Tuesday, January 26, 2016

மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்


இன்றைக்கு அரக்கோணத்தில் நடந்த வீர வணக்க நாள் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் தங்கவேலுவும் நானும் கலந்துகொண்டோம். பலருக்கு தெரியாத செய்தியாக சொல்லும்போது ஆர்வமாக கேட்டார்கள். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 12.2.1965 அன்று இந்தி போராட்டங்களின்போது 500 பேருக்கு மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர். பொள்ளாச்சி நகரமமே போர்களமாகியது. சுடப்பட்ட மொழிப்போர் தியாகிகளின் உடல்களை குவியல் குவியலாக பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே ராணுவத்தால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டன. ஆனால் அரசுத் தரப்பில் அப்போது 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாக பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டது. மனிதாபிமானமில்லாமல் கண்ணியமற்ற முறையில் காட்டுமிராண்டிதனமாக 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு மனதை வேதனைப் படுத்துகிறது. இதுவரை இந்த பொள்ளாச்சி சம்பவம் பலர் அறியாத செய்தியாக உள்ளது. அவர்களுக்கு வீர வணக்கம். 

திரு தங்கவேல் எம்.பி. அவர்கள் பேசும்போது, இலங்கை தமிழர்கள் போராட்டத்தில் கைதியாக பாளையங்கோட்டை சிறைக்கு சென்றபோது, சிறப்பு அனுமதி வாங்கி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தலைவர் கலைஞர் அடைக்கப்பட்ட சிறை கொட்டடியை பார்க்கும்போது எங்களையே நாங்கள் மெய்மறந்தோம். அதுதான் பேரறிஞர் அண்ணா அவர்கள் என்னுடைய தம்பி இருக்கும் பாளையங்கோட்டை சிறைச்சாலைதான் என்னுடைய யாத்திரை ஸ்தலம் என்று சொன்னது முற்றிலும் சரியானது என்று எங்களுக்கு மனதில் அப்போது பட்டது. அந்த சிறையில் நூறு அறைகளுக்கு மேல் இருந்தன. அதில் ஒரு சிறையில்தான் கலைஞர் அடைக்கப்பட்டிருந்தார். மற்ற அறைகள் எல்லாம் யாரும் அடைக்கப்படாமல் காலியாக இருட்டாக மனித நடமாட்டம் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் இருந்தார். அந்த அறையில் தலைவர் கலைஞர் தனிமையில் வாடியதை கேள்விபட்டபோது எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது என்று வீர வணக்க நாளில் பேசியபோது கூட்டத்தில் இருந்தவர்கள் மிகவும் வேதனையோடு கவனித்தனர்.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்

No comments:

Post a Comment

வேலுப்பிள்ளை பிரபாகரன்- Velupillai Prabhakaran

https://youtu.be/WrNmTFAoFw8?si=xJMjMucIKPf6JUWQ