Wednesday, May 28, 2025

சூத்திர உபன்யாசகன் என்பதோர் சொல் தொடர்.

 சூத்திர உபன்யாசகன் என்பதோர்

சொல் தொடர்.
---------
பிரம்மஸ்ரீ கல்யாணராமன் என்ற பிரா
ஹ்மண உபன்யாசகர் பகிரங்கமாக
ஒருவர் தைரியமாகப் சொல்கிறேன் என்றறிவித்த வாசகமே இந்த சூத்திர
உபன்யாசகன்.உண்மையில் அந்த ஆள் தைரியசாலிதான். இந்தத் தமிழ் மண்ணில் தைரியமாக இப்படிப் பேசு
வது கொஞ்சம் ஆச்சரியமானது.இந்த
உரை அடிக்கடி இது யூ டியூப் போன்ற ஊடகங்களில் வருவது சற்று நெருட
லைத்தருகிறது.இது நம் ஆன்மிக சுகி
சிவத்தைக் குறித்துச் சொன்னது.அதா
வது சுகிசிவம் 'சூத்திரஉபன்யாசகன்'
தமிழர்கள்மேல் விழுந்த சாட்டையடியா
கவே கொள்ளவேண்டும்.
திருச்சி கல்யாணராமன் நல்ல உபன்
யாசகன்.கலைமாமணி போன்ற 'ஒட்டு'
உண்டு.மேடையில் வளைந்தும் நெளிந்
தும் ஆடியும் பாடியும் அழுதும் மூக்குச்
சிந்தியும் அபாரமான ஆக்க்ஷகளோடு
தடபுடலாக உபன்யாசிக்கின்ற பிரபல
சத் பிராமணர்.உஞ்சவிருத்தி எடுத்தே
போஜனம்.மனசு முழுக்க நஞ்சு.அப்பப்
ப இந்த ஆலகாலம் வெளிப்படும்.பல
யக்ஞோபவீதங்கள் குதூகலிக்கும்.
"பிராம்ஹணனுக்கு யாசகம் தர்மம்.
பிராமணர் பொண்களே பிராமணப்
பையன்களாகப் பாத்து லவ் பண்ணு
ங்கோ" என்பது இவரது கீதா சாரம்.
நம் சுகிசிவத்தின்மேல் என்ன பிரச்ச
னை? நாத்திகம் பேசுகின்றாரா? பழுத்
த ஆன்மிகவாதி.அறிவியலோடு பக்தி
யை இணைப்பவர்.நிஜமான ஆன்மிகச்
சிந்தனைகளை வளர்ப்பவர்.இதுவரை
சொல்லப்பட்டு வந்த கட்டுக்கதைகளை
உடைப்பவர் என்பதுதான் பிரச்சனை!
இத்தனைக்கும் இவர் கடவுளர்களை
யோ பிராமணர்களையோ பெரிதாக நிந்தனை செய்ததாக நானறியேன்.
இங்கே பிர்மஸ்ரீ கல்யாணராமய்யர்
பிரம்ம யக்யம் பண்ணி தினசரி தான்
செய்யும் பாபங்களைப்போக்கிக்கொள்
ள அனுமதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்
த்தவர்.சுகி சிவம் பகவான் சிரசில் பிற
க்காத சபிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்
தவர்.அவ்வளவுதான்!பிறப்பு முக்கியம்
பக்தி அப்புறம்.
பக்தி என்ற பெயரில் புராண புளுகு
மூட்டைகளை மேடைகளில் அவிழ்த்து
க் கொட்டாமல் பக்தி, ஆன்மிகத்தை கொஞ்சம் அறிவியலோடு இணைத்து
உரை செய்பவர்.நிறைய மக்களை இவர் எட்டுகிறார் என்பதே பிரச்சனை.
சநாதனத்துக்கு இடைஞ்சல் வருகிறது
என்று சந்தேகப்பட்டாலே போதும் கல்
யாணராமன்களை சநாதனம் களத்தில்
இறக்கிவிட்டுவிடும். கும்பல்மனோபா
வக்கழிசடைகளும் உடன் களத்திற்கு
வரும்.பல குருக்கள் குஞ்சுகள் ஆட்டிக்
கொண்டே "சுகி சவம்" என்று கூச்சலி
ட்டுக் குதூகலிக்கும்.
முருகன் சுப்ரமணியர் கார்த்திகேயன்
வேலவன் போன்ற பெயர்கள் நிச்சய
மாக ஒரு சுப்பிரமணியரைக் குறிக்கும்
சொற்களாகா.வேறுவேறுதான்.வட
நாட்டு சுப்ரமண்யம் வேறு தென்னாட்
டுச் சுப்ரமணியன் வேறு.இவர் வேலன்
குறிஞ்சிக் கடவுள்.பூசாரிமேல் வேலன்
இறங்கி மருள் வந்து ஆடும் போது
வேலன் வெறியாட்டு என்பது சங்ககா
லத்திலிருந்தே இருக்கும் நம்பிக்கை.
வேலனுக்கு பலி உண்டு.சநாதனம்
மேலோங்கிய போது உயிர்பலி அகற்
ற்றப்பட்டு முருகன் சர்க்கரைப் பொங்
கல் சாப்பிட ஆரம்பித்தான்.முருகன்
என்பது ஒரு கருத்து.குறியீடு.சான்று
களின்படி முருகன் சந்நிதியில் ஆதி
யில் பிரதிமை இல்லை."வேல்"தான்
இருந்தது.ஈழத்தில் கதிர்காமத்தில்
பிரதிமை இல்லை என்பர்.சந்நிதியில்
ஒரு திரைச்சீலைதான்.பழனி கோயில்
அசல் வரலாற்றைச் சொல்கிறார்.
இவை சநாதனிகளுக்குப் பிரச்சனை.
வேதங்களில் கடவுளர்கள் இல்லை.
யஜுர் வேதத்தில் குறிப்பிடப்படும்
மகாவிஷ்ணு இப்போது வணங்கப்படு
கின்ற மகா விஷ்ணு அல்ல.வருணன்
இந்திரன் சோமன் பர்ஜன்யன் போன்ற
குழுத்தலைவர்களே.இங்கேதான் நம்
சூத்திர உபன்யாசகர்மேல் குறிவைக்
கப்படுகிறது.அரசு ஏற்பாடு செய்த
விழாவில் குன்றக்குடி அடிகளாரையும்
பேரூர் அடிகளாரையும் நம் சுகிசிவத்
தையும் கலாட்டாசெய்து பேசவிடாமல்
ரகளை செய்தது.யாரோ ஒரு பாஸ்கர்
கௌசிகன் என்ற "பொறம்போக்கு"
திடீர்க் கதானாயகனாகி கல்லெறிகி
றது. இந்தமூடன்.குருக்கள் என்று வேறு
பிரகடனப்படுத்துகிற அவலம்.இப்போ
காணாமல் போய்விட்டது கழுதை.
சாதனத்தின் மீது லேசாக அடிவிழுந்தா
லே போதும் ஒரு மூடர்கூட்டத்தை அனு
ப்பிக் கத்தவிடுவது வழக்கம்தான்.சுகி
சிவம் அவர்களை தமிழர் பிரதிநிதிகளி
ல் ஒருவராக ஏற்றிருக்க வேண்டும்.அர
ணாக நின்றிருக்க வேண்டும்.வழக்க
யாக மௌனித்திருந்துவிட்டோம்
எல்லாப்பரிமாணங்களிலும்பூரணத்து
வம் பெற்றிருப்பவர்களுக்கு வாய்ப்பும்
வாய்ப்பின்மையும் ஏற்படுவது ஒரு இயல்பு. ஏதாவது ஒரு பகுதியில் முழு
மை பெற்றுவிட்டவரோடு அவரை ஒப்பிட முடியாது அந்த ஒரு பகுதியை
ப் பொறுத்தவரை.திரு சுகிசிவம் பக்தி
மானாக இருப்பதில் யாருக்கும் பிரச்ச
னை இருக்கமுடியாது.சநாதனத்தை
எதிர்ப்பவர் என்ற கருத்தில் தமிழக
இடதுசாரிகள்,பகுத்தறிவாளர்கள்,
தமிழ்தேசியர்கள், சீர்திருத்தவாதிகள்,
முற்போக்காளர்கள் அனைவரும் நம்
சுகிசிவம் என்ற ஆளுமைக்கு அரணாக
நிற்கவேண்டும்.சநாதனம் வலியது
என்ற கருத்தை கவனத்தில் கொண்டு
சுகிசிவம் என்ற சூத்திர உபன்யாசகர்
பக்கம் நிற்கவேண்டும்.தனிநபராக
நின்று அவர் போராடுவது முறைய
ன்று.
பக்தி என்ற ஒற்றைச்சொல் இடது சாரி
களை எட்டிநிற்க வைக்கிறது.கண்முன்
ஓர் எதிரி சகல ஆயுதங்களோடும் போராடும்போது ஆன்மீகக்காரர் என்ற
ஒரே காரணத்திற்காக விலகி நிற்கக்
கூடாது.திருச்சி மாவட்ட ஆட்சியராக
இருந்த திரு மலையப்பன் அவர்களை
நீதிமன்றம் அவரது பிறப்பை மனதில்
கொண்டு தவறான தீர்ப்பு வழங்கப்
பட்டபோது பெரியார் களத்தில் இறங்கி
திரு மலையப்பனுக்காகப்போராடினார்
போன்ற வரலாறுகளைஏன் மறந்தனர்?
சுகிசிவத்தின்மேல் தொடுக்கும் வசை
தமிழினத்தின் மேல் தொடுக்கும் வசை
யல்லவா? சில இடத்தில் மௌனம்
காப்பது பிழை.போரிட முடியாதவனுக். கு ஏதோ அங்கஹீனம் இருக்கிறது
என்பதுதான் பொருள்‌.போரிட முடியாத
வன் சமாதானமாக இருக்கவும் தகுதி
அற்றவன்‌ என்பது கருத்து.
அரசின் பிரதிநிதிகளே சுதந்திரமாகத்
தம் கடமையைச் செய்ய முடியாதபோது
முற்போக்குத் தோழர்கள் முகாம்களில்
தத்துவ விசாரணையில் காலம் கடத்தி
க்கொண்டிருப்பது பிழை." வரலாற்றுப்
பிழை" என்ற வாசகம் இனி உதவாது.
எந்த இடத்தில் நம் புரிந்து கொள்ளுத
ல் ,பகுத்தறிவு, இடறுகிறதோ,அங்கே
நின்றுவிடாதீர்கள்‌.பின்வாங்கி விடா
தீர்கள்.துணிச்சலுடன் பகுத்தறிவுக்கு
அப்பாற்பட்ட உலகத்திற்குள் புகுந்து
பார்த்து விடுங்கள்‌.இப்படியான சூழ
லை நாம் அடிக்கடி சந்திக்கவேண்டியி
ருக்கும்.நம் சுகி சிவத்தோடு உடன்
நின்று தோள்கொடுப்போம்
உங்கள் சங்கல்பம் ஒன்றுபட்டதாக
இருக்கட்டும் .உங்கள் உணர்ச்சி
ஒன்றுபட்டதாக இருக்கட்டும்.உங்
கள் சிந்தனை ஒன்றுபட்ட தாக இரு
க்கட்டும்‌.ஓர் அற்புதமான இயைபு
நிலவட்டும். (ஸம்வன சூக்தம் )
நாமார்க்கும் குடியல்லோம்."
--

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...