Monday, May 2, 2016

விவசாயிகளின் தற்கொலை பேஷனாகிவிட்டது என்று ஒரு மானங்கெட்ட எம்.பி.யின் பேச்சு

மகாராஷ்டிராவைச் சேர்ந்த மானங்கெட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் விவசாயிகளின் தற்கொலை பேஷனாகிவிட்டது என்று அற்பத்தனமாக கிண்டலாக பேசியுள்ளார். வடக்கு மும்பை பாஜக எம்.பி.யான கோபால் ஷெட்டி இப்படி எகத்தாளமாக பேசியது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த வருடமே மகாராஷ்டிராவில் 124 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். விவசாயிகளின் கஷ்டங்கள், துயரங்களைத் தெரியாமல் அரைவேக்காடாக இப்படி பேசிக்கொண்டு திரிவது சாதாரணமாகிவிட்டது. மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் விவசாயிகளே, விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்கள். மோடி அமைச்சரவையில் உள்ள விவசாய அமைச்சர் விவசாயத்தை விட்டொழியுங்கள் என்றார். இப்படியான கண்ணியமற்ற வார்த்தைகள் ஏழை விவசாயிகள் மீது பாய்ந்துகொண்டே இருக்கின்றது. அப்பாவி விவசாயி என்று நினைத்துக்கொண்டு எது வேண்டுமானாலும் பேசுவதை கட்சித் தலைமைகளும் பிரதமரும் பார்த்துக்கொண்டிருப்பது வேதனையான விஷயம். நாட்டின் முதுகெலும்பான விவசாயி தொடர்ந்து நேரு காலத்திலிருந்து பாதிக்கப்பட்டுதான் வருகின்றான். மேலை நாட்டுக்காரன் சொல்லைக்கேட்டு பசுமைப் புரட்சி என்று விவசாயத்தை நாசப்படுத்தினார்கள். தொழில்தான் பிரதானம் என்று விவசாயத்தை அழித்தார்கள். இந்த உண்மைகள் வரலாற்றில் பதிவாக வேண்டும். எவ்வளவு எல்லாம் விவசாயி வஞ்சிக்கப்பட்டான். விவசாயம் எப்படியெல்லாம் நாசப்படுத்தப்பட்டது என்பதற்கு நம் ஆட்சியாளர்கள்தான் காரணம் என்பதை வரலாறு ஒருகாலமும் மன்னிக்காது. 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...