#அம்பாசங்கர்_அறிக்கையின்_மோசடிகளும்
தமிழக அரசு, 1982 ஆம் ஆண்டு அம்பாசங்கர் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது. 21 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அந்த ஆணையத்தின் தலைவராக அம்பாசங்கர் நியமிக்கப்பட்டார். 1985ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அவர் சமர்ப்பித்த அறிக்கையில் பெரும் மோசடி நடந்துள்ளது.
ஒரே ஒரு சான்றை மட்டும் இங்கே சுட்டி காட்டுகிறேன். 1971 சட்டநாதன் அறிக்கையில் வன்னியர்களின் மக்கள் தொகை 45 லட்சம். அதேபோல் சீர் மரபினரின் மக்கள் தொகை 30 லட்சம். ஆனால் 1985 இல் அம்பாசங்கர் அறிக்கையில் வன்னியர்களின் எண்ணிக்கை 60 இலட்சமாக காட்டுகிறார். ஆனால் சீர் மரபினர்களின் எண்ணிக்கையை 15 இலட்சமாகக் குறைத்துக் காட்டுகிறார். சட்டநாதன் அறிக்கைக்கும் அம்பாசங்கர் கமிஷன் அறிக்கை ஏறத்தாழ 14 ஆண்டுகால இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியில் வன்னியர்களின் ஜனத்தொகை கூடியிருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதே வேலை சீர் மரபினர்களின் எண்ணிக்கை 1971ல் இருந்ததை விட பாதியாகக் குறைத்து காட்டுவது அவரின் அப்பட்டமான சாதி வெறியைக் காட்டுகிறது. அம்பாசங்கரும் வன்னியர். சட்டநாதனும் வன்னியர்.
ஆனால் அந்த ஆணையத்தின் 21 உறுப்பினர்களில் கீழ்க்கண்ட 14 உறுப்பினர்கள் அம்பாசங்கரின் அறிக்கையை மறுத்து, அதில் நடைபெற்ற மோசடிகளை, தில்லுமுல்லுகளை விளக்கி, தமிழக அரசுக்கு உண்மையான அறிக்கையையும் பரிந்துரைகளையும் வழங்கியுள்ளனர். இதில் ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் உள்பட பெரும்பான்மை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்து உள்ளனர். அதனால் தான் தமிழக அரசு அம்பாசங்கர் முன் வைத்த அறிக்கையின் மோசடித்தனத்தை உணர்ந்து, அதை மைனாரிட்டி அறிக்கை என்று கூறி நிராகரித்தது.
தன்னுடைய சாதியின் நலனுக்காக உண்மைத்தன்மைகளை மறைத்து, சர்வாதிகாரமாக, ஆணையத் தலைவர் என்ற முறையில் உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறாமல், ஆலோசிக்காமல் அறிக்கையை தான்தோன்றித்தனமாகச் சமர்ப்பித்தார். உண்மை அறிக்கையை சமர்பித்து, அம்பாசங்கரின் மோசடிகளை அம்பலப்படுத்திய, ஆணைய உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு:
ஆணைய உறுப்பினர்கள்
திருவாளர்கள்
1. G. விஸ்வநாதன்
2. V.V.சாமிநாதன், MLA
3. அன்பில் தர்மலிங்கம்
4. M. ஜான் வின்சண்ட், MLA
5. K. லியாகத் அலிகான்
6. Tmt. செளந்தர கைலாசம்
7. S. கோபாலகிருஷ்ண யாதவ்
8. குழ செல்லையா
9. I.D. ஜவகர் ராஜ்
10. S.K. பாலகிருஷ்ணன்
11. இயக்குனர் பிற்படுத்தப்பட்டோர் துறை உறுப்பினர் செயலாளர்
12. இணை செயலாளர், சட்டத்துறை கூடுதல் உறுப்பினர் செயலாளர்.
13. M.K. பாலசுப்பிரமணியன், IAS (RETD)
14. குமரி ஆனந்தன், MLA.
இது மொத்த ஆணைய உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரையை ஏற்று தான் அன்றைய எம்ஜிஆர் அரசு 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. அம்பாசங்கரின் அறிக்கையை நிராகரித்தது.
இந்த உண்மைகளை மறைத்து, நிராகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை ஆணையத்தின் பரிந்துரையாக அதன் தலைவர் கொடுத்த அறிக்கையை வைத்து கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில் சமூகநீதி மோசடி நடந்து வருகிறது. அந்த ஆணையத்தின் பரிந்துரையில் மிகத் தெளிவாக ஆதாரங்களையும் புள்ளிவிவரங்களையும் சுட்டிக்காட்டி, மக்கள் தொகை கணக்கெடுப்பு சரியாக கணக்கிடப்படவில்லை, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, சில சமூகங்களின் மக்கள்தொகை எண்ணிக்கையை பல மடங்கு கூட்டிக் காட்டியும், சில சமூகங்களை மிகவும் குறைத்துக் காட்டியும் இருக்கிறது, இது இயற்கைக்கு முரணாக உள்ளது என்று அரசுக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
மேலும் ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் அனைவரையும் கிள்ளுக் கீரையாக நினைத்து, கணக்கெடுப்பின் முடிவுகளை இறுதி வரை மற்ற உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ளவே இல்லை. கடைசி நேரத்தில் பகிர்ந்து கொண்ட பொழுது, "எங்களுக்கு கிடைத்த குறைவான காலத்தில் உறுப்பினர்கள் அனைவரும் அந்த மக்கள் தொகை புள்ளி விவரங்களை பார்த்த பொழுது அதிர்ந்து போனோம். எனவே நாங்கள் 14 உறுப்பினர்கள் அரசுக்கு பொதுஅறிக்கை சமர்ப்பிப்பது என்று முடிவுசெய்து இந்த அறிக்கையை சமர்ப்பிக்கின்றோம்" என்றும் கூறியுள்ளனர்.
பெரும்பான்மை ஆணைய உறுப்பினர்கள் அறிக்கையின் சுருக்கம்:
"முதலாவதாக இந்தக் கணக்கெடுப்பு குறைபாடு உடையது, அரைகுறையானது, நம்பத்தகுந்ததாக இல்லை. குறிப்பாக கிறிஸ்துவ மக்களுடைய மக்கள் தொகை எண்ணிக்கை முதல் சுற்றில் 22 லட்சம் என்றும் இரண்டாவது சுற்றில் 29 லட்சம் என்றும் முன்னுக்குப்பின் முரணாக புள்ளிவிவரங்கள் உள்ளது. அதேபோன்று மதம் மாறிய கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் 4,85,027 பேர் என்று முதல் சுற்றிலும், இரண்டாவது சுற்றில் மதம் மாறிய கிருஸ்துவ நாடார்கள் மட்டுமே 9,48,500 என்றும் புள்ளிவிவரங்கள் கூறியுள்ளது, முன்னுக்குபின் முரணாகவுள்ளது. அதுதவிர செளராஸ்ட்ரா, பார்கவகுலம், வலையர், முஸ்லீம், முத்துராஜா, யாதவர், அகமுடையார் போன்ற பல சாதிகளினுடைய எண்ணிக்கை மிகக் தவறாக கணக்கிடப்பட்டுள்ளது என்பதை அந்தந்த சமூகங்களே எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, சமூக கல்வி நிலைகளை கணக்கிடுவதில் மண்டல் கமிஷன் ஆணையம் போல் முறையான அளவுகோல்களை பயன்படுத்தவில்லை. வறுமையை, சமூக நிலையைக் கணக்கிடுவதில் சேர்த்து இருக்கின்றார். அது பொருளாதார காரணியாக உள்ளதால் அதை தனி அளவுகோலில் தான் வைத்திருக்க வேண்டும். எனவே நாங்கள் சமுதாயத்தின் பிற்படுத்தப்பட்ட தன்மையை அளவிடுவதற்கு தலைவர் குறிப்பிட்டுள்ள 15 புள்ளிகள் எண்ணிக்கை அளவுகோலுக்கு பதிலாக 18 புள்ளிகள் எண்ணிக்கை அளவுகோலை பரிந்துரைக்கின்றோம். சமூக நிலைக்கு 9 புள்ளிகளும், கல்வி நிலைக்கு 6 புள்ளிகளும் மற்றும் வறுமைக்கு மட்டும் 3 புள்ளிகளும் மொத்தம் 18 புள்ளிகளை அளவாக வைத்து அளவிடவேண்டும். மேலும் இந்த அளவுகோள்களில் மாநில சராசரியைவிட ஒருகுறிப்பிட்ட விகிதம் விலகியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் தமிழக அரசின் தொடர் நலத்திட்ட நடவடிக்கையால் இந்த அளவுகளில் பெரிய வேறுபாடுகள் இருக்காது. எனவே மாநில சாரசரிக்கும் குறைவாக இருந்தாலே புள்ளிகள் வழங்கவேண்டும் என்றும், அதில் 9 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தால் அந்த சமூகங்களை பிற்படுத்தப்பட்டோர் என்று அழைக்க வேண்டும்" என்றும் பெரும்பான்மை ஆணைய உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
மேலும் இரண்டாவது சுற்று மாதிரி கணக்கெடுப்பு புள்ளிவிபர விதிமுறைப்படி இல்லை என்றும், மாதிரிக் கணக்கெடுப்பு நடத்துகின்ற காரணத்தினால் பல சிறிய சமூகங்களின் உண்மையான நிலை தெரியவராது. எனவே சிறப்பு மதிப்பீட்டின் மூலமாக அப்படிப்பட்ட சமூகங்களையெல்லாம் கண்டறிய வேண்டும். உண்மையான கள ஆய்வு நிலவரம் அந்தந்த சமுதாய நிலவரத்திற்கு மட்டும் ஆறு மதிப்பெண்கள் சேர்த்து மொத்தம் 24 மதிப்பெண்களில் 12 புள்ளிகளுக்கு அதிகமாக யார் பெறுகிறார்களோ அவர்களை பிற்படுத்தப்பட்டோர் என அறிவிக்கலாம். பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதால் அரசு குறைந்தபட்சம் பெரியசாதிகளின் மக்கள் தொகை எண்ணிக்கை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும் என்று இறுதியாக பரிந்துரைத்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அந்த இறுதி பரிந்துரையை உங்கள் உடனடிப்பார்வைக்காக கீழே கொடுக்கின்றோம். அந்த மறைக்கப்பட்ட முழு அறிக்கையும் தனியாக வெளியிடுகின்றோம்.
“XXXX Lastly we unanimously recommend that the Government may do well to conduct a thorough verification of the socio educational survey conducted by the commission and also check the population figures at least the major communities by reconciling the figures with estimated projected castewise population figures available with the Government, we are of the opinion regarding some major communities, the population figures are much inflated at the cost of several other communities as the whole operation was biased.”
தோழர்களே!
ஐயா ஆனைமுத்து தொடங்கி டாக்டர் இராமதாசு உள்ளிட்ட வன்னிய அறிவுஜீவிகள் உட்பட பலரும் அம்பாசங்கரின் தில்லுமுல்லுகளை மறைத்து விட்டு, தங்கள் சாதி நலனுக்காக, இத்தனை ஆண்டு காலங்கள் அம்பாசங்கரின் அறிக்கையை வைத்து சமூக நீதி பேசியது அயோக்கியத்தனமான செயலாகும்.
அம்பாசங்கரின் அறிக்கையை நிராகரித்தும் பெரும்பான்மை உறுப்பினர்களின் பரிந்துரைகளின் ஏற்றுத்தான் எம்ஜிஆர் அரசு அந்த இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. அதற்கான ஆணையையும் பிறப்பித்து உள்ளது. அந்த ஆணையை இத்துடன் இணைத்துள்ளேன்.
G.O.NO 1564, 30th July 1985
இந்த அரசாணையில் அம்பாசங்கர் அறிக்கை என்பதை மைனாரிட்டி அறிக்கை என்று தெளிவாக எம்ஜிஆர் அரசு வெளியிட்டுள்ளது.
The government have considered the recommendations of the Tamilnadu second backward classes Commission, contained in the minority report of Thiru J.A. Ambasankar and in the majority report. என்று அம்பாசங்கர் அறிக்கையை மைனாரிட்டி அறிக்கை என்று தெளிவாக கூறிவிடுகிறது.
Accepting one of the recommendations of the majority report, the government decided that the state average may be adopted as the cut off point. என்று மெஜாரிட்டி உறுப்பினர்கள் கொடுத்த அறிக்கையை மட்டும் தான் தமிழக அரசு ஏற்றது.
மேலும்
G.O. No 1565, 30th July 1985 ல்
The total population of the backward classes as determined by the Tamilnadu second backward classes commission is approximately 33,570,805, that is, approximately 67% of the total population of the state. The majority report of the commission has recommended that in the view of the above percentage the existing reservation of 50% may be continued and needs no modification. the government accept this recommendation and decide that the reservation of seats for backward classes be made at 50% for the purposes of articles 15(4) and 16 (4) of the constitution.
பெரும்பான்மை உறுப்பினர்களின் பரிந்துரையின்படி 67 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட மக்கள் இருப்பதால் வழங்கிய 50% தொடரலாம் என்று எம்ஜிஆர் அரசு ஆணை பிறப்பித்தது. இந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் அம்பாசங்கரின் மைனாரிட்டி அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த உண்மையை சமூக நீதிப் பேசிய ஆனைமுத்து ஐயாவோ அல்லது வன்னிய நீதி பேசுகின்ற இராமதாசு அவர்களோ என்றாவது பேசியுள்ளார்களா?
சமூகநீதிப் போராட்டங்களில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி அம்பாசங்கர் அறிக்கை மோசடி என்பதை தமிழகத்தில் இருக்கின்ற அறிவார்ந்த பெருமக்கள் உணரவேண்டும். இது நாள் வரை ஆனைமுத்து தொடங்கி ராமதாஸ் உள்ளிட்ட வன்னிய அறிவுஜீவிகள் வரை இதுகுறித்து என்றாவது, எங்காவது பேசி உள்ளார்களா? ஆனைமுத்து அவர்களும் இந்த உண்மையை விளக்கி பேசியதில்லை. ஏனென்றால் ஆனைமுத்துவும் வன்னியர். தான் சார்ந்த வன்னியர் சமூகத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இருந்தார் என்று ஐயுற வேண்டி இருக்கிறது. எப்பேர்ப்பட்ட சமூகநீதி சிந்தனை உள்ளவர்களையும் சுய சாதிப்பற்று கட்டி போட்டு விடுகிறது என்பதை தான் உணர முடிகிறது. ஐயா ஆனைமுத்துவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
வரலாறு தன்னுடைய இயங்கியல் தன்மையால், பொய்மைகளைப் பேசித் திரிந்தவர்களின் முகத்தில் காரி உமிழ்ந்து, மறைக்கப்பட்ட எல்லா உண்மைகளையும் வெளிக்கொண்டு வந்துவிடும்.
குறிப்பு :
1. இத்துடன் பெரும்பான்மை ஆணைய உறுப்பினர்களின் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
2. தமிழக அரசு வெளியிட்ட அரசு ஆணையையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்
மருது பாண்டியன்
சோசலிச மையம்
6379240290
No comments:
Post a Comment