ஆந்திரத் துணை முதல்வர் பவண் கல்யாண் அவர்களை சந்திப்பு குறித்த தன்னிலை விளக்கம்!
meeting with AP Dy CM Pawan Kalyan
Garu
———————————————————-
பல பத்திரிகையாளர்களும் பல தரப்பினரும் என்னிடம் கேட்ட சில கேள்விகளுக்கான பதில் இது! ஆந்திரத் துணை முதல்வர் பவண் கல்யாண் அவர்கள் பற்றியும் அவரது ஜனசேனா அமைப்பு பற்றியும் என்னிடம் விளக்கம் கேட்டார்கள். கடந்த காலத்தில் எனக்கும் பவன் கல்யாண் அவர்களுக்கும் சந்திப்பு நிகழ்ந்தது உண்மைதான். பொதுவாகத் தமிழக அரசியல் பற்றியும் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிரச்சினைகளில் உள்ள சிக்கல்கள் பற்றியும் பேசிக் கொண்டோம்.
அதில் ஒன்று தேசிய நதிநீர்கள் இணைப்பு ! நான் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுத்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கான தீர்ப்பு 2012 இல் கிடைத்தது என்பதை இங்கே ஞாபகம் ஊட்டுகிறேன்.
இரண்டு கிழக்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புப் பற்றியது. அதாவது மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற நீண்ட தொடராக இல்லாமல் கிழக்கு மலைத் தொடர்ச்சியானது விட்டு விட்டு ஆங்காங்கே வல்லநாடு கழுகுமலை அழகர் மலை கொல்லிமலை கல்வராயன் மலை என்று தொடர்ந்து ஆந்திரா ஒரிசா சத்தீஸ்கர் மேற்கு வங்கம் வரை பரவியுள்ளது. எனது வழக்கும் இது குறித்தும் நிலுவையில் உள்ளது.இந்த வளமான மலைகளின் பாதுகாப்பு குறித்தும் எடுத்துரைத்துப் பேசிக் கொண்டிருந்தோம்.
மூன்று! தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் ,
நான்கு ஈழத் தமிழர் பிரச்சினை குறித்தும்,
ஐந்து,இந்திய பெருங்கடலில் அமெரிக்க சீனா ஜப்பான் பிரான்ஸ் போன்றவற்றின் ஆதிக்கம் குறித்தும் சில நாடுகள் தங்களது ஆயுதத் தளவாடங்களை அங்கேநிறுத்தி வைத்திருப்பது குறித்தும் அதனால் ஏற்படும் இந்தியப் பெருங்கடலின் அமைதி இன்மை குறித்தும் பேசினோம். அங்கு அமைதி ஏற்படுத்துவதோடு
இந்தியாவின் தென் மாநிலங்களும் அதனுடன் சேர்த்து பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற அவசியத்தையும் பேச வேண்டியதாக இருந்தது!
அதன் தொடர்ச்சியாக ஆறுவாதாக,இந்தியத் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றியும் இது குறித்த எனது வழக்கையும் பற்றி பேசி முடிவு செய்தோம்.
இப்படியான பேச்சு வார்த்தைகளுக்கு இடையே வட தமிழக மாவட்டத்தை சேர்ந்தவர்களும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில பிரநிதிகளும் அங்கு இருந்தார்கள்! அத்துடன் தமிழ்நாட்டின் வட மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் மேற்கு கொங்கு மண்டல மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் அடுத்த கட்டமாக அவரைச் சந்திப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது! இவ்வளவுதான் நடந்த விஷயம். பார்ப்போம்! அரசியல் அதன் போக்கில் நடந்து கொண்டிருக்கிறது எதையும் கணித்துச் சொல்ல முடியாது! வரும் காலங்களைப் பொறுத்து கல்யாண் விருப்பம் என பலதும் இருக்கிறது! இது குறித்து கேள்விகள் கேட்ட நண்பர்களுக்கு இதுதான் எனது தன்னிலை விளக்கம்!
This is a response to some questions asked by several journalists and various groups! They sought clarification about Andhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan and his Jana Sena organization. It is true that I have met Pawan Kalyan on a few occasions Generally, we discussed Tamil Nadu politics and the ongoing issues and complexities in the state.
One of the topics was the interlinking of national rivers! I would like to remind here that after filing a case in the Supreme Court about this 40 years ago, a verdict was obtained in 2012.
The second topic was the protection of the Eastern Ghats. Unlike the continuous stretch of the Western Ghats, the Eastern Ghats are fragmented, spread across places like Vallanadu, Kazhugumalai, Azhagar Malai, Kollimalai, and Kalvarayan Malai, extending through Andhra Pradesh, Odisha, Chhattisgarh, and up to West Bengal. We discussed and emphasized the need to protect these resource-rich mountains and also my pending PIL on the file of the Supreme Court .
Three! We discussed the issues concerning Tamil Nadu fishermen,
four, the issues related to Indian Ocean as peace zone ,, the dominance of countries like the United States, China, Japan, and France in the Indian Ocean, the stationing of military equipment by some countries there, and the resulting unrest in the Indian Ocean. It was necessary to talk about establishing peace there and ensuring the protection of India’s southern states along with it! As a continuation, we also discussed the problems faced by Eelam Tamils and decided on Indian electoral reforms and Katchthivu etc
During these discussions, in the final moments, there were people from northern districts of tamilnadu. Additionally, arrangements were made for the next phase of meetings with people from the northern districts of Tamil Nadu, southern districts, and the western Kongu region districts to meet him! This is all that happened. Let’s see! Politics is moving in its own course, and nothing can be predicted with certainty! There are many things depending on the times to come and also shri Pawan’s own plans…..?! This is my personal explanation to the friends who asked questions!
No comments:
Post a Comment