#ஸ்டெர்லைட்டைத் திறக்க வேண்டும் என்று கனிமொழியிடம் அதன் மனு கொடுப்பதையும் அதை அவர் பெறுவதையும் பார்க்கும்போது வேடிக்கையாகத் தான் இருக்கிறது! ஸ்டெர்லைட்டுக்கு துவக்கத்தில் திமுக ஆட்சியில் தூத்துக்குடியில் அனுமதியும் தந்து அந்த ஆலைக்கு ஆதரவாக இருந்தனர
இதே கனிமொழிதான் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவோம்! எக்காலத்திலும் திறக்க மாட்டோம்! என்று வாக்குறுதி எல்லாம் அளித்தவர்!. அதை இவரது அண்ணனும் இன்றைய முதலமைச்சரான ஸ்டாலினும் உறுதி செய்தார். இப்படி அண்ணனும் தங்கச்சியும் கடுமையாக ஸ்டெர்லைட்டை மூடுவோம் என்று கூறிவிட்டு இப்பொழுது அதை ஆதரிப்பவர்களிடமிருந்து மனுவை வாங்குவது என்ன வகையான பித்தலாட்டம் என்று தெரியவில்லை!
இந்த மனு வாங்கும் தந்திரத்தைப் பற்றி கம்யூனிஸ்ட் கட்சிகளான
சி பி ஐ சி பி எம் மற்றும் வைகோ போன்றவர்கள் என்ன கருதுகிறார்கள்! ஸ்டெர்லைட் போராட்டத்தில் நெடுங்காலம் ஈடுபட்ட இவர்களின் பதில் என்ன? இதில் என் பங்கும் உண்டு .
எதையாவது சொல்லி எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல வாக்குறுதிகளைக் கொடுப்பது பிறகு அதை இவர்களே மீறி கொள்வது என்று அரசியலில் நேரத்திற்கு தக்கவாறு நடந்து கொள்கிற இந்த மோசமான நடவடிக்கைகளை பற்றி இங்கு யாரும் கேள்வி எழுப்பவும் இல்லை! கூட்டணி கட்சிகள் என்று தான் பெயர்! ஒரு காலமும் திறக்க மாட்டோம் மூடிவிடுவோம் என்று சொன்னவர்கள் இப்போது அதற்கு ஆதரவாக நிற்பவர்களிடம் ஸ்டெர்லைட்டை த் திறப்பதற்கான மனுவை போதுவில் வாங்குவது யாரை ஏமாற்றும் வேலை.
அதுவும் ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று சொன்னவர்களிடமிருந்து மனுவை வாங்காமல் தொடர்ந்து ஸ்டெர்லைட்டைத் திறக்க வேண்டும் என்று சொல்பவர்களிடம் இருந்து மனுவை வாங்குவதுஎவ்வளவு புத்திசாலித்தனம்!
இப்படித்தான் இவர்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்கிறார்கள். நிறைவேற்றுவதாகச் சொன்ன அனைத்து வாக்குகளின் பின்னாலும் அவர்கள் சுயநலமும் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளுகிற தந்திரங்களும் அடங்கி உள்ளன. ஆடுகள் தன்னை வெட்டுபவன் பின் தான் செல்லும் என்பது ஒரு பழமொழி!
No comments:
Post a Comment