*குதிரை கோவில்பட்டியில் பறிபோகி, அது வேலூருக்கு வந்த பிறகு கொட்டிலை இழுத்துப் பூட்டுவது போல் *
*அண்ணா* (சிதம்பரம் உரை, 1951 )
————————————
கடந்த 1950இல் புத்தகம் (ஆரிய மாயை )எழுதி ஒன்பது ஆண்டுகள் ஆனபிறகு , ஆறு பதிப்பிலே ஒவ்வொரு பதிப்புக்கும் சுமார் 3000 வீதம் மொத்தம் 18000 புத்தகங்கள் வெளிவந்த பிறகு , அதைச் சுமார் இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் படித்த பிறகு , அந்த இலட்சம் மக்களிலும் குறைந்தது 2000 பேர் பக்கத்துக்குப் பக்கம் பாராமல் ஒப்பிக்கும் சக்திபெற்ற பிறகு - அதாவது குதிரை கோவில்பட்டியில் பறிபோகி, அது வேலூருக்கு வந்த பிறகு கொட்டிலை இழுத்துப் பூட்டுவது போல் - நான் எழுதிய புத்தகத்திற்குத் தடை போடுகிறார்கள்.
1942 இல் எழுதிய புத்தகத்திற்கு 1950 இல் குற்றம் காண்கிறார்கள். ஒன்பது வருட காலமாக உண்டாக்காத வகுப்பு துவேசத்தை இப்பொழுது மாத்திரம் அது எப்படி உண்டாக்கும் என்பது தெரியவில்லை.
No comments:
Post a Comment