#
திரும்பிப்பார்க்கிறேன் கடந்த
திரும்பிப்பார்க்கிறேன் கடந்த
பாதையை, சுவடுகளை- கடந்த காலத்தை
மிக கம்பீரமாய் உணர்கிறேன்.
எங்கும் யாரிடமும் எதற்கும்
எந்நிலையிலும் தாழாமல்
மிகக் கடுமையான சூழலிலும்
சரியாகவே இருந்திருக்கிறேன்.நான் நம்பியவர்களால் ஏமாற்றங்கள் ஆதனால்
அவமானங்கள்; பின்னடைவுகள்...
மண்டியிட்டால் மகத்தான உயரம்
தொட்டிருக்கலாம் தான்.ஆனால் பாரதியின் தைரிய வாக்கு நெஞ்சில்.....
பின் எப்போதும் நானே என்னை
மன்னித்திருக்க மாட்டேன்.
பிடிவாதம் வைராக்கியம்
தாழாத தன்மானம் திருப்தியாகவே
வாழ்ந்திருக்கிறேன்.
இன்னும் வாழும் நாள் வரையும்
அமைதியாக வாழ்ந்து போக.....
இயற்க்கையே நீ வழங்கு
No comments:
Post a Comment