இன்று கமலாலயத்தில் மாநில தலைவரோடு….
உடன் அண்ணன் @chakaravarthi257Thursday, March 19, 2026
jan 1
#ஜெயரஞ்சன்Arrogantfaceexpression'அபத்தம்…
———————————————————————————- மாநில திட்டக் குழு தலைவர் ஜெயரஞ்சன் பொருளாதாரத்தைக் கரைத்துக் குடித்துதாகச் சொல்லிக் கொள்கிற மாபெரும் மேதையான இந்த ஜெயரஞ்சன் யார் என்றால் ஒரு காலத்தில் நக்கீரன் காமராஜர் மூலம் வெளிச்சம் பெற்றவர். இவர் கடந்த எட்டு ஆண்டுகளாகத் திமுகவின் புகழ் பாடி வருகிறார். இவருக்குத்தான் திட்டக் குழுவில் தலைவர் பதவியையும் பணத்தையும் அள்ளிக் கொடுக்கிறார் ஸ்டாலின். அதை வைத்துக் கொண்டு இந்த ஜெயரஞ்சன் நன்றாக அனுபவிக்கிறார். நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என்று பேசும் இவர்தான் திட்டக்குழு நிபுணராம். மடத்தனமாக தன்னைத் தக்க வைக்க எதை வேண்டுமானாலும் பேசுபவர் இவர்! மானா வாரியாகத் திமுகவை நேற்று வரை திட்டியவர்களுக்குத்தான் திமுகவில் பதவி ! திமுகவின் ஒரு வட்டச் செயலாளர் மாதிரிப் பேசக்கூடிய இந்த ஜெயரஞ்சன் எப்படிப் பொருளாதார மேதையாவார்? கடந்த அதிமுக காலத்தை விமர்சித்தது தொடங்கி இப்போது வரை ஒன்றும் புரியாத உளறுவாயனாக இந்தப் பொருளாதாரப் பேதை இருக்கிறார். திண்டுக்கல் லியோனி எப்போது திமுகவிற்கு வந்தார் என்றே தெரியவில்லை! ஆனால் வந்த உடனே அவருக்குத் தமிழ்நாடு பாட புத்தக குழுவில் தலைவர் பதவி. தங்களை மானா வாரியாகத் திட்டியவர்களுக்கு எல்லாம் திமுகவில் பதவி! இதுதான் ஸ்டாலின் திமுக! இப்படியாக நியமனம் பெறும் இந்தச் சுயநலவாதிகளை யார் என்றாவது கலைஞருக்குத் தெரியுமா? ஒரு காலத்தில் எங்களைப் போல திமுகவில் உழைத்தவர்கள் எல்லாம் எங்கோ இருக்க நேற்று வரை திமுகவை வசை பாடியவர்கள் திட்டியவர்கள் கேவலமாக விமர்சித்தவர்கள் எல்லோரும் அங்கேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என்று ஸ்டாலின் வீட்டை சுற்றிப் பதவி வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் ஸ்டாலினுக்கு தெரிந்த திராவிடச் சித்தாந்தமா? இல்லை திராவிட மாடலா? கலைஞர் காலத்தில் உடலும் மனமும் இசைந்து திமுகவிற்காக வாழ்நாள் முழுக்க வேலை பார்த்தவர்கள் எல்லாம் வெளியேற்றப்படுவதுதான் ஸ்டாலின் உடைய திமுக! ஸ்டாலினைச் சுற்றி அவரது புகழ் பாடுபவர்களே எல்லா வகையான பதவிகளையும் அனுபவிக்கும் போது அது அண்ணா காலத்து திமுக வாக எப்படி இருக்க முடியும்? இல்லை கலைஞர்காலத்து திமுகவாகக் கூட எப்படி இருக்க முடியும்? ஸ்டாலினுடைய எடுபிடியாக வந்தவர் தானே இந்த ஜெயரஞ்சன் இவருக்கெலாம் எப்படி தொலைநோக்குடைய அறிவு இருக்கப்போகிறது.? நேற்று தமிழ்நாடு பெரும் கடனில் மூழ்கித் தத்தளிக்கிறது! அதிலிருந்து எப்படித் தப்பிக்க போகிறது என்று சொன்னவர் தான் இவர்! இந்தியாவில் அதிகமாக கடன் பட்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையிலே இந்த கடன்களால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து இல்லை என்று சொல்லுகிறார் இந்த மெத்தப் படித்த புத்திசாலி! ‘கடன் சுமை தாங்கி' புகழ் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் என்கிறவர் முன்பு சொன்னது, அதாவது அவரது ஆய்வின் முடிவு... ''ஊழல் என்பது திராவிட இயக்க அரசியலின் இயல்பான விளை பொருள்'' ஆகும்! ஜெயரஞ்சன் Arrogant face expression'னோடு கொடுத்த இன்டர்வியூ எல்லாம் stupidly …. 2018ஆம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சியில் இவர் பேசிய முதல் காணொளியில் இவர் ஒரு கணக்கு சொல்கிறார். அதாவது, ஒரு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% சதவீதத்திற்கு மேல் கடன் வாங்க கூடாது என்று நிபுணர் போல பேசுகிறார். திமுக ஆட்சியில் திட்டக்குழு துணைத்தலைவராக இப்போது பதவி வகித்து கொண்டிருக்கும் அவர் இரண்டாவது காணொளியில் ஏன் கடன் குறைய வேண்டும்? கடனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? என கேட்கின்றார். அவர் சொல்லும் கணக்குப்படியே பார்த்தாலும்... மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) டிசம்பர் 2025இல் — ₹35.67 லட்சம் கோடி தமிழ்நாட்டின் கடன் டிசம்பர் 2025இல் — ₹9.25 லட்சம் கோடி இந்த கடன் 26% ஆகும். இவர் சொல்லும் 25% தாண்டிவிட்டது. உங்களுக்கெல்லாம் குற்ற உணர்ச்சியே இருக்காதா? இந்த கடன் யாரு தலையில விடியும்?எந்தவொரு புரிதலுமின்றி, கேள்வி கேட்கும் நெறியாளர் தனக்கு அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லுறாங்க... தமிழகம் படித்த மாநிலம் என்று சொல்லுகிறார்கள்! என்ன இழவோ இவர் மாதிரி ஆட்கள் தான் இங்கு பொருளாதார மேதை! இது மாதிரியான ஆட்களை வைத்துக்கொண்டுதான் ஸ்டாலின் ஆட்சியழுது கொண்டிருக்கிறார். இதெல்லாம் ஒரு ஆட்சி இதுதான் இன்றைய திமுகவாம்! சே!! #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்திமுக கூட்டணி jan 1
சரி, திமுக கூட்டணியில் இருந்த போது……திமுவுக்கு எதிராக 2001, 2006 மற்றும் 2016 இல் மக்கள் நல கூட்டணி நீங்களதான் அமைத்தீரகள… அன்று திரை மறைவில் என்ன நடந்தது
jan 1
Because you don’t understand doesn’t mean that the explanation doesn’t exist.Try to note the difference between knowing, understanding and
http://accepting.You may know lot of things but you will understand only some of those and tend to accept only a few.Many times you might compromise in the name of acceptance and say i have sacrificed. Acceptance should be whole hearted it should not come by force, then you will live peacefully and will never complain, instead you will feel happy and soulfully. #HappyNewYear….. #ksrpostJan 1
அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்.
தேவையற்ற இலைகள் உதிரும் படியாக மரமும்,தேவையற்ற இறகுகள். உதிரும்படியாக பறவைகளும் இருக்கையில் தேவையற்றதெல்லாம் உதிரும்படியாகவே வாழ்வும் இருக்கும். நாம் துளிர்க்க அனுமதிப்பது போல, உதிர அனுமதிபோம்தாவரமாக இருங்கள்!
Subscribe to:
Posts (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...