Monday, February 24, 2020

சூரியா_சென்

#சூரியா_சென் 
———————-
இவரை யாரென்று நமக்குத் 
தெரியாது.

வெள்ளையர்கள் இவரைத் தூக்கில் போடுவதற்கு முன்பு இவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத்தார்கள் ; நகங்களைப் பிடுங்கினார்கள் ; 

எலும்புகளை உடைத்து நோகடித்தனர். நினைவிழந்த நிலையில் இவரை தூக்கு மேடையில் ஏற்றினர் .

அவ்வளவு வெறி ; குரூரம் ; வன்மம் . 

இவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் - "ஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும்".

பாட புத்தகங்களில் இவர் இல்லை . 

பத்திரிகைகள் இவரை எழுதவில்லை . ஏனெனில் அவற்றின் உண்மை எஜமானர்களான வெள்ளையனை உண்மையாக உறுதியாக எதிர்த்தவர் .

மாஸ்டர் தா என்று அன்போடு அழைக்கப்பட்ட சூர்யா சென்தான் இவர். சுதந்திரப் போராளி .

மார்ச் 24 இவருடைய பிறந்த நாள் நூற்றாண்டு கடந்து போனது.

வங்காளப்புரட்சி இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியவர் சூரியாசென் .

சிட்டகாங் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றிய சூரியாசென் , ஜலாலாபாத் மலைப்பகுதியில் ஏப்ரல் 22,1930 ஆம் ஆண்டில் பிரிட்டீஷாரை எதிர்த்தார் .

பிப்ரவரி 16,1933இல் கைது செய்யப்பட்ட சூரியாசென் ஜுன் 12,1934 இல் தூக்கிலிடப்பட்டார் .

பகத்சிங் வரலாற்றை முக்கால்வாசி மறைத்த  சூரியாசென் வரலாற்றை முழுவதும் மறைத்து விட்டது .


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...