1972ம் ஆண்டு "புதிய தமிழ்ப்புலிகள்" என்று தொடங்கப்பட்ட இயக்கம் 1976ம் ஆண்டு மே 5ம் நாள் "தமிழீழ விடுதலைப் புலிகள்" என களம் காணத் தொடங்கியது. இது குறித்து பிரபாகரன் மற்றும் அவருடைய சகாக்களோடு தோழமையோடு பழகிய நாட்களில் அவர்கள் சொல்லிய செய்திகளும், நான் அறிந்த சில நிகழ்வுகளையும் கீழே தொகுத்து தந்துள்ளேன்.

துவக்கத்தில் ஒரு பழைய துப்பாக்கியை வைத்துக்கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இனி சகவாழ்வு முடியாது சிங்களர்களோடு. தனி வாழ்வுதான் என்ற நிலையில் யாழ்ப்பாண பகுதி மாணவர்களை கூட்டி தமிழர்களுடைய விடுதலைக்கு தனி நாடு வேண்டும் என்று இயக்கத்தைத் துவக்கினார். எந்த வசதி வாய்ப்பும், ஆரம்பத்தில் இயக்கத்தை கட்டி அமைக்க தேவையான எந்த புன்புலமும் இல்லாமல் உலகமே வியக்கத்தக்க வகையில் தனி மனிதனாக பின் சில தோழர்களோடு சர்வபரி தியாகங்களோடு கட்டி அமைத்ததுதான் விடுதலைப் புலிகள் இயக்கம்.
இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கை அரசுகள் தமிழர் மீதான அடக்கு முறைகளையும் தமிழரை புறக்கணிக்கும் நடவடிக்கைகளையும் புரிந்து வந்தது. சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்திய பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் மற்றும் அதை தொடர்நத பல ஒப்பந்தங்கள் மூலம் இந்தியத் தமிழர்களை நாடு கடத்தியது. இச்செயல் இலங்கையில் இனச் சதவீதத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. மேலும் மகாவலி, கல்லோயா போன்றத் குடியேற்றத் திட்டங்களின் மூலம் வட கிழக்கிந் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களைவர்களைக் குடியேற்றியதன் மூலம் அப்பகுதிகளில் தமிழர் சதவீதம் குறைக்கப்பட்டது. சிங்களத்துக்கு முன்னுரிமை வழங்கும் சிங்கள மட்டும் சட்டம், 1956,1958 ஆண்டு இனக் கலவரங்கள் மேலும் 1970 இல் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் திட்டம் மூலம் இலங்கை பல்கலைக்கழகம் செல்லும் தமிழ் மாணவகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் இலங்கை அரசின் மீது வெறுப்பை கொண்டிருந்தனர். காந்திய அகிம்சை கோட்பாடுகளை கைக்கொண்டு வந்த தமிழ் கட்சிகளின் அகிம்சைப் போராட்டங்களும் பலனற்றுப் போயிருந்தது. 1957 இன் பண்டா செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்படுதல் போன்றச் செயற்பாடுகளால் மக்கள் தமிழ் அரசியல் தலைமைகளையும் நம்ப மறுத்தனர்.
தமிழ் மாணவர் பேரவை:
இதன் விளைவாகத் தமிழ்ப் பகுதியில் அரசியல் வெற்றிடம் ஒன்று தோன்றியிருந்தது. புரட்சிகர அரசியல் அமைப்பு ஒன்றின் தேவை தமிழர் தரப்பால் உணரப்பட்டது. இந்த நிலையில் தமிழ் மாணவர் பேரவை என்ற மாணவர் இயக்கம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சத்யசீலன் போன்றவர்கள் இதை முன்னெடுத்துச் சென்றனர். இலங்கை அரசு கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் மாணவர் பேரவை நடாத்தியது. தமிழ் மாணவர் நடுவே பெரும் சக்தியாக இப்பேரவை வளர்ந்தது. இவ்வமைபின் தீவிரவாதக் குழுவின் முக்கியமானவராக வே. பிரபாகரன் இயங்கினார். தொடக்க காலத்தில் கைக்குண்டுகள் செய்வதற்கும் துப்பாக்கியால் சுடுவதற்கும் இவர்கள் தாமாகவே பயிற்சி பெற்றனர். இந்தத் தீவிரவாதக் குழுவில் பிரபாகரனுக்கு நெருக்கமான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 பேருக்கு மேற்பட்டடோர் இருந்தனர்.
இக்கால கட்டத்தில் அரசாங்கத்திற்குத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அரசு பேருந்து ஒன்றை எரிப்பது என்ற முடிவை பொறுப்பேற்றுக் கொண்டு 16 வயதான வே. பிரபாகரன் நான்கு பேர் சென்றார்கள். ஆனால் மற்றவர்கள் மூவரும் நடுவிலேயே அச்சமிகுதியால் திரும்பி ஓடி விட்டார்கள். வே. பிரபாகரன் மட்டும் சென்று அரசு பேருந்தைக் கொளுத்தி விட்டுத் திரும்பி வந்தார். பிரபாகரனின் இந்தத் துணிவும், ஆற்றலும் அனைவரையும் கவர்ந்தன.
தமிழ் மாணவர் பேரவையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்த இலங்கை அரசு அதை ஒடுக்குவதற்கு முயன்றது. தமிழ் மாணவர் பேரவை இளைஞர்கள் சிலரை இலங்கை காவற்துறையினர் கைதுசெய்து சித்திரவதை செய்தத்திக் கைடைத்த தகவல்களைக் கொண்டு இயக்கத்தில் முக்கிய பலரை கைது செய்தனர். இதன் போது வே. பிரபாகரன் தமிழகத்திற்குச் தப்பிச் சென்றார்.
புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பு தொடக்கம்:
வே. பிரபாகரன் தமிழகத்தில் இருந்து 1972 ஆன் ஆண்டின் தொடக்கப் பகுதியில் யாழ்ப்பணம் திரும்பினார். ஆங்காங்கு அரசுக்கு எதிராக போராடும் நோக்கில் சிதறுண்டு இருந்த இளைஞர்களை ஒன்றுச் சேர்த்து 1972 ஆன் ஆண்டின் நடுப்பகுதியில் வே. பிரபாகரன் அவரது 17வது வயதில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பைத் தொடங்கினார். இவ்வமைப்பு மிகக் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது.
செயற்பாடுகள்:
புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாக, 1975 ஜூலை 27 ஆம் நாள் அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் அப்போதைய இலங்கை சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும், யாழ்நகரத் தந்தையுமான அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தாக்குதலை வே. பிரபாகரனே செய்ததாக பின்னர் புலிகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டது.
புதிய தமிழ்ப் புலிகளின் அடுத்த முக்கிய நடவடிக்கையாக புத்தூர் மக்கள் வங்கிக் கிளை கொள்ளை கருதப்படுகிறது. இயக்கத்தின் தலைமறைவு வாழ்க்கைக்கும் அதனைக் கட்டியெழுப்புவதற்கும் தேவைப்பட்ட நிதியை சேர்க்கும் நோக்கில் 1976 மார்ச் 5 ஆம் நாள் இலங்கை அரசுக்குச் சொந்தமான புத்தூர் மக்கள் வங்கிக்குள் பகலில் வே. பிரபாகரன் தலைமையில் சென்றக் குழு துப்பாக்கி முனையில் 5 இலட்சம் ரூபாவையும் நகையாக 2 இலட்சம் ரூபாவையும் எடுத்துக் கொண்டுச் சென்றது.
அல்பிரட் துரையப்பா கொலை, புத்தூர் வங்கிக் கொல்லை ஆகியவற்றைத் தொடர்ந்து வடக்கில் ஒரு விசேட உளவுப் படையின் பிரிவு அமைக்கப்பட்டது. புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தை அழித்தொழிப்பதையே முக்கிய நோக்காகக் கொண்டு கொழும்பிலிருந்த காவல்துறை தலைமையகம் இப்பிரிவை உருவாக்கியது.
பெயர் மாற்றம்:

தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார்.
தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள்.
உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.
அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ்தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.
ராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.
குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.
போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள்.
ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்றுறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:
01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.
02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி
03. வான்படை
04. கரும்புலிகள்
05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு.
06. புலனாய்வுத்துறை
07. வேவுப்பிரிவு
08. ஒளிப்பதிவுப் பிரிவு
09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு
10. கணணிப் பிரிவு
11. மாணவர் அமைப்பு
12. தமிழீழ வைப்பகம்
13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
14. அனைத்துலகச் செயலகம்
15. சுங்கவரித் துறை
16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி
18. அரசறிவியற் கல்லூரி
19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு
20. வன வளத்துறை
21. தமிழீழ நிதித்துறை
22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்
24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை
25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
28. வெற்றிமனை (வலுவிழந்தோர்)
29. அன்பு இல்லம் (முதியோர்)
30. பொத்தகசாலை
31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ்
32. ஈழநாதம் செய்தி இதழ்
33. வெளிச்சம் செய்தி இதழ்
34. ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை
35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
36. நிதர்சனம்
37. புலிகளின் குரல் வானொலி
38. மாவீரர் பணிமனை
39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான)
40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
41. சேரன் வாணிபம்
42. சேரன் சுவையகம்
43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு
44. பாண்டியன் வாணிபம்
45. பாண்டியன் சுவையூற்று
46. சோழன் தயாரிப்புகள்
47. வழங்கற் பிரிவு
48. சூழல் நல்லாட்சி ஆணையகம்
49. நிர்வாக சேவை
50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு
51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு
52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு
53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்
54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை
55. தமிழீழ விளையாட்டுத்துறை
56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
No comments:
Post a Comment