Thursday, May 12, 2016

ஈழத் தமிழர்களும், பொது வாக்கெடுப்பும் (Referandum)

இலங்கைத்தீவின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக, ஈழத் தமிழர்களுக்கான அரசியல்தீர்வுக்கு வழிமுறையாக, பொதுஜன வாக்கெடுப்பின் (Referandum) சாத்தியப்பாடுகள்தொடர்பில் விவாதிக்க பன்னாட்டு பிரதிநிதிகள் அnமெரிக்காவுக்கு விரைகின்றனர்.

கொசவா, கிழக்கு தீமோர், தெற்குசூடான், ஆகிய பல்வேறு நாடுகளில் ஏற்பட்டிருந்த இனநெருக்கடிகளுக்கு தீர்வு முறையாக பொதுஜன வாக்கெடுப்பு அமைந்திருந்த நிலையில், இந்நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளடங்கலாக பன்னாட்டு பிரதிநிதிகள் பலர் அமெரிக்கா செல்கின்றனர்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டினை மையப்படுத்தி, எனும் கருப்பொருளில் இடம்பெற இருக்கின்ற கருத்தரங்கிலேயே இப்பிரதிநிதிகள் பங்கெடுக்க இருக்கின்றனர்.


Mr Alush Gashi (Kosova)(கொசவா), Mr Ladu, Jada Gubek (தெற்கு சூடான்), Mr Allain Nairn (கிழக்கு தீமோர்), Prof Matt Qvortrup (UK) (ஐக்கிய இராச்சியம்) Prof Manivannan (இந்தியா) ஆகியோர், பொதுஜன வாக்கெடுப்பு பொறிமுறையில் சிந்தனைத்திறனாளிகளாக அனைத்துலக மட்டத்தில் மதிக்கப்படுபவர்களாக உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது

இலங்கையில் அங்குள்ள தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஏற்பட பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த வாக்கெடுப்பு இலங்கையில் உள்ள தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நடத்தப்படவேண்டும். இதை கண்காணிக்க சுதந்திரமான சர்வதேச பார்வையாளர்கள் கொண்ட அமைப்பு இருந்தால்தான் இந்த வாக்கெடுப்பு நம்பிக்கை பெறும். ஏற்கெனவே இலங்கையில் தமிழர் பகுதியில் உள்ள இராணுவத்தை திரும்பப் பெற்று, அவர்களிடம் இருந்து கபளீகரம் செய்த நிலங்களையும், வீடுகளையும் ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முக்கியமானது.  அத்தோடு காணாமல் போனவர்கள், போரில் இறந்தவர்கள் குறித்து முழு விவரத்தையும் பொதுமக்களுக்கு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கான தேடல் பணியும் நடைபெறவேண்டும். போர் குற்றங்கள் குறித்து சர்வதேச சுதந்திரமான நம்பகமான விசாரணையும் நடத்தப்படவேண்டும். இதுதான் இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினையில் அணுகவேண்டிய முக்கிய விடயங்களாகும்.

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...