Wednesday, July 20, 2022

சிவகுமார் எழுதிய ‘திருக்குறள் - 50’

அண்ணன் திரைக்கலைஞர் சிவகுமார் எழுதிய ‘திருக்குறள் - 50’ என்ற நூலை எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்த நூலை அலையன்ஸ் சீனிவாசன் வெளியிட்டுள்ளார். அற்புதமான நூல்.  திருக்குறள் நெறிகளின் படி நம் முன் வாழ்ந்த மக்களைக் குறித்துத் தொகுத்து நல்ல புகைப்படங்களோடு வழங்கியுள்ள ஒரு வித்தியாசமான நூல். தமிழ் கூறும் நல்லுகத்திற்கு ஒரு அற்புத வரவு. என் மீது என்றைக்கும் அக்கறை கொண்ட அண்ணன் சிவகுமார் அவர்களை நன்றியோடு பார்க்கிறேன்.

பல பெரிய ஆளுமைகள், தலைவர்கள் எல்லாம் அவர்கள் கையறு நிலையில் நிற்கும் போது நான் உதவியுள்ளேன். அதையெல்லாம் அவர்களும் சொல்லியதில்லை, நானும் சொல்லிக்கொண்டதில்லை. ஆனால், அண்ணன் சிவகுமார் என்றும் என்னை நினைத்துப் பார்த்து, அவர் எழுதிய வார்த்தைகள் எல்லாம் என்னை நெகிழ்ச்சியடைச் செய்கிறது. இப்படியெல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் அண்ணன் சிவகுமார் அவர்கள் தன்னுடைய நூலில், "என்னை முதன்முதலில் நீதிமன்றத்திற்குள் அழைத்து போய் நிகழ்ச்சிகளைக் காட்டிய ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு” என்று குறிப்பிட்டுள்ளார். கிட்டதட்ட இலங்கைத் தமிழர் பிரச்சனைகள்  நடந்த நேரம் என்று நினைக்கிறேன். அண்ணன் சிவகுமார் அவர்களை நீதிமன்றத்திற்கு எல்லாம் அழைத்துச் சென்றதெல்லாம் இன்றைய நினைவுக்கு வருகிறது. 1983 களில் இவையெல்லாம் நடந்தன. சுமார்  38ஆண்டுகள் கடந்து விட்டன. இன்றைக்கு நினைவோடு கூறியது



மனதிற்கு மிகவும் ஆறுதல் தந்தது. இப்படி எத்தனைப் பேர் உள்ளார்கள்?. பல முக்கியமான. தமிழக- இந்திய      அரசியல்விடையங்களில் நான் பங்கேற்றுள்ளேன். ஆனால், தமிழ்நாட்டு வரலாற்றில் யாரும் என்னைப் பற்றி எழுதியது கிடையாது.

#ksrpost
20-7-2022.


No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...