Saturday, January 14, 2017

லேன்ட் மார்க்(Landmark)சென்னை

லேன்ட் மார்க்(Landmark)சென்னை 
-------------------------------------
லேன்ட் மார்க் , சென்னை - நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் கடந்த 1/1/1987ல்  தொடங்கப்பட்டது .அரிய நூல்கள் சென்னை நகர மக்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கே  கிடைக்க கூடிய புத்தக அங்காடியாக திகழ்ந்தது . 

வெளிநாட்டில் வெளியிடப்பட்ட நூல்கள் இங்கு எளிதில் கிடைக்கும் . பரந்த பரப்பில் அமைந்த அங்காடி அனைத்து துறை சம்மந்தமான நூல்கள் இங்கு கிடைக்கும் .  
துவக்கப்பட்ட நாளில் இருந்து அந்த புத்தக கடையின் வாடிக்கையாளராக இருந்தவன் என்ற நிலையில்,அந்த கடை மூடபட்டது வருத்தத்தை தந்தது .
சென்னையில் இருந்த மூன்று கிளைகள் மட்டுமல்லாமல் கோவையில் ஒன்றும் கல்கத்தாவில் ஒன்றும் இருந்தது . இந்த அங்காடியின் கிளைகள் மூடபட்டு  டாடா நிறுவனத்திற்கு விற்கப்பட்டுவிட்டது  . லேன்ட் மார்க் மாதிரி அனைத்து  நூல்கள்  கிடைக்கக்கூடிய   நிறுவனம் சென்னையில் இல்லாமல் ஆகிவிட்டது .   .30 ஆண்டுகளில் லேன்ட் மார்க்கில்   ஆயிரக்கணக்கில்  புத்தகம் வாங்கினேன் லேன்ட் மார்க் மூடியது  தனிப்பட்ட இழப்பாக கருதுகிறேன் . இப்படி ஒரு அடையாளமாக சென்னைக்கு எதிர்காலத்தில் அமையுமா ? Landmark என்றால் சென்னைக்கு லேன்ட்மார்காக இருந்தது.இப்போது முப்பது ஆண்டுகள் ஓடி விட்டது அதற்கு தான் இந்த பதிவு .
#landmark
#books
#chennai
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
1/1/2017
#ksrposting
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...