Sunday, September 18, 2022
*வேலுப்பிள்ளை பிரபாகரன்* *தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்* | *எனது நட்பு*-*பகுதி-5, Part-5* |
*எனது தன்னிலை விளக்கம்* *நண்பர்களுக்கு, உற்றார்- உறவினர்களுக்கு….*
Friday, September 16, 2022
இன்று கி.ரா.நூற்றாண்டு…
(தினமணி-17-9-2022)
18-9-2022 இரவு 7மணியளவில்…
*அறிஞர் அண்ணா: தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை!*
*கரிசல் இலக்கிய பிதாமகன் கிரா* *நூற்றாண்டு விழா*
Thursday, September 15, 2022
திராவிடன் ஸ்டாக்... திராவிடன் மாடல்! Dravidian Stock,Dravidian Model!
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் இன்று,15-9-2022 ‘’திராவிடன் ஸ்டாக்... திராவிடன் மாடல்!’’ என்ற எனது சிறப்பு கட்டுரை இன்றைய தினமணியில்…..
அதிகப்பெரும்பான்மையுடன்தி.மு.க தமிழக ஆட்சியில் பொறுப்பேற்றுள்ளது. மக்களின் மனவோட்டத்தின்படி திராவிட மாடல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சும் செயல்பாடும் உள்ளது. .
திரவிடியன் ஸ்டாக், திரவிடியன் மாடல், அதன் அணுகுமுறை அதாவது திராவிடனுக்கே உரிய மரபு, கொள்கையைப் சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அச்சகம் 1938 - இல் வெளியி்ட்ட H.G.RAWLINSON என்பவர் எழுதிய A CONCISE HISTORY OF THE INDIAN PEOPLE என்ற ஆங்கில வரலாற்று நூலில் சொல்லப்பட்டிருக்கிறது திராவிடியன் ஸ்டாக் என்ற சொல்லாடல். பேரறிஞர் அண்ணா காஞ்சிபுரம்சட்டமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குச் செல்கிறார். அங்கு ஏப்ரல் 1962- இல் ஆற்றிய கன்னிப் பேச்சில் “I BELONG TO DRAVIDIAN STOCK. I AM PROUD TO CALL MYSELF A DRAVIDIAN” என்றார்.அதாவது, ``நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன், திராவிடன் என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த பெருமை கொள்பவன்’’ என்று அவையில் உரையாற்றினார். திராவிடியன் ஸ்டாக் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார்.
திராவிடம் என்று சொல்லுக்கு எதிர்வினையாக சிலர் பேசி வருவது ஆரோக்கியமனது அல்ல. இந்த எதிர்வினக்கு கோட்பாட்டுரீதியாக தக்க பதில்கள் உள்ளன. இனம் என்று எடுத்துக் கொண்டால், உலகம் முழுவதும், தொடக்கத்தில் மரபினங்கள் இருந்தன. பிறகு அவை தேசிய இனங்களாகப் பரிணாம வளர்ச்சி பெற்றன. இந்த அடிப்படையில் அவர்கள் வாழ்கின்ற பூமியை நிலத்தை அவர்களுடைய மரபுரீதியிலான மாநிலமாகவும் நாடாகவும் அரசியல்ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நம் பழைய மரபினத்தின் பெயர் ‘திராவிடர்’ என்பது. ஆனால் இன்று ‘திராவிடம்’ என்னும் சொல், மொழியை, இனத்தை, நாட்டைக் குறித்ததிலிருந்து விடுபட்டு, ஒரு கருத்தியலை, ஒரு சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல்லாக மாற்றம் பெற்றுள்ளது. இதற்கு ஆதிச்சநல்லூர், கீழடி என பல களங்கள் சாட்சியாகவும் நம்மிடையே இருக்கின்றன.
ஆதிசங்கரர், காஷ்மீர் பண்டைய இலக்கியம் எனத் துவங்கி பக்தி இலக்கியங்கள், தாகூர், கால்டுவெல், ஜி.யு.போப்,சுந்தரனார் என வையாபுரி பிள்ளை வரை பலர் வழிமொழிந்ததுதான் திராவிடம்.
திராவிடன் ஸ்டாக் என்பது தொன்மையான தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழ்நாடு மட்டுமல்லாமல், தமிழிலிருந்து பிறந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் இன மக்களின் கலாசாரமும் புவியியலும் ஒன்றோடொன்று பின்னி இணைந்ததாகும். ‘வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது’ என்று சொன்ன அண்ணா, தமிழ் மக்களின் உரிமைகளையும் தனித்தன்மையையும் உரிமையோடு போற்றிப் பாதுகாக்க மாநில சுயாட்சியும் அவசியம் என தனது உயிலாக ‘காஞ்சி’ ஏட்டில் எழுதினார்.
மாநில சுயாட்சி என்பது, திராவிட இயக்கத்தின் குரல் மட்டுமல்ல, திலகர் பூர்ண சுயராஜ்ஜியம் என்று குறிப்பிட்டதிலிருந்தே அது தொடங்குகிறது. காங்கிரஸின் லக்னோ உடன்படிக்கை, மோதிலால் நேரு தலைமையிலான காங்கிரஸ் காரிய கமிட்டியின் அறிக்கை மற்றும் பல்வேறு குழுக்கள் மாகாண சுயராஜ்ஜியம் என்று கூறியுள்ளது. அதுவே மாநில சுயாட்சியாகும். இந்நிலையில் ‘காஞ்சி’ இதழின் தைத்திருநாள் சிறப்பு மலரில் மாநில சுயாட்சியைப் பற்றி விரிவான கட்டுரையை அண்ணா எழுதி வெளியிட்டார். இதை ஆங்கிலத்திலும் அண்ணா எழுதியுள்ளார். இதுவே அவரின் இறுதி உயிலாகும்.
திராவிடம் என்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, நலனுக்காக, உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதே! இதன் அடிப்படையில் உருவானதே மாநில சுயாட்சி. அண்ணாவின் உயிலை நடைமுறைப்படுத்தும் வகையில் தலைவர் கலைஞர் மாநில சுயாட்சிக்காக ராஜமன்னார் குழுவை அமைத்து, அதன் அறிக்கையை 1974- இல் பெற்று, அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்தார். மாநில சுயாட்சியை தலைவர் கலைஞர் முன்னெடுத்து சுவிட்சர்லாந்து போன்று மாநிலங்களுக்குத் தனிக்கொடி, முதல்வர்கள் அந்தந்த மாநிலத்தில் விடுதலை நாளான ஆகஸ்ட் 15- இல் கொடியேற்றும் உரிமை என்பதை முன்னெடுத்தார்.
இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் மாநிலத் தனித்தன்மையுடனும், மாநில சுயாட்சியுடனும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என்பதே அண்ணாவின் நோக்கமாக இருந்தது. இதைத்தான் ஆங்கிலத்தில் `DIRAVIDIAN STOCK’ என்று குறிப்பிடுவர். அதுமட்டுமல்ல, சமூகநீதி, தமிழ்மொழி பாதுகாப்பு, இங்குள்ள தமிழர்கள் மற்றும் உலகு எங்கும் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு, தமிழ் கலாசாரம், தமிழக உரிமைகள் ஆகியவற்றுக்கு தனித்தன்மையோடு உரிமைக்குக் குரல் கொடுக்கக் கூடிய கொள்கை, கோட்பாடுகள், தத்துவங்களே திராவிடன் ஸ்டாக் எனப் பொருள்படுகின்றது.
இதேபோன்று `DIRAVIDIAN MODEL’ பற்றியும், தமிழகப்பொருளாதாரம் வளர்ந்த விதம் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, இன்றைய அரசியல் களத்தில் அவசியமானதாகிறது. அதாவது இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் சமச்சீரான வாய்ப்பை வழங்க வேண்டும். ஒரு மாநிலத்தைச் செழிப்புறச் செய்து, வேறு ஒரு மாநிலத்தை மாற்றாந்தாய்ப் போக்கில் இந்திய அரசு நினைப்பதை அறவே ஒழித்திட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் சமன்பாடான நிதியை ஒதுக்கி, இந்தியத் திருநாட்டின் அனைத்துப் பகுதிகளும் சமச்சீரான வகையில் வளர்ந்திடுவதற்கான வழிமுறைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மாநிலங்களிடையே பாகுபாடற்ற நடைமுறைகளே உண்மையான கூட்டாட்சிக்கும் மாகாணங்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
.
இந்திய அரசியல் சாசனம் உலகிலேயே அதிகப் பக்கங்களும் பிரிவுகளும் கொண்டது. இதுவரை சுமார் 110 திருத்தங்கள் 75 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. இதில் 105 திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுள்ளன. இவற்றில் சில, திருத்த மசோதாக்களாக நிலுவையில் உள்ளன. ஏறத்தாழ 125 முறை பிரிவு 356 - ஐப் பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசு தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியின் அளவு நிறைவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தி.மு.க ஆட்சிக் காலத்தில் இத்தனை தடங்கல்களையும் தடைகளையும் தாண்டி, தமிழகம் பொருளாதாரரீதியில் முன்னேற்றப் பாதையில் சென்று, முன்னோடி மாநிலமாக விளங்கிக்கொண்டிருக்கிறது என்றால், இதுதான் `திராவிட மாடல்’ என்று தெளிவாகக் குறிப்பிடலாம். இதற்கு, தலைவர் கலைஞருடைய நிர்வாகத் திறமை மேலும் வலுவூட்டியது.
அதேசமயம், திமுக இந்திய ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் முன்னோடியாகவும் திகழ்கிறது. சீனப் போர், பாகிஸ்தான் போர், வங்கதேசம் உதயம் காலத்தில் திமுக போர் நிதியாகவும், மத்திய அரசுக்கு ஆதரவாகவும் இருந்தது. தலைவர் கலைஞர் இந்திய குடியரசுத் தலைவர்கள் மற்றும் பிரதமர்களை சரியாகத் தேர்வு செய்தும் உள்ளார். தமிழகம் மற்றும் புதுவையைப் பொருத்தவரையில் மக்களவை மற்றும் மாநிலங்களையில் மொத்தம் 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நமது மாநிலப் பிரச்சனைகள் குறித்து குரல் எழுப்ப வேண்டும். அதன் மூலம் அம்மாநிலங்களுக்குத் தேவையான நிதி, திட்ட செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். உதாரணமாக, நதிநீர் பிரச்சனையை எடுத்துக்கொண்டால், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என்று மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். மறுக்கவில்லை. இவை உயிர்நாடியான பிரதான பிரச்சனைகள்தாம். ஆனால், தமிழகத்தின் 20க்கு மேல் இன்னும் நதிநீர் பிரச்சனைகளைப் பேசத் தவறிவிட்டோம்.
இப்படி தமிழகத்தின் தொன்மைமிக்கப் பிரச்சனைகளை எல்லாம் தெளிவாக நாடாளுமன்றத்தில் விளக்கி விரைவான தெளிவு பெறும் வகையில் சபையில் உரையாட வேண்டும். அதுதான் திரவிடியன் ஸ்டாக்.
இந்தியாவில் மக்களுக்குத் தேவையான வாழ்வாதாரத் திட்டங்களை திராவிட ஆட்சியாளர்களே அதிகம் கொண்டுவந்துள்ளனர்.
சமீபத்தில் விவாதத்தில் எழுந்த இலவசங்கள் வேறு, நலத்திட்டங்கள் வேறு. பொதுவாக கல்வி, மருத்துவம், விவசாயம் போன்ற துறைகளில் வளர்ச்சிக்காக இலவசமாக வழங்கினால் அது ஃபிரீபீஸ் என்று சொல்லக் கூடிய இலவசங்கள் என்று சொல்ல முடியாது. இது நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் நல அரசு வழங்குகின்ற திட்டங்கள்தாம்.
இந்தியாவிலேயே முதன்முதலாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம், கை ரிக்சா ஒழிப்பு (மேற்குவங்கத்தில் இன்னும் கைரிக்சா உள்ளது), குடிசை மாற்று வாரியம், சமச்சீர் கல்வி, எல்லா கிராமங்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் 1974 - இலேயே முழுமைப்படுத்திவிட்டனர். மற்ற மாநிலங்களில் 2010 - இல்தான் முழுமையடைந்தது.பள்ளி மாணவர் இலவச உணவுத்திட்டம் போன்ற பல முன்னோடியான மாதிரியாக பல திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுகின்றன. இதுவே திராவிட மாடல்.
தமிழகத்து மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்ற நிலையில் கொண்டு வருவதுதான் திராவிடியன் மாடல் என்பது. திராவிடியன் ஸ்டாக் என்பது நம் உரிமைகளை நாடே கேட்க உரக்க எடுத்துரைத்து, உரிமைகளைப் பெறுவது. அதாவது, உரிமைக்குக் குரல்கொடுப்போம்… உறவுக்குக் கை கொடுப்போம். திராவிடியன் மாடல் என்பது நம் வாழ்நிலையை உயர்த்திக் கொள்வதற்கான கடப்பாடுகள் என்ன, திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வழிவகைகள் என்ன என்பதை ஆய்ந்தறிந்து கொள்வது.
தமிழக அரசில் ஏறத்தாழ 34 துறைகள் உள்ளன. இதில் சமூகநலத்துறை, புள்ளிவிவரத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதி திராவிடர் நலத்துறையிலிருந்து பெரிய வருமானங்கள் மாநில அரசுக்கு வருவதில்லை. மற்ற துறைகளிலிருந்துதான் தமிழக அரசு வருவாயை ஈட்ட வேண்டும். ஏற்கெனவே ஜிஎஸ்டி வகையிலும் தமிழகத்திற்கு வர வேண்டிய பங்கு வராமல் இருக்கின்றது.
திராவிடன் ஸ்டாக், திராவிட மாடல் ஆகியவற்றை கொள்கைரீதியாக, அறிவியல்ரீதியாக பலவகையாகப் பகுக்கலாம். இதுதான் அண்ணா வகுத்துத் தந்து, தலைவர் கலைஞர் முன்னெடுத்த திராவிடத் தத்துவம்
திராவிடம் வழியே மக்கள் நலப் புரட்சியை ஏற்படுத்துவோம்...
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-அரசியலார்
#KSR post
15-9-2022.
Wednesday, September 14, 2022
*இந்தியாவில் 283 கட்சிகள் ஒப்புக்கு சப்பாணியாக தேர்தல் கமிஷ்னில் பதிவு செய்துள்ளது.*
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...