எப்போதுமே வாழ்வை ஒரு பார்வையாளனாக கவனிப்பதில் பெரிய ஆர்வம் உண்டு.என்ன எண்ணினோம் ? எதை நோக்கி பயணிக்க விழைந்தோம் அந்த வழியில் தொடர்ந்து செல்கிறோமா ? என்று நடுவே நமக்குள் கேள்வி வேண்டும்.
இன்று நாம் விரும்பிய தூரத்தில் ஒரளவாவது கடந்திருக்கிறோமா ? என்றும் எண்ணிப்பார்க்க வேண்டும்.எல்லோருடைய வாழ்விலும் இந்த சுயமதிப்பீடு அவசியம்.
நாம் வென்றதை கொண்டாடும் அளவுக்கு தோல்வியை மனம் ஏற்பதில்லை. பெற்ற வெற்றியை மட்டும் பூதாகரப்படுத்தி இங்கு வரலாற்றை ஒரு மாயத்தோற்றமாக உருவாக்கி வைத்துக்கொண்டுள்ளோம்.வரலாறு நமக்கு மட்டுமானதுமல்ல. வரலாற்றில் நாம் தோற்றவர்களையும் படிப்போம். சிலருக்கு திறமைகள், நேர்மையான கள உழைப்பும்இருந்தும்புறக்கனிப்படுவதும்.அதையும் அவர்கள் எளிதாக எடுத்துக்கொண்டு சில வேடிக்கை மனிதர்களைகடந்தசெல்வதுண்டு.
வெற்றியும், தோல்வியும் வீரருக்கு அழகு.
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.
இப்படியான நிலையில் பொது வாழ்வில் சாதித்த பலரின் வரலாறுகள் மறைக்கப்பட்டது மட்டுமல்ல அவர்களை மனதை அவர்கள் வாழ்ந்த காலத்தில் ரணப்படுத்தியதுண்டு. இது பொது
வாழ்வில் மட்டுமல்ல எல்லா சூழலிலும் உள்ளதுதான். வெற்றி பெற்றவர் மனிதராக போற்றுவதாலே நேர்மையான கீர்த்தி பெற்றவரென்று உணர முடியாது. வரலாறு எப்போதுமே இரு பக்கத்தை கொண்டது. அதை அப்படியே ஏற்போம்.
இங்கு தகுதியே தடை.....
நெஞ்சை மட்டுமல்ல முதுகையும்
பலமாக வைத்துகொள் முதுகில் குத்தும்
முறை அதிகம்.
இந்த எதிர்வினைப் போக்கை நேத்தாஜி, பகத்சிங், வ.உ.சி, ஓமந்தூரார் பலரும் சந்தித்த்துதான்...
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
16-2-2020.
No comments:
Post a Comment