Thursday, March 26, 2026

jan 26

 "படமுடியாது இனித்துயரம் படமுடியாது அரசே" என்னும் வள்ளலார் பாடலடி மனத்தைப் படாதபாடுபடுத்திக்கொண்டிருக்கிறது.காரணமில்லாமலா?

#RepublicDay #ConstitutionofIndia #இந்தியஅரசியல்சாசனம் #தமிழ்கையெழுத்து⁉️

 #RepublicDay #ConstitutionofIndia

#இந்தியஅரசியல்சாசனம் #தமிழ்கையெழுத்து⁉️ ———————————————————————————— கடந்த 28ஆண்டுகளுக்கு (1998)முன்பாக இந்திய அரசியல் சாசனத்தின் மூலப்பிரதி ஒன்றின் நகலை மதிப்பிற்குரிய வெங்கையா நாயுடு அவர்களின் பிரதியை அவரின் கையெப்பமுடன் பெற்றுக் கொண்டேன்! அப்போது அவர் மத்திய அமைச்சராக இருந்தார் துணை ஜனாதிபதியாக ஆக வில்லை. அந்த நகல் பிரதியில் பலரின் வேற்று மொழி 284 கையெழுத்துகளுக்கு இடையே தூத்துக்குடியைச் சார்ந்த மு வீரபாகு அவர்களின் ஒரே ஒரு தமிழ்க்கையெழுத்து மட்டும் அபூர்வமாகப் போடப்பட்டிருந்தது. அதை அப்படியே இங்கு கொடுத்துள்ளேன். இன்று இந்திய நாட்டின் குடியரசு தினம்.! சுதந்திரத்திற்குப் பிறகு நம்மை நாமே ஆள்வதற்கும் குடிமை இயலை வகுப்பதற்கும் சட்டம் நீதி சார்ந்த பாரபட்சம் ஏதுமில்லாமல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தச் சாசனம் எழுதப்பட்டு நமக்கு நாமே ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் இது!. இந்த நாளில் தான் இந்தியா குடியரசு நாடாக மலர்ந்தது என்று உலகத்திற்கு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் குடியரசும் ஜனநாயகமும் கலந்த ஒரு தனித்த நாடாக இந்தியா இன்று வரை பாரதம் என்ற பெயரில் வழங்கி வருகிறது. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது பல காலனிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும் நாடாளுமன்ற ஐனநாயக முறையும்;அமெரிக்காவிலும் பிரான்ஸிலும் குடியரசு என்கிற அரசியல் வழிமுறை நடந்து வருகிறது!அங்கு பிரதமர் மிக வலிமையானவராக இருப்பார். பிரிட்டிஷ நாடாளுமன்ற ஜனநாயக முறையில் அதன் காலனி நாடுகளில் ஆட்சி நடக்கின்றது. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என பன்மையில் ஒருமை என்று பல்வேறு கலாச்சார மொழித்தேசியங்களை இணைத்து அத்தனை வேற்றுமையிலும் ஒற்றுமை என்று உலகே வியக்குமாறு ஒரு கட்டுக்கோப்பான நாடக இந்தியா இன்று வரை விளங்கி வருகிறது. பல்வேறு கலாச்சாரங்கள் பல்வேறு பண்பாடுகள் பல்வேறு இனமொழிக்கூறுகள் பல்வேறு உணவுப் பழக்க வழக்கங்கள் விவசாய முறைகள் நிலங்களில் உண்டாகும் சுற்றுச்சூழல் அனைத்தையும் இணைத்து இந்திய ஒருமைப் பாட்டின் கீழ் ஒரு முழுமை பெற்ற நாடாக இந்தியா பாரத் என்கிற பெயரில் விளங்கி வருகிறது. உலகின் வேறு எந்த கான்டினென்ட்களிலோ அல்லது இனக் குடியேற்ற நாடுகளிலோ இத்தகைய ஒற்றுமையைக் காண முடியாது. அவ்வளவு கட்டுத்திட்டமான அமைப்புகளோடு கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்ட சோவியத் ரஷ்யாகூட சிதைந்து போனது அதை அடுத்து செக்கோஸ்லாவியா சிதைந்து போனது. ஆனால் எவ்வளவோ ஏற்றத்தாழ்வுகள் உள்நாட்டு முரண்பாடுகள் பல வந்தாலும் கூட இந்தக் குறிப்பான ஜனநாயக பண்பு என்பது இந்திய நிலத்திற்கே உரிய தனித்துவமான அனைத்து உலகிற்குமான ஒரு எடுத்துக்காட்டு என்று சொன்னாலும் மிகை இல்லை. அத்தனை இடர்பாடுகளுக்கும் இடையே கூட இந்திய ஒருமைப்பாட்டின் அதன் ஆன்மா மீது நம்பிக்கை வைத்து முழு மக்களும் அதைக் காத்துக் கொண்டு வருகிறோம். இந்திரா அம்மையார் காலத்தில் எமர்ஜென்சி வந்தது! மிக மோசமான முறையில் உள்க் கலவரங்கள் வந்த போதும் கூட அதிலிருந்து இந்தியா மீண்டது. மத்தியில் எத்தனையோ நிலையற்ற ஆட்சிகள் அமைந்தன. அது எவ்வகையாக இருந்தாலும் நமது ஜனநாயகத்திற்கு எந்த விதத்திலும் ஆபத்து ஏற்படவில்லை. எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை! அதுதான் இந்தியா! அதுதான் பாரத்!! Did you know that the hand written original constitution carries signatures of 284 members, out of a total of 299, of the constituent assembly who had signed the constitution after the completion? The first to put his signature on the document was Jawharlal Nehru while at the end of the page 10 we can see his son in law Feroze Gandhi as the last man to sign. Being the president of the assembly, we can see, Rajendra Prasad’s signature was assigned a place at the top. heritagetimes.in/original-signa #RepublicDay2026 #ambedkar #ConstitutionofIndia Read the complete story in the comments section #ksrpost #கே௭ஸ்ஆர்போஸ்ட்





இந்த மேஜையில் கேரள பாஜக மாநிலத் தலைவருடன் கடைசியில் இருந்து உணவருந்துபவர் யார் என்று தெரிகிறதா?

 இந்த மேஜையில் கேரள பாஜக மாநிலத் தலைவருடன் கடைசியில் இருந்து உணவருந்துபவர் யார் என்று தெரிகிறதா? இவர்தான் குமணம் ராஜசேகரன். கேரள பாஜகவின் மாநில தலைவர்; பின்னர் ஆளுநராகவும் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல இப்போதும் அமைதியாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்.

எவ்வளவு உயரிய பதவிகளை வகித்தாலும் சிறப்பாக பணியாற்றி தனக்கான காலம் முடிந்த பிறகு அமைதியாக ஒரு சாதாரண தொண்டனைப் போல மீண்டும் பணியாற்றும் தலைவர்களை பாஜகவில் மட்டுமே பார்க்க முடியும். கேரள பாஜக அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பல அறிய வெற்றிகளை அடைந்தது. இருந்தாலும் அங்குள்ள யாரும் இதற்கு முன்னிருந்த தலைவர்களை அவதூறு செய்யவில்லை. தமிழகத்தில் மட்டும் ஒரு சில விலை போனவர்கள், இப்போது அடைந்து வரும் வெற்றிகளை கொண்டாடும் முகமாக, முந்தய தலைவர்களை அவதூறு செய்யும் அவல நிலை தமிழகத்தில் மட்டும் காணப்படுகிறது. கட்சி என்பது 100 மீட்டர் ரேஸ் அல்ல மராத்தான் ரேஸ். அதுவும் மராத்தான் ரிலே ரேஸ் என்று தான் கூற வேண்டும். அடுத்தடுத்து பல தலைவர்கள் பல தொண்டர்கள் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்து கட்சியை வளர்த்து வருவார்கள். எவ்வளவு கடினமான மாநிலமாக இருந்தாலும் என்றாவது ஒரு நாள் வெற்றி நிச்சயம்.

jan 26


 

The soul, a poet said, is composed of the external world

 The soul, a poet said, is composed of the external world. There are women of a city who are that city… similarly, there are women of Venice who are that Venezia




Republic day 2026

 Republic day 2026

*அரசியலில் நேர்மையாக இருக்க முடியுமா?* *மகள் இறந்த போது "நேர்மைக்காக மகளைக்கூட பலி தருவேன்" என்று கூறிய முதல்வர் -பிரதமர் மொரார்ஜி தேசாய்..* *இருக்க வீடின்றி ரூ.500 பென்சனில் வாழ்ந்த பிரதமர் குல்சாரிலால் நந்தா!* *நேர்மையான ஆளுமைமிக்க தலைவர்கள் சரித்திர காலத்தில் மட்டுமல்ல நேற்று கூட வாழ்ந்திருக்கிறார்கள். நமது கவனத்தையும், கருத்தையும் சிறிது பின்னோக்கி நகர்த்திச் சென்றோம் என்றால் அற்புதமான பல தலைவர்களின் அடிச் சுவடுகளைக் காண முடியும்*. *இந்தியாவின் மிகச்சிறந்த பிரதம மந்திரிகளில் ஒருவராக இருந்தவர் மொரார்ஜி தேசாய் என்பது நாம் அறியாதது அல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒரே மாதிரியாகக் கொண்டுவந்து மக்கள் பலரின் சுமையைக் குறைத்தவர் அவர்*. *தாலி செய்வதற்குக் கூட தங்கம் வாங்க முடியாத அந்தக் காலத்தில் தங்கத்தின் விலையைப் பல மடங்காகக் குறைத்து ஏழையின் குடிசையிலும் தங்கம் குடியிருக்க முடியும் என்று காட்டியவர்*. *இப்படிப்பட்ட மொரார்ஜி தேசாய்க்கு எத்தனைக் குழந்தைகள்? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? எப்படி இருந்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா? நிச்சயம் முடியாது. தேசாய் போன்ற தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்களே தவிர தனது சொந்த மக்களுக்காக சுயநலத்தோடு விளம்பரம் பண்ணிக் கொண்டு வாழவில்லை*.




சுத்தமல்லி அணை - கோபாலசமுத்திரம் தாமிரபரணி பாலம், திருநெல்வேலி மாவட்டம் !!!

 சுத்தமல்லி அணை - கோபாலசமுத்திரம் தாமிரபரணி பாலம், திருநெல்வேலி மாவட்டம் !!!

Suthamalli Check Dam - Gopalasamudram Thamirabarani Bridge, Tirunelveli District !!! #suthamalli #checkdam #gopalasamudram #thamirabarani #tirunelveli



#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...