Saturday, May 14, 2016

"VOTE என்பதற்கு Voice of Tax payers Everywhere என்று பொருள். பல நாடுகளில் வரி செலுத்துவோருக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனை முறையாக பயன்படுத்துங்கள்!" என்பது போன்ற செய்திகள் சமூக ஆர்வலர்களால் பரப்பப்படுகிறது.

இதன்மூலம் இந்தியாவில் பெரும்பாலானோர் வரி செலுத்தாதவர்கள் என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது.

வரி இரண்டு வகைப்படும். நேர்முக வரி மற்றும் மறைமுக வரி.

நேர்முக வரியில் வருமான வரி, சொத்து வரி உள்ளிட்டவை அடங்கும். பெரும்பாலும் செல்வந்தர்கள் செலுத்தும் வரி இது.

மறைமுக வரியில் உற்பத்தி வரி, இறக்குமதி வரி, விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி, சேவை வரி ஆகியவை அடங்கும். நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும், சேவைகளும் இந்த வரி செலுத்தப்பட்ட பின்னரே நம்மை வந்தடைகின்றன. தெருவோர டீக்கடையில் டீ குடிப்பவரும், நகரப்பேருந்தில் பயணம் செய்வோரும்கூட இந்த வரியை செலுத்துகிறோம்.

செல்வந்தர்கள் செலுத்தும் நேர்முக வரிகளை ஏய்ப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. ஏழைகள் உட்பட அனைவரும் செலுத்தும் மறைமுக வரிகளை ஏய்ப்பதற்கான வழிகள் குறைவு.

இந்தியாவில் பிறக்கும் அனைவரும் மறைமுக வரிகளை செலுத்துகிறோம். இந்த மறைமுக வரிகள் நாட்டின் - அரசின் வரி வருமானத்தில் கணிசமான பங்கை வகிக்கிறது.

பொதுமக்களின் இந்த வரிப்பணத்தில்தான் அனைத்து அரசு திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

நமது வரிப்பணத்தை கையாளும் நபர்களை தேர்வு செய்யவே தேர்தல் நடைபெறுகிறது.

பொறுப்புணர்ந்து செயல்படுவோம்.

பி.கு: புகைப்படத்தில் இருப்பது சர்வதேச புகழ்பெற்ற நடிகை நந்தனா சென். அவருடன் இருக்கும் கிழம் யாரோ அமர்த்யா சென்னாம்.... நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணராம்... அதெல்லாமா நமக்குத் தேவை... நடிகை நந்தனா சென் அவர்களின் தந்தையாம் இவர்...! 

அதெல்லாம் சரி...! இந்த புகைப்படத்திற்கு இங்கு என்ன வேலை என்று கேட்கிறீர்களா...? அதுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்...!Thanks to Sundararaj

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...