சுயம் என்பது அர்த்தமற்றதாகவும், பயனற்றதாகவும் இருக்கிறது. அதன் எதிரெதிர் மற்றும் முரண்பட்ட ஆசைகள், அதன் நம்பிக்கைகள் மற்றும் விரக்திகள், அதன் யதார்த்தங்கள் மற்றும் மாயைகள் கவர்ச்சிகரமானவையாக இருந்தாலும் வெறுமையானவை; அதன் செயல்பாடுகள் அதன் சொந்த சோர்விற்கு வழிவகுக்குகிறது.
சுயமானது எப்போதும் எழுகிறது; விழுகிறது; எப்போதும் எதையோ பின்தொடர்கிறது, அதில் விரைவில் சலிப்படைகிறது. எப்போதும் சேர்த்துக்கொண்டே இருக்கிறது, எப்போதும் இழந்துகொண்டே இருக்கிறது.
ஆனாலும், இந்த சோர்வான, பயனற்ற தன்மையிலிருந்து அது எப்போதும் தப்பிக்க முயற்சிக்கிறது. அது வெளிப்புற செயல்பாடுகள் மூலமாகவோ அல்லது இன்பம் தரும், திருப்தி தரும் மாயைகள் மூலமாகவோ - மது, காமம், வானொலி, புத்தகங்கள், அறிவு சேகரிப்பு மற்றும் கேளிக்கைகள் - மூலமாகவோ தப்பிக்கிறது.
மாயையை வளர்க்கும் அதன் சக்தி சிக்கலானது; பரந்தது. இந்த மாயைகள் சுயமாக உருவாக்கப்பட்டவை, சுயமாகத் திட்டமிடப்பட்டவை.
இவை சுயத்தை கைவிடுதலுக்கான மாற்றீடுகள் (SUBSTITUTES). இந்த மாற்றீடுகளில் அது தொலைந்து போக முயற்சிக்கிறது. அது ஒன்றன்பின் ஒன்றாக மாற்றீட்டைப் பின்தொடர்கிறது,
ஆனால் ஒவ்வொன்றும் அதன் சொந்த பிரச்சனையை உருவாக்குகிறது; அதன் சொந்த மோதல் மற்றும் வலியை உருவாக்குகிறது.
No comments:
Post a Comment