நேற்று பாரதி, பெர்னாட்ஷா பற்றி பதிவு குறித்து லண்டனிலிருந்து மதிப்புக்குரிய தோழி ஒருவர் படித்துவிட்டு அவர் அனுப்பிய செய்தி வருமாறு, பெர்னாட்ஷா தன் படைப்புகளை எழுத அவர் பயன்படுத்திய அறை, அவருடைய வீடு, நோபல் பரிசு பெற்ற சான்றிதழ் போன்ற படங்களை அனுப்பி வைத்திருந்தார். அவருக்கு நன்றி.
பெர்னாட்ஷா
George Bernard Shaw பற்றிய உங்கள் பதிவு பார்த்தேன். அவர் வாழ்ந்த வீட்டை உள்ளேயும் வெளியேயும் பார்த்துள்ளேன். அவர் தனது உயிலில் தான் வாழ்ந்த வீடு, அதனுள் இருக்கும் பொருட்கள், garden அனைத்தையும் charity-க்கு எழுதி விட்டார். தனது வீட்டை அவர் இறக்கும் போது எப்படி விட்டுப் போனாரோ அப்படியே இன்றும் National trust என்னும் charity பாதுகாத்து வைத்துள்ளது. நான் போகும் போது வீட்டின் வெளிப் பகுதியில் திருத்த வேலைகள் நடந்ததால் அதைப் படம் எடுக்கவில்லை. அந்த வீடு இருக்கும் பகுதியை Shaw's Corner என்பார்கள்.
உலகிலேயே இது வரை மிகப் பெரிய இரண்டு விருதுகளான Nobel Prize and Oscar-ஐ வாங்கிய ஒரே ஒருவர் Bernard Shaw தான். இது அவர் வாங்கிய Nobel Prize and Oscar. அருகில் தெரியும் கை என்னுடையது. அக் கண்ணாடிப் பெட்டியில் கை வைத்து அவரது விருதுகளை உணரும் ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது என் பாக்கியமே. இவற்றை அவர் வீட்டிலுள்ள ஒரு அறையில் வைத்துள்ளனர்.
அவர் வீட்டைச் சுற்றி மரங்களடர்ந்த garden-இல் வீட்டை விட்டுச் சற்றுத் தள்ளிக் கொஞ்சம் ஒதுக்குப் புறமாக இந்த மரத்திலான அறை போன்ற ஒன்றைச் செய்து வைத்துள்ளார். இதிலுள்ள ஜன்னலில் சூரிய ஒளி படும் படி இதைச் சுற்றிச் சுற்றித் திசை மாற்றலாம். அவரின் புகழ் பெற்ற காவியங்கள் அனைத்தையும் அவர் எழுதியது இதனுள் அமர்ந்து தான். அவர் எழுத உபயோகித்த உபகரணங்கள், ink bottle, பாவித்த கதிரை, இன்னும் பல அவர் விட்டுச் சென்றபடியே பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன (preserved)
அவர் இறந்த பின் மிகப் பெரிய கௌரவமான Westminister Abbey-இல் அவர் உடலைப் புதைக்கும் அழைப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால் அவர் தனது உயிலில் தன் உடலை எரித்துத் தான் இறக்கும் முன் இறந்த தன் மனைவியின் சாம்பலுடன் கலந்து இருவருடைய சாம்பலையும் தமது வீட்டைச் சுற்றியுள்ள தாம் பராமரித்த பூந் தோட்டத்தில் தூவச் சொல்லி இருந்தார். அதே போலவே அவரது சாம்பல் தூவப்பட்டது.

No comments:
Post a Comment