#மதுவிலக்கு ரத்தினால் கிடைக்கும் பத்து கோடி ரூபாய்க்காக இத்தனை பெண்களின் சாபத்தைப் பெறுவது நல்லது அல்ல.
_________
#கருணாநிதி 1971ஆம் ஆண்டு மதுவிலக்கை ரத்து செய்த போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் டி.என்.அனந்தநாயகி அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை.
_________
#கனம் முதலமைச்சர் அவர்களே ஒரு கதையை எழுதியிருக்கிறார். குடிகாரன் ஒருவன் குடித்துவிட்டு, தன்னுடைய மனைவியின் தலைமயிரைப் பிடித்து அடிக்கும்போது, அந்தப் பெண்ணினுடைய நிலை, 'புயலிலே ஆடிய மரம் போல' இருந்தது என்று எழுதிய கனம் முதலமைச்சர் அவர்கள் அதை மறந்துவிட்டாரா? அவருக்கு அந்த எண்ணம் வரவில்லையா?
#மதுவிலக்குச் சரியான முறையில் நடத்தப்படவில்லை. அதைச் சரியான முறையில் நடத்துவதற்கு வழி செய்திருக்க வேண்டும். முப்பது ஆண்டுகளாக நாம் புதிய குடிகாரர்களை ஏற்படுத்தாமல் இருந்தோம். அந்த நிலைமையை இப்போது திடீரென்று அழித்துவிடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். திடீரென்று மதுவிலக்கை ரத்து செய்வது உண்மையிலேயே நல்லது அல்ல. குறிப்பாக எல்லாப் பெண்களுடைய சாபத்திற்கும் ஆளாக வேண்டாம் என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் கடந்துவிடவில்லை. மீண்டும் இதை புனராலோசனை செய்ய வேண்டுமென்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
#மதுவிலக்கு ரத்தினால் கிடைக்கும் பத்து கோடி ரூபாய்க்காக இத்தனை பெண்களின் சாபத்தைப் பெறுவது நல்லது அல்ல. இந்த பத்து கோடி ரூபாயை வேறு துறைகளிலே நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். வேறு துறைகளில் பத்து கோடி ரூபாயைக் பெற்றுக் கொள்வதற்குப் பெண்களின் சமுதாயம் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது. இப்பொழுதுதான் பெண்களின் வாழ்வில் சற்று அமைதி புகுந்திருக்கிறது. அந்த அமைதியைக் குலைத்துவிடும் நிலையில் மதுவிலக்கை ரத்து செய்வது வரவேற்கத்தக்கதல்ல, வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment