Thursday, February 27, 2020

ஈழத்தமிழர் #ஐநா_மனித_உரிமை_ஆணைய #தீர்மானம்_முடக்கமா.....?

#ஈழத்தமிழர்
#ஐநா_மனித_உரிமை_ஆணைய #தீர்மானம்_முடக்கமா.....?
————————————————-
இலங்கையில் 2009-ல் நடந்த இறுதிப்போரில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். இப்படி இந்திய அரசின் உதவியுடன், சிங்கள அரசால் தமிழினத்தை அழிக்கும் கொடுமை நடந்தேறியது.
இது குறித்த சர்வதேச நம்பகமான சுதந்திரமான விசாரணை வேண்டும் என்று ஐ.நா  மனித உரிமை ஆணையத்தில் தீர்மான விவாதங்களும் நிலுவையில் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தத் தீர்மானத்தை ஆதரித்தன. 
இத்தனை ஆண்டு காலம் நடந்த விவாதங்களை, மேற்கொண்டு எடுத்துச் செல்லாமல் சிங்கள அரசு இந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற முனைந்துள்ளது. நியாயங்களும், உண்மைகளும் வெளிப்படுத்த உள்ள வாய்ப்பை இந்த சிங்கள அரசு தடுக்க முனைகிறது.
இது குறித்து தமிழகத்தில் எந்த எதிர்வினைகளும் ஏற்படவில்லை என்பது தான் மிகுந்த மனவேதனையாக உள்ளது. நேற்று ஜெனிவாவில் நடந்த மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் சிங்கள அரசின் சார்பில் இது குறித்தான விவாதம் தொடங்கி உள்ளது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-2-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings 
#ஈழத்தமிழர்

https://m.facebook.com/story.php?story_fbid=10159451749443835&id=787733834

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...