Friday, February 28, 2020

நீதிபதிகள்

*நீதிபதிகள் *
——————
கடந்த 1970-'80  களில்  முக்கியமான சமூக நிகழ்வுகளில் விசாரணை நடத்தும் நீதிபதிகள் அன்றைய செய்திகள்களை படிப்பதை தவிர்த்து விடுவார்கள்
ஏனென்றால்  ஒரு  வேளை ஒரு  தலைப்பட்சமான செய்திகளை படிக்க நேரிட்டால் தங்கள் நடுநிலை பாதிப்படையலாம் என்ற முன்னெச்சரிக்கை உணர்வே.... என்ற விளக்கம் சொல்லப்படுவதுண்டு... ஆனால் நீதிபதிகளுக்கு அன்றாட நடப்புகள் தெரிய வேண்டும்.
அவசர நிலை காலத்தில்  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வீராசாமி அடையார் காந்தி நகர் வீடு. சோதனை இடப்பட்டது.எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நீதிபதி வி.ராமசாமியை உளவு பார்த்தாகவும் மயிலாப்பூர் கபாலீஸவர்ர் குளம் அருகே பின் தொடர்நத உளவுத்துறை அதிகாரி விரட்டப்பட்டார். நீதிபதி சத்ததேவ்,அரசு நில ஆர்ஜித வழக்கில்  பிறப்பித்த உத்தரவு பிரச்சனை அப்போது எழந்தது.பி.எச். பாண்டியன் சர்ச்சை என இப்படி பல நிகழ்வுகள்......

ஆனால் ஒரு தமிழக நீதிபதி நள்ளிரவு அமர்வில் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் உறுதிப்படுத்தப்படாத  செய்திகளை வைத்து தன்னிச்சையாக (?) ஆதாரமாக எடுத்துக்கொண்டு ஜனரஞ்சக உத்தரவுகளை பிறப்பித்ததார்..
எனக்கு சகாக்களக இருந்தவர்களும் சிலர் உயர்நீதி மன்ற நீதிபதிகள்தான். அவர்கள் வழக்கறிஞராக எப்படி புரிதலாக இருந்தார்கள் என்று நன்கு அறிவேன்.

 "not only justice must be done, but also seen to be done"

#நீதிபதிகள்

#kSRadhakrishnan_postings*
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 
28-02-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...