒன்றும் குறைவில்லை. எப்படியும் பணத்தை கொடுத்து ஓட்டை வாங்கி விடலாம் என்று மமதையோடு இருக்கும் இந்த திமுக ஆட்சி ஒழிந்தால் தான் மக்களுக்கு உண்மையான விடிவு காலம் பிறக்கும். 500 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டை போட்டுவிட்டு ஐந்து ஆண்டு காலம் அவர்கள் வளம் கொழிக்க வீடு மனை நிறுவனங்கள் வாங்கவும் அவர்களின் அதிகாரத்திற்கு இந்த தேர்தலை பயன்படுத்துவதும் சரிதானா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். வைகோ போன்ற கூலிகள் திமுக ஆட்சியால் தான் தமிழ்நாட்டுக்கு பொற்காலம், விடிவு காலம் பிறந்து இருக்கிறது என்று சொல்லுகிற அளவிற்கு அங்கே கிடந்து உழன்று தனக்கான வாரிசு அரசியலைக் காப்பாற்றிக்கொள்கிறார் என்றால் கொள்கைகள் கோட்பாடுகள் தத்துவங்கள் போராட்டங்கள் யாவும் விலைக்கு வாங்கப்பட்டு விட்டது என்று தானே அர்த்தம். மதுவிலக்கு நடை பயணம் போக இருக்கிறார் வைகோ!அவருக்கும் இந்த திமுக அரசு அதாவது அண்ணன் ஸ்டாலினும் தங்கை கனிமொழியும் அடுத்த தேர்தலில் மது விலக்கைக் கொண்டு வந்து தமிழகப் பெண்களை விதவைகளாகும் நிலைக்கு தள்ள மாட்டோம் விடமாட்டோம் என்று மேடைக்கு மேடை வாக்குறுதி அளிப்பார்கள். நம்பி ஏமாந்து கிடக்க வேண்டி தான் நம் தலையெழுத்து. #பழையஓய்வூதியதிட்டம் #தமிழகஅரசியல்





jan 3


 

Rani Velu Nachiyar jan 3

 Heartfelt tributes on the birth anniversary of Veeramangai Rani Velu Nachiyar, the brave warrior queen who fought courageously against British colonial rule and earned everlasting glory as a symbol of Nari Shakti, valour, and resistance -

#RaniVeluNachiyar



political sarcasm. jan 3

 Oh ! Surprising , enjoyable political satires and political sarcasm..

வேடிக்கை ⁉️

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...